பாக்கியலட்சுமி சீரியலில் என்ட்ரி கொடுக்கும் புது ஹீரோ.. டம்மி பீஸ் ஆகும் கோபி

விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகின்ற சீரியலுக்கு எப்போதுமே தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கின்றன. முக்கியமாக பாக்கியலட்சுமி சீரியல், குடும்பத்தில் உள்ள பெண்களின் மனதை தொடுகிற அளவுக்கு கதைகள் அமைந்து வருகின்றன. அந்த வகையில் பாக்கியலட்சுமி ஒரு தைரியமாகவும், எதிர்த்து போராடக்கூடிய கதாபாத்திரத்திலும் நடித்திருப்பார்.

அதனாலயே பெண்கள் ஆதரவு அதிகமாக இந்த நாடகத்திற்கு இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் இந்த சீரியலுக்கு பக்க பலமாக இருப்பது கோபி என்ற கேரக்டரை சொல்லலாம். இவர் தான் இந்த சீரியலில் வில்லன், நடிகர் மற்றும் காமெடியனாகவும் தோற்றத்தை மாற்றிக்கொண்டு கலக்கி வருகிறார். இதன் மூலம் இவருக்கு அதிகப்படியான ஃபேன்ஸ் கிடைத்திருக்கிறது.

Also read: மண்டையில இருந்த கொண்டையை மறந்த பாக்கியலட்சுமி.. கதை இல்லாமல் உருட்டும் விஜய் டிவி

அந்த அளவுக்கு கொடுக்கிற ஒவ்வொரு கதைக்கும் ஏற்ற மாதிரி எதார்த்தமாக ரசிக்கும்படி நடித்திருப்பார். இப்படி இவர்களை வைத்து இந்த சீரியல் சுவாரஸ்யமாக போய்க்கொண்டிருக்கும் நிலையில் வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் கலக்கிக் கொண்டு இருந்த ஒரு ஹீரோ மறுபடியும் இதில் என்ட்ரி கொடுக்கிறார். அவர் வேற யாருமில்லை நடிகர் ரஞ்சித்.

இவர் கதைப்படி பாக்கியலட்சுமிக்கு, தோள் கொடுக்கும் தோழனாக இருக்கப் போகிறார். இதனால் இன்னும் இந்த சீரியல் அதிக அளவில் சூடு பிடிக்க வாய்ப்பு இருக்கிறது. அத்துடன் இனிமேல் வரப்போகிற காட்சிகளில் இவர்கள் இருவருக்குமான கதைகள் தான் அதிக அளவில் இருக்கப் போகிறது. இனிமேல் கோபி டம்மி பீஸ் ஆகத்தான் இருக்க போகிறார்.

Also read: 500 எபிசோடு தாண்டி கிளைமாக்ஸ் எட்டிய விஜய் டிவியின் சூப்பர் ஹிட் சீரியல்.. திடீர் முடிவால் ஏற்பட்ட ஏமாற்றம்

ஏனென்றால் கோபியுடன் சீன்கள் கொஞ்சம் இல்ல ரொம்பவே கம்மியா ஆகப்போகுது. இதை அவரை சோசியல் மீடியாவில் கூறியிருக்கிறார். அதாவது இதுவரை இந்த நாடகத்திற்கு நீங்கள் கொடுக்கிற சப்போர்ட்டுக்கு ரொம்ப நன்றி. இனிமேலும் இதைத் தொடர்ந்து முழு ஆதரவையும் கொடுக்க வேண்டும் என்று கேட்டு கேட்டிருக்கிறார்.

அடுத்தபடியாக இனிமேல் என்னுடைய கதாபாத்திரம் அவ்வளவு முக்கியமாக இருக்காது என்று கூறி இருக்கிறார். இப்படி இவர் சொல்லும் விதத்தை பார்த்தால் இவரின் அடி மனதில் இருந்து சொன்னது போல் இல்லை. இவருக்கு ரஞ்சித் வந்ததால் இவருடைய முகத்தில் ஒருவித பொறாமை ஏற்பட்ட மாதிரி தெரிகிறது. மேற்கொண்டு இந்த கதை எப்படி அமையப்போவது என்று பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

Also read: எக்ஸ் பொண்டாட்டியால் வயிற்றெரிச்சலில் கோபி.. டிஆர்பிக்காக மீண்டும் சூடு பிடிக்கும் பாக்கியலட்சுமி

Sharing Is Caring:

அதிகம் படித்தவை