சிம்பு, நயன்தாரா இருவரும் ஒரு காலத்தில் காதல் ஜோடிகளாக வலம் வந்தது அனைவரும் அறிந்ததே. ஆனால் ஒரு சில காரணங்களால் இந்த காதல் பாதியிலேயே பிரேக்கப் ஆனது. அதன் பின்பு பல சர்ச்சைகளில் சிக்கிய நயன்தாரா ஒருவழியாக விக்னேஷ் சிவனை காதலித்து கரம் பிடித்து உள்ளார்.
ஆனால் தற்போதும் நயன்தாரா சென்டிமென்டில் தான் சிம்பு எல்லா விஷயங்களையும் செய்து வருகிறார். சிம்பு நடிப்பில் கடைசியாக வெளியான மாநாடு படத்தின் டீஸர் நேரமும், சிம்பு பிரமோஷனில் அமர்ந்திருந்த நாற்காலியும் சென்டிமென்டாக 9 ஆக இருந்தது.
அதேபோல் மாநாடு படமும் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் பெற்று வசூலில் வேட்டையாடியது. இதைத்தொடர்ந்து சிம்புக்கு ஏகப்பட்ட பட வாய்ப்புகளும் வரத்தொடங்கி உள்ளது. இந்நிலையில் ஒருமுறை சிம்பு நயன்தாராவுக்கு பட வாய்ப்பை விட்டுக் கொடுத்தும் அதை ஏற்க நயன்தாரா மறுத்துள்ளார்.
மணிரத்னம் இயக்கத்தில் அரவிந்த்சாமி, அருண் விஜய், சிம்பு, ஜோதிகா எனப் பல நட்சத்திரங்கள் நடித்து வெளியான திரைப்படம் செக்கச் சிவந்த வானம். முதலில் இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க நயன்தாரா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஆனால் சிம்பு நடிப்பதை அறிந்த நயன்தாரா இப்படத்தில் நடிக்க மறுப்பு தெரிவித்துவிட்டார். இதை அறிந்த சிம்பு நான் இப்படத்தில் இருந்து விலகிக் கொள்கிறேன் என கூறியுள்ளார். ஆனால் அப்போதும் தனக்கு நிறைய பட வாய்ப்புகள் இருக்கிறது என நயன்தாரா செக்கச் சிவந்த வானம் படத்தில் நடிக்க மறுத்துவிட்டார்.
நயன்தாரா உறுதியாகச் மறுத்துவிட்டதால் சிம்பு செக்க சிவந்த வானம் படத்தில் நடித்திருந்தார். தற்போதும் நயன்தாராவுக்கு உதவ வேண்டும் என்ற நல்ல மனதுடன் சிம்பு இருந்தாலும் எந்த சர்ச்சையிலும் மாட்டிக்கொள்ள வேண்டாம் என சிம்பு சம்பந்தப்பட்ட விஷயங்களை தவிர்த்து வருகிறார் நயன்தாரா.