ஐஸ்வர்யாவுடன் ஒர்க் அவுட் செய்யும் நயன்தாராவின் எக்ஸ் காதலன்.. கொலவெறியில் தனுஷ்

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து செய்தி அறிவித்த பின்பு இருவருமே தங்களது பட வேலைகளில் பிஸியாக உள்ளனர். அதுவும் இதுவரை குடும்பத்தை பார்த்து வந்த ஐஸ்வர்யா தற்போது சினிமாவில் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார். இப்போது விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்தை வைத்து லால் சலாம் என்ற படத்தை எடுத்து வருகிறார்.

இந்நிலையில் ஐஸ்வர்யா தனது சமூக வலைத்தளத்தில் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். அதாவது தினமும் உடற்பயிற்சி மேற்கொண்டு தனது உடம்பை மிகவும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்கிறார். இன்று நயன்தாராவின் எக்ஸ் காதலனுடன் ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும் வீடியோவை ஐஸ்வர்யா பதிவிட்டுள்ளார்.

Also Read : அங்க போறீங்களா என வெற்றிமாறனுடன் மல்லு கட்டிய தனுஷ்.. வேறு வழி இல்லாமல் தொடங்கும் 2-ம் பாகம்

அதாவது நயன்தாரா ஆரம்பத்தில் பல சர்ச்சைகளில் சிக்கி வந்த நிலையில் கடந்த ஆண்டு விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். ஆரம்பத்தில் நயன்தாராவுடன் அதிகம் கிசுகிசுக்கப்பட்டவர் நடிகர் சிம்பு. இவர்கள் இருவரையும் இணைத்து வைத்து பத்திரிக்கையில் பல செய்திகள் வெளியானது.

அதன் பின்பு ஐஸ்வர்யா ரஜினிகாந்த், சிம்பு காதலிப்பதாக அந்த சமயத்தில் தகவல் வெளியானது. இவர்களது காதலுக்கு ரஜினி முட்டுக்கட்டை போடவே பிறகு தனுஷை காதலித்து ஐஸ்வர்யா திருமணம் செய்து கொண்டதாக நாளிதழ்களில் செய்தி வெளியானது. இப்போது ஐஸ்வர்யா நடன இயக்குனர் பிரபுதேவா உடன் ஜிம்மில் ஒர்க் அவுட் செய்துள்ளார்.

Also Read : ஆரம்பிக்கும் முன்பே ஏற்பட்ட மோதல்.. கேரியருக்காக 30 வருட நட்பை உடைத்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

பிரபுதேவாவும், நயன்தாராவும் காதலித்து வந்த நிலையில் திருமணம் செய்து கொள்ளும் அளவிற்கு சென்றது. பிரபுதேவாவின் முதல் மனைவி குடைச்சல் கொடுத்ததால் நயன்தாரா பிரபுதேவாவிடம் இருந்து பிரிந்து விட்டார். இப்போது பிரபுதேவா பல படங்களில் நடித்து வருகிறார். இந்த சூழலில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பிரபுதேவா உடன் ஒர்க்கவுட் செய்யும் பிட்னஸ் வீடியோவை தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டு, பிரபுதேவா ரப்பர் மேன் என்ற பதிவிட்டுள்ளார்.

மேலும் எங்களுக்குள் ஒரு அண்ணன் தங்கை பிணைப்பு இருந்து வருவதாகவும் அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். தனுசுக்கு அடுத்தடுத்த படங்கள் தோல்வியை தழுவி வருவதால் மன உளைச்சலில் உள்ள நிலையில் ஐஸ்வர்யா இது போன்ற வீடியோக்களை வெளியிட்டு கடுப்பேற்றி வருவதால் தனுஷ் செம காண்டில் இருப்பதாக அவரது நெருங்கிய வட்டாரத்தில் கூறப்படுகிறது.

Also Read : வலுக்கட்டாயமாக லிப் லாக் சீனில் நடித்த 3 நடிகைகள்.. எதிர்பாராமல் வச்சு செய்த தனுஷ்

Next Story

- Advertisement -