நிஜத்திலேயே ரெண்டு இல்ல, படத்துல 2வது இடமா.? கோபத்தில் டாப் ஹீரோவுடன் நடிக்க மறுத்த நயன்தாரா

நயன்தாரா சினிமாவில் நுழைந்ததில் இருந்து இப்பொழுது வரை லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை தக்க வைத்துக் கொண்டு முன்னிலையில் இருக்கிறார். அதே மாதிரி அதிக அளவில் சம்பளம் வாங்க கூடிய நடிகையாகவும் இருந்து வருகிறார். கல்யாணம் ஆன பிறகும் இவரது மார்க்கெட் குறையாமல் அப்படியே பெரிய அளவில் இருந்து வருகிறது. ஆனால் இப்பொழுது இவர் ஒரு டாப் ஹீரோடன் படத்தில் நடிக்க முடியாது என மறுத்துவிட்டார்.

மோகன்லால் நடிப்பில் ஜித்து ஜோசப் இயக்கி வரும் திரைப்படம் ராம். இதன் படபிடிப்பு சில பிரச்சனையின் காரணமாக மூன்று ஆண்டுகள் நிறுத்தி வைக்கப்பட்டது. அதனை அடுத்து இதற்கான படப்பிடிப்பு ஆகஸ்ட் 2022 ஆம் ஆண்டு மீண்டும் தொடங்கியது. இந்தப் படத்திற்கு விஷ்ணு சியாம் இசையமைக்கிறார்.

Also read: நயன்தாரா கெஞ்சியும் மதிக்காத லைக்கா.. சினிமா வளர்ச்சியில் ஏற்படும் சரிவுக்கு விழும் முதலடி.!

மேலும் இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் மோகன்லாலுக்கு ஜோடியாக த்ரிஷா நடித்து வருகிறார். இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக நயன்தாராவிடம் கேட்டுள்ளனர். ஆனால் இதற்கு இந்த கதாபாத்திரத்தில் நயன்தாரா நடிப்பதற்கு மறுத்துவிட்டார். இதற்கு காரணமாக கல்யாணம் ஆனதையும் மற்றும் இரண்டு குழந்தைகளை பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் மேலோட்டமாக கூறிவிட்டார்.

ஆனால் உண்மையான காரணம் இது இல்லை என்று தெரிகிறது. அந்த படத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக த்ரிஷா ஹீரோயினாக நடிப்பது தான். ஏற்கனவே விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்துவாக்குல இரண்டு காதல் என்ற படத்தில் நயன்தாராவுடன் த்ரிஷா நடிக்க இருந்தது. ஆனால் சில காரணங்களால் த்ரிஷாவிற்கு பதிலாக சமந்தா நடித்து விட்டார்.

Also read: விக்னேஷ் சிவனிடம் இருந்து கைநழுவி போன AK-62.. அஜித்தின் ஹிட் பட இயக்குனருக்கு வாய்ப்பு தரும் லைக்கா

இவர்களுக்குள் ஆரம்பத்தில் இருந்தே மறைமுகமான சண்டை நடந்து கொண்டுதான் வருகிறது. ஏனென்றால் த்ரிஷா ஒரு முன்னணி ஹீரோயினாக இருக்கும்பொழுது தான் நயன்தாரா சினிமாவிற்கு நுழைந்தார். இவர் வந்த பிறகு த்ரிஷாவை பின்னுக்கு தள்ளியதனால் இவர்களுக்குள் ஆரம்பத்திலிருந்து ஒத்துப் போகாமல் போய்விட்டது.

அதனாலேயே இவர்கள் எந்த படத்திலும் இணைந்து நடிப்பதை தவிர்த்து வருகின்றனர். இப்பொழுது மோகன்லால் படத்தில் த்ரிஷா நடிப்பதால் இவர் இரண்டாவது ஹீரோயின் லிஸ்டில் போய்விடுவார். இதனால் இவருக்கு மார்க்கெட் குறைந்து விடும் என்ற எண்ணத்தில் இந்த படத்தில் நடிக்க மறுத்துவிட்டார். இது முழுக்க முழுக்க திரிஷாவின் மேல் இருந்த கோபத்தினால் எடுத்த முடிவின் காரணமாக தான் இருக்கிறது.

Also read: ஹீரோக்களுக்கு நிகராக கல்லாவை ரொப்பிய 5 பெண் ஹீரோயின்கள்.. அதிர்ஷ்ட நாயகியாக மாறிய குந்தவை

Next Story

- Advertisement -