காலில் விழுந்து சமாதானப்படுத்திய நயன்தாரா.. திருமணத்திற்கு பின் நடக்கும் எதிர்பாராத ட்விஸ்ட்

பல வருடங்களாக காதலித்து வந்த நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஜோடி கடந்த ஜூன் மாதம் ஒன்பதாம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஷாருக்கான், அட்லீ, சூர்யா, ஜோதிகா, விஜய் சேதுபதி என பல பிரபலங்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இந்நிலையில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமணத்தில் மிகுந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. இதில் முக்கியமான ஒன்றாக யாரும் புகைப்படங்கள் எடுக்க கூடாது என கூறப்பட்டிருந்தது. அதாவது பிரபல ஓடிடி நிறுவனமான நெட்ஃபிக்ஸ் இடம் நயன்தாரா 25 கோடிக்கு தனது திருமண வீடியோவை விற்றுள்ளார்.

யாரும் புகைப்படம் எடுத்தால் இணையத்தில் வெளியாகிவிடும் என்பதற்காக இவ்வாறு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. அதை தவிர முன்னணி நடிகர்களான விஜய், அஜித், சிவகார்த்திகேயன் போன்றோர்கள் நயன்தாராவின் திருமணத்தை தவிர்த்ததாக கூறப்படுகிறது. பேசிய தொகையை விட கம்மியாக தான் கொடுப்பேன் என்ற வாக்குவாதம் ஓடிடி நிறுவனுத்துடன் சென்று கொண்டிருந்தது.

இந்நிலையில் நெட்ப்ளிக்ஸ் திருமண வீடியோவை வெளியிட தாமதித்ததால் விக்னேஷ் சிவன் திருமணம் முடிந்து ஒரு மாதம் ஆன நிலையில் தனது சமூக வலைதளப் பக்கத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார். இந்த சூழ்நிலையில் விதியை மீறி விக்னேஷ் சிவன் செயல்பட்டதால் நயன்தாராயிடம் நெட்பிளிக்ஸ் 25 கோடியை திரும்ப கேட்பதாக செய்திகள் வெளியாகியிருந்தது.

நெட்பிளிக்ஸ் இடம் காலில் விழாத குறையாக நயன்தாரா தற்போது சமாதானம் படுத்தியுள்ளாராம், சமரசம் அடைந்துள்ளதாக தெரிகிறது. முதற்கட்டமாக தனது சமூக வலைத்தள பக்கத்தில் விக்னேஷ் சிவன், நயன்தாரா பிரீ போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.

nayanthara-vignesh-shivan-1
nayanthara-vignesh-shivan-1

இதனால் இவர்களுக்குள் பிரச்சனை சுமூகமாக முடிந்துள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் நயன்தாரா திருமண வீடியோவில் அவரது வாழ்க்கை பயணமும் இடம்பெற உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் மிக விரைவில் இதற்கான டைட்டில் மற்றும் ரிலீஸ் தேதியை நெட்பிளிக்ஸ் அதிகாரபூர்வமாக அறிவிக்க உள்ளது. இந்த வீடியோவை கௌதம்மேனன் தனது பாணியில் இயக்கியுள்ளார் என்பதுதான் இன்னும் சுவாரசியமான விஷயம்.

Next Story

- Advertisement -