10 வருடம் கழித்து முத்த மழையில் நயன்தாரா.. பகத் பாஸில், விக்கி ஜோடியின் வைரல் புகைப்படங்கள்

Nayanthara: சமீப காலமாக நயன்தாரா சோசியல் மீடியாவில் பயங்கர ஆக்டிவாக இருக்கிறார். பல கோடிகளில் சம்பளம் வாங்கி நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த அவர் இப்போது தொழிலதிபராகவும் கலக்கிக் கொண்டிருக்கிறார்.

ஏகப்பட்ட பிசினஸ்களில் செய்து வரும் அவர் தன் குடும்பத்தை கவனிக்கவும் மறக்கவில்லை. இரு குழந்தைகள் மற்றும் கணவருடன் அடிக்கடி வெளிநாடு ட்ரிப் அடிப்பது இவருக்கு பிடித்த பொழுதுபோக்காக இருக்கிறது.

nayan-nazriya
nayan-nazriya

அதேபோல் அப்போது எடுத்த போட்டோ வீடியோக்கள் அனைத்தையும் அவர் உடனுக்குடன் பதிவிட்டு விடுகிறார். அப்படித்தான் தற்போது அவர் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு தன் தோழியை சந்தித்துள்ளார்.

nayan-wikki
nayan-wikki

அந்த போட்டோக்கள் இப்போது வைரலாகி வரும் நிலையில் இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே என ரசிகர்கள் கூறி வருகின்றனர். அதன்படி எக்ஸ்பிரஷன் குயின் என கொண்டாடப்படும் நஸ்ரியாவை தான் நயன்தாரா சந்தித்துள்ளார்.

nazriya-nayan
nazriya-nayan

தோழியை சந்தித்த நயன்தாரா

ராஜா ராணி படத்தில் இவர்கள் இருவரும் நடித்திருந்தனர். அதன் பிறகு நயன்தாரா நம்பர் ஒன் இடத்தை நோக்கி நகர்ந்து விட்டார். நஸ்ரியா திருமணம் செய்து கொண்டு செட்டிலானார். தற்போது மீண்டும் அவர் ரீ என்ட்ரி கொடுத்து நடித்து வருகிறார்.

அவருடைய கணவர் பகத் பாஸில் தற்போது தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார். இந்த சூழ்நிலையில் விக்கி நயன் ஜோடி பகத் பாஸில் நஸ்ரியாவை சந்தித்துள்ளனர். அதில் நயன் நஸ்ரியாவை கட்டி அணைத்தபடி முத்தம் கொடுக்கும் போட்டோ க்யூட்டாக இருக்கிறது.

அவ்வளவு நெருங்கிய தோழிகளா நீங்கள்? இத்தனை நாள் தெரியவில்லையே என ரசிகர்கள் அந்த போட்டோவை பார்த்து கமெண்ட் கொடுத்து வருகின்றனர். மேலும் இரண்டு குயின்கள் எனவும் அவர்களை புகழ்ந்து தள்ளி வருகின்றனர்.

சோசியல் மீடியாவில் பிஸியாக இருக்கும் நயன்

Next Story

- Advertisement -