பவானியை லவ் பண்றீங்களா.. பிக்பாஸில் கோர்த்து விட்டு வேடிக்கை பார்த்த ராஜு பாய்

யுத்த களமா இருந்த பிக்பாஸ் வீட்டில் முதல் முறையாக காதல் என்ற வார்த்தையை கேட்க முடிகிறது. பிக் பாஸ் வீட்டில் எல்லா சீசனிலும் முதல் வாரமே லவ் என்ற ஒரு பேச்சு ஆரம்பித்துவிடும்.

ஆனால் இந்த சீசனில் மட்டும்தான் 50 நாட்களை கடந்தும் ஒரு காதல் கதையை கூட பார்க்க முடியவில்லை என்று ரசிகர்கள் புலம்பி வந்த நிலையில் தற்போது பிக்பாஸில் ஒரு லவ் ட்ராக் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் வீட்டில் ஹவுஸ் மேட்ஸ் அனைவரும் லிவிங் ஏரியாவில் அமர்ந்து கொண்டு பாட்டிலை சுற்றிவிட்டு ட்ரூத் ஆர் டேர் என்ற விளையாட்டை விளையாடுகின்றனர். பாட்டில் யாரை நோக்கி நிற்கிறதோ அவர்கள் மற்ற போட்டியாளர்கள் சொல்வதை செய்ய வேண்டும்.

அதில் முதலில் மாட்டிக் கொண்டவர் அக்ஷரா. அவரிடம் சிபி முதலில் இரண்டு அழுக்குத் துணிகளை துவைத்து வாருங்கள் என்று சொல்கிறார். ஏற்கனவே சிபியின் மேல் கொலை காண்டில் இருக்கும் அக்ஷரா முடியாது என்று முறைத்தபடி சொல்கிறார்.

பின்னர் விளையாட்டை தொடர்கின்றனர். அதில் ராஜு, அபிநயிடம் பவானியை லவ் பண்றீங்களா என்று ஏடாகூடமாக கேட்கிறார். இதனால் அதிர்ந்து போன அபிநய் என்னடா இப்படி கேக்குற என்று ராஜுவை பார்த்து சொல்கிறார். உடனே ராஜு அப்ப இல்லையா என்று எதிர் கேள்வி கேட்கிறார்.

இதற்கு பதில் அளிக்காமல் அமர்ந்திருக்கும் அபிநய் யை பார்த்து பவானி சிரித்துக் கொண்டிருக்கிறார். ஏற்கனவே திருமணமாகி குழந்தையுடன் இருக்கும் அபிநயிடம், ராஜு இவ்வாறு கேட்டுள்ளது சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஜு கொளுத்திப் போட்ட இந்த தீ காட்டுத் தீயாக பரவ போகிறது என்பதில் சந்தேகமில்லை. ஏற்கனவே பவானி, அபிநய் தன்னை இம்ப்ரஸ் செய்ய முயல்கிறார் என்று கூறியிருந்தார். தற்போது ராஜீவின் இந்த கேள்வியால் பிக்பாஸ் வீட்டிற்குள் நிச்சயம் ஒரு சண்டை இருக்கும். இந்த காதல் அபிநய் மனசுல இருக்கா? இல்ல ராஜ மனசுல இருக்கான்னு போக போக தெரியும். பிக் பாஸ் வீட்டில் இன்று

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்