செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 22, 2024

விஜய் படத்துக்கே இப்படி ஒரு நிலைமையா.? கோட் பட விஷயத்தில் நெட்பிலிக்ஸ் எடுத்த அதிரடி முடிவு

Netflix Condition for GOAT Film: கோட் படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிலிக்ஸ்தான் வாங்கி உள்ளது. இந்த படத்திற்காக ஏற்கனவே போட்டி போட்ட சன் பிச்சர்ஸ்க்கு விஜய் கொடுக்கக் கூடாது என ஏ ஜி எஸ் நிறுவனத்திடம் கூறிவிட்டாராம். இதனால் இக்கட்டான நிலையில் ஏஜிஎஸ் இந்த படத்திற்கு வியாபாரம் பேசி வருகிறது.

சன் பிக்சர்ஸ் கோட் படத்திற்காக பிரம்மாண்ட ஆடியோ நிகழ்ச்சி நடத்தக் கூறியதாகவும். விஜய் இரண்டு மணி நேரம் பிரமோஷனுக்காக பேட்டி கொடுக்க வேண்டும் எனவும் கூறி இருக்கிறது. அதனால் விஜய் சன் பிக்சர்ஸ்க்கு கொடுக்க வேண்டாம் என அதிரடி முடிவை எடுத்து விட்டார்.

இப்பொழுது நெட்ப்ளிக்ஸ் இந்த படத்தின் ஓடிடி உரிமையை வாங்குவதாக அக்ரீமெண்ட் போட்டுள்ளது. ஆனால் அவர்களும் பல கண்டிஷன்களை போட்டு ஏஜி ஏஜிஎஸ் நிறுவனத்தை திக்கு முக்காட வைத்திருக்கிறார்கள். பொதுவாக ஓடிடியில் அந்த அளவிற்கு பெரிய லாபம் கிடைப்பதில்லை. அதனால் இந்த படத்திற்கு யாரும் பாதிக்காத அளவு விலையை நிர்ணயித்திருக்கிறது.

கோட் பட விஷயத்தில் நெட்பிலிக்ஸ் எடுத்த அதிரடி முடிவு

ஏஜிஎஸ் இதற்கு 90 கோடிகள் வரை டீல் பேசியிருக்கிறது . ஆனால் 75 கோடிகளில் விடாப்பிடியாய் இருக்கிறது நெட்பிலிக்ஸ் நிறுவனம். அப்படி வாங்கும் பட்சத்தில், படம் முழுவதும் எங்களுக்கு போட்டு காமிக்க வேண்டும். படத்தை பார்த்த பிறகு தான் இதற்கு உண்டான விலையை நாங்கள் பேசுவோம் என்றும் கட்டளை போட்டுள்ளது.

உச்ச ஹீரோ விஜய் படத்துக்கே இப்பொழுது நெட்பிலிக்ஸ் பல தடைகளை போட்டு வருகிறது. விஜய்க்கே இந்த நிலைமை என்றால் சின்ன சின்ன ஹீரோக்கள் படத்தை ஓடிடிட்டு நிறுவனம் இனிமேல் வாங்குமா என்பது பெரிய சந்தேகம்தான். எப்பொழுதுமே விஜய் படம் என்றால் போட்டிக்கு வரும் அமேசான் நிறுவனம் கூட இந்த படத்தை வாங்க முன்வரவில்லை.

- Advertisement -spot_img

Trending News