Serial Actor Sanjeev – Thalapathy Vijay: திருமதி செல்வம் என்னும் தொடரின் மூலம் குடும்ப தலைவிகளின் அதிக ஆதரவை பெற்றவர் தான் நடிகர் சஞ்சீவ். இவர் ஏற்கனவே மெட்டிஒலி மற்றும் ஆனந்தம் போன்ற பேவரட் சீரியல்களில் நடித்திருக்கிறார். மறைந்த நடிகை மஞ்சுளா விஜயகுமாரின் நெருங்கிய உறவினரான இவர், இணைந்த கைகள் மற்றும் பரம்பரை போன்ற படங்களில் நடித்த நடிகை சிந்துவின் தம்பி ஆவார்.
சஞ்சீவ்வின் நடிப்பு எல்லோருக்குமே ரொம்பவும் பிடிக்கும். அதே நேரத்தில் ரசிகர்கள் அதிகம் எரிச்சல் அடையும் ஒரு விஷயம் என்றால், இவர் தளபதி விஜய் பற்றி பேசுவது தான். விஜய் உடன் கல்லூரியில் பயின்ற இவர் அவருடைய நீண்ட நாள் நண்பராக இருக்கிறார். இது முதலில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டாலும் இப்போது விஜய் ரசிகர்களே கொலை காண்டு ஆகும் அளவிற்கு மாறிவிட்டது.
ஒரு விஷயத்தை எப்போதாவது பேசினால் தான் அது கேட்பதற்கு சுவாரசியமாக இருக்கும். ஆனால் சஞ்சீவ் எல்லா இடத்திலும் விஜய் பெயரை உபயோகிப்பது ரொம்பவும் எரிச்சல் அடையும் விஷயமாகத்தான் பார்க்கப்படுகிறது. தன்னை பற்றி பேசி அதன் மூலம் எந்த பிரச்சனையும் ஏற்பட்டு விடக்கூடாது என விஜய் இவரை எச்சரித்ததாக கூட செய்திகள் வெளியானது.
நடிகர் விஜய் உடன் இணைந்து இவர் பத்ரி மற்றும் மாஸ்டர் படங்களில் நடித்திருக்கிறார். சீரியல்களில் சஞ்சீவ் அப்படியே விஜய் மாதிரியே நடிப்பது உண்டு. அதே பழக்கத்தை இந்த இரண்டு படங்களில் செய்தபோது அது நன்றாக இல்லை. மாஸ்டர் படத்திற்கு பிறகு விஜய் ரசிகர்களாலேயே இவர் அதிகம் ட்ரோல் செய்யப்பட்டு இருக்கிறார்.
சன் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் வானத்தைப்போல சீரியலில் சஞ்சீவ் இப்பொழுது போலீஸ் கேரக்டரில் நடிக்கிறார். வீரசிங்கம் என்னும் கதாபாத்திரத்தில் நடிக்கும் இவர், அப்படியே தளபதி விஜய் தெறி படத்தில் நடித்த விஜயகுமார் கேரக்டரை காப்பி அடித்தது போல் நடித்துக் கொண்டிருக்கிறார். இது பார்ப்பதற்கே தர்ம சங்கடமாக இருந்த நிலையில், இணையவாசிகள் கண்ணில் பட்டு விட்டது.
சமூக வலைதளத்தில் நெட்டிசன்கள் இப்போது நடிகர் சஞ்சீவை வச்சு செய்து கொண்டிருக்கிறார்கள். ஓவர் ஆக்டிங் செய்வது மட்டுமில்லாமல் சஞ்சீவ் தன்னைத்தானே தளபதியாக நினைத்துக் கொண்டு இப்போது தளபதியாகவே மாறிவிட்டார், விஜய் இவருடன் காலேஜ் படித்ததே தப்பு என மீம்ஸ் மூலம் ட்ரோல் செய்து வருகிறார்கள்.