நயன்தாராவை கைது செய்ய வாய்ப்பு இருக்கா? மறைமுகமாக போட்டுக்கொடுத்த கஸ்தூரி

நேற்று யாரும் சற்றும் எதிர்பார்க்காத ஒரு பதிவை விக்னேஷ் சிவன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அதாவது கடந்த ஜூன் ஒன்பதாம் தேதி விக்னேஷ் சிவன், நயன்தாரா திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் அக்டோபர் 9 ஆம் தேதியே இவர்களுக்கு இரட்டை ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இவர்களுக்கு எப்படி குழந்தை பிறந்தது என்ற விஷயம் தெரியாமலே பலரும் இந்த ஜோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இதில் பல சினிமா பிரபலங்களும் நயன்தாரா, விக்னேஷ் சிவன் தம்பதியினருக்கு வாழ்த்துக்களை சொல்லி வருகிறார்கள்.

Also Read :பணமும், அழகும் தான் எங்களுக்கு முக்கியம்.. தமிழ் கலாச்சாரத்தை அழிக்கும் விக்கி-நயன்தாரா ஜோடி

இந்நிலையில் திருமணத்திற்கு முன்பே நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவரும் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள முடிவு செய்து ஏற்பாடு செய்துள்ளதாக பலரும் கூறி வருகிறார்கள். ஆனால் இந்த விஷயம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை தற்போது வரை விக்னேஷ் சிவன் வெளியிடவில்லை.

நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் போட்ட பதிவு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அதாவது ஜனவரி முதல் இந்தியாவில் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதாவது உடல் ரீதியாக குழந்தை பெற்றுக் கொள்ள முடியாதவர்கள் அல்லது அதிக வயதுடையவர்களினால் குழந்தை பெற்றுக்கொள்ள இயலாத காரணத்தினால் உள்ளவர்களுக்கு மட்டும் இதற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

Also Read :4 மாதத்திலேயே இரட்டை குழந்தைக்கு தாயான நயன்தாரா.. அதிர்ச்சியில் உறைந்த திரையுலகம்

ஆனால் இன்னும் சில நாட்களில் இது குறித்து ஏகப்பட்ட விஷயங்கள் வெளியே வரும் என கஸ்தூரி ட்விட் போட்டுள்ளார். இவ்வளவு நாள் இல்லாமல் தற்போது கஸ்தூரி இந்தப் பதிவை போட காரணம் நயன்தாராவை வம்பு இழுப்பதற்காக தான் என கூறப்படுகிறது. அதாவது நயன்தாராவுக்கு வயது அதிகமாக உள்ள காரணத்த அவரால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது.

இது சட்டரீதியாக இந்தியாவில் அனுமதிப்பது இல்லை என்றாலும் நயன்தாரா கைது செய்யப்படுவாரா என்று ஒரு தரப்பினர் கேள்வி எழுப்பி வருகின்றனர். கஸ்தூரி இந்த பதிவின் மூலம் நயன்தாராவை மறைமுகமாக போட்டுக் கொடுத்துள்ளார் என்பதுதான் உண்மை.

இதற்கு நயன்தாரா, விக்னேஷ் சிவன் ரசிகர்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு நிலவி வருகிறது. இதனால் அவர்கள் கஸ்தூரியை தாக்கி மோசமாக விமர்சித்து வருகிறார்கள். கஸ்தூரிக்கு சுத்தமாக சம்பந்தமே இல்லாத விஷயத்தில் தேவையில்லாமல் மூக்கை நுழைகிறார் என்று கிண்டல் அடித்து வருகிறார்கள்.

kasturi

Also Read :திரிஷா படத்தில் இணைந்த நயன்தாரா.. யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்

Next Story

- Advertisement -