மலைபோல் நம்பி இருந்த அட்லி பட ஹீரோவுக்கு விழுந்த மரண அடி.. படம் பார்க்கவும், வெளியிடவும் கூடாது என சர்ச்சை

atlee
atlee

அட்லி என்றாலே சர்ச்சைக்குப் பஞ்சமிருக்காது அந்த வகையில் தற்போது அட்லி பாலிவுட் ஹீரோக்களை வைத்து இயக்கும் அளவிற்கு சில வருடங்களிலேயே வேற லெவல் போய்விட்டார். எப்போது தமிழ் சினிமாவில் இயக்குவார் என்று ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கும் இந்த சூழ்நிலையில், அவர் படத்தில் நடித்த ஹீரோவுக்கு மிகப்பெரிய பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

நடிகர் ஷாருக்கான் இப்போது இயக்குனர் அட்லீயின் இயக்கத்தில் ஜவான் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். ஷாருக்கானுக்கு இப்போதுள்ள பெரிய நம்பிக்கை ஜவான் மற்றும் பதான் திரைப்படம் தான். ஏனென்றால் ஷாருக்கானுக்கு அடுத்தடுத்து தோல்வி படங்கள் அமைந்த நிலையில், மூன்று வருடங்களாக எந்த படமும் ரிலீஸ் ஆகவில்லை.

Also Read: அந்தரங்க உடையில் ஆட்டம் போட்ட நடிகை.. அட்லி கூட சேர்ந்த நேரமோ என்னவோ சர்ச்சையில் சிக்கிய ஷாருக்கான்

இந்நிலையில் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கு பிறகு வரும் ஜனவரி மாதம் 25 ஆம் தேதி இவருடைய நடிப்பில் பதான் படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் பாலிவுட் பிரபல நடிகை தீபிகா படுகோன் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். பட ரிலீஸை முன்னிட்டு இவர்கள் இருவரும் இடம்பெற்ற ‘பேஷரம் ரங்’ என்னும் பாடல் காட்சி வெளியானது.

இந்த பாடல் தான் இப்போது இந்த படத்திற்கு மிகப்பெரிய சர்ச்சையாக மாறியிருக்கிறது. இந்த பாட்டில் தீபிகா படுகோன் காவி நிற பிகினி உடை அணிந்து இருக்கிறார். இது காவி நிறத்தை அவமதிப்பது போலவும், இந்து மதத்தை புண்படுத்துவது போலவும் இருப்பதாக அரசியலை கட்சி தலைவர்களும், மத தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அயோத்தியின் ஹனுமன் காரி மட தலைவர் ராஜு தாஸ் பேசுகையில், இதுபோன்ற காட்சிகள் மத உணர்வை புண்படுத்துகின்றன. மதங்களை புண்படுத்தும் நோக்கத்தோடு எடுக்கப்படும் இதுபோன்ற திரைப்படங்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பதான் படம் எந்த தியேட்டரில் ரிலீஸ் ஆகிறதோ அந்த தியேட்டரை கொளுத்த வேண்டும் எனவும் சொல்லியிருக்கிறார்.

Also Read: பாலிவுட்டிலும் பெயரை கெடுத்து கொள்ளும் அட்லி.. முன்கூட்டியே விழித்துக் கொண்ட ஷாருக்கான்

மத்தியப் பிரதேச அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா பேசுகையில், மத உணர்வை புண்படுத்தும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்ட பதான் படத்தின் ரிலீசுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும், பொது மக்கள் இந்த படத்தை புறக்கணிக்க வேண்டும் என்றும் சொல்லியிருக்கார். இதேபோன்று பலதரப்பில் இருந்து பதான் படத்திற்கு எதிர்ப்புகள் கிளம்பியிருக்கின்றன.

சமீபத்தில் கொல்கத்தாவில் நடந்த சர்வதேச திரைப்பட விழா தொடக்க விழாவில் பேசிய ஷாருகான் இந்த பிரச்சனைக்கு பதிலளிக்கும் விதமாக, சமூக ஊடகங்களின் பார்வை இப்போது ரொம்பவும் குறுகியிருக்கிறது. சினிமா மீதான விமர்சனங்கள் படங்களை பாதிக்கின்றன. சினிமா மீதான நேர்மறை விமர்சனங்களை வளர்க்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.

Also Read: பாலிவுட்டிலும் வேலையை காட்டிய அட்லி.. விஜயகாந்த் படத்தால் ஷாருக்கானுக்கு வந்த பிரச்சினை

Advertisement Amazon Prime Banner