ரஜினியை மீறி நினைத்ததை சாதித்த நெல்சன்.. ஜெயிலரில் நண்பனுக்காக செய்த சம்பவம்

பீஸ்ட் விமர்சனத்தால் கதி கலங்கி போன நெல்சன் ரஜினியின் ஜெயிலர் படத்தை 100% வெற்றி படமாக கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில் நெல்சன் போஸ்டரில் சொதப்பினாலும் அதன் பிறகு ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்து வருகிறார்.

அதன்படி ஜெயிலர் படத்தில் ரஜினியின் லுக்கே வேற லெவலில் உள்ளது. அதுமட்டுமின்றி படத்தில் ஏகப்பட்ட திரை நட்சத்திரங்களை கொண்டு வந்துள்ளார். சிவராஜ்குமார், மோகன்லால், ரம்யா கிருஷ்ணன், தமன்னா என பல பிரபலங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். ரஜினியை பொறுத்தவரையில் தனது படத்தில் மற்ற ஹீரோக்களை நடிக்க வைக்க விரும்ப மாட்டார்.

Also Read : இமேஜ் பார்க்காமல் இணையும் 3 சூப்பர் ஸ்டார்கள்.. ஜெயிலர் வில்லனுக்காக ஓகே சொன்ன ரஜினி

ஆனால் ஜெயிலர் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக மற்ற மொழி சூப்பர் ஸ்டார்களை நடிக்க வைத்தார். ஆரம்பத்திலிருந்து சிவகார்த்திகேயன் ரஜினி படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் இருந்தார். மேலும் நெல்சன் மற்றும் சிவகார்த்திகேயன் இருவரும் நெருங்கிய நண்பர்களாக உள்ளனர்.

அதனால் எப்படியும் ஜெயிலர் படத்தில் சிவகார்த்திகேயனை நடிக்க வைக்க நெல்சன் முயற்சி செய்தார். ஆனால் ரஜினியோ திட்டவட்டமாக இந்த படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க கூடாது என கூறிவிட்டார். ஆனாலும் ரஜினியை மீறி நினைத்ததை சாதித்த உள்ளார் நெல்சன். அதாவது ஜெயிலரில் சிவகார்த்திகேயனின் பங்கு இருக்கிறது.

Also Read : விக்ரம் வசூல், லியோ பிசினஸ் மொத்தமாக அள்ளிய ஜெயிலர்.. சம்பவம் செய்யும் நெல்சன்

அனிருத் இசையில் உருவாகியுள்ள ஜெயிலர் படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு பாடல் எழுதியுள்ளாராம். ஏற்கனவே விஜய்யின் பீஸ்ட் படத்தில் இதே கூட்டணியில் ஒரு பாடல் உருவாகி சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. இப்போது ஜெயிலர் படத்திலும் வேற லெவலில் பாடல் உருவாகி உள்ளதாம்.

தனது படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க கூடாது ரஜினி கேட்டுக் கொண்ட நிலையில் நெல்சன் திட்டம் போட்டு காய் நகர்த்தி பாடல் வரிகளை எழுத வைத்துள்ளார். மேலும் முதல் சிங்கிளாக உருவாகியுள்ள இந்த பாடல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read : ரஜினி வில்லனை நோக்கி படையெடுக்கும் இயக்குனர்கள்.. முதல் ஆளாக முந்தி கொண்ட கே எஸ் ரவிக்குமார்

Next Story

- Advertisement -