நயன்தாரா கெஞ்சியும் மதிக்காத லைக்கா.. சினிமா வளர்ச்சியில் ஏற்படும் சரிவுக்கு விழும் முதலடி.!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுக்கு இருக்கும் மார்க்கெட்டை வைத்து தமிழ் சினிமாவையே வளைத்து விடலாம் என பலரும் கூறி வந்தனர். அது இப்போது பொய்த்து போகும் அளவிற்கு ஒரு சம்பவம் நடந்துள்ளது. அதாவது நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவனுக்கு அஜித் பட வாய்ப்பை பெற்று தந்தார்.

ஆனால் கடந்த சில நாட்களாக அஜித்தின் ஏகே 62 படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் விலகியதாக தகவல் வெளிவந்த வண்ணம் உள்ளது. இந்த படத்திற்காக வேறு இயக்குனர்களை லைக்கா நிறுவனம் தேர்வு செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இதற்கான அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என தெரிகிறது.

Also Read : அஜித்தை அக்குவேறு ஆணிவேராக அலசும் நயன்தாரா.. கணவருக்காக நடந்த ரகசிய மீட்டிங்

இப்போது நயன்தாரா ஏகே 62 படத்திலிருந்து விக்னேஷை தூக்க வேண்டாம் என்று லைக்கா மற்றும் அஜித்துக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அதுவும் லைக்காவிடம் இந்த வாய்ப்பை எப்படியாவது எங்களுக்கு கொடுங்கள் இல்லையென்றால் விக்னேஷ் சிவன் வாழ்க்கையே இருண்டு விடும் என்ற அளவுக்கு பேசி உள்ளாராம்.

அஜித் படத்திலிருந்து விக்னேஷ் சிவன் தூக்கப்பட்டார் என்ற விஷயம் வெளியில் தெரிந்தால் சோசியல் மீடியாவில் எங்களை ட்ரோல் செய்வார்கள் இதனால் நீங்கள் இந்த வாய்ப்பு மடும் தருமாறு கெஞ்சி கேட்டுள்ளார். ஆனால் லைக்கா நயன்தாரா பேசியதை பற்றி எதையுமே காதில் வாங்கவில்லையாம்.

Also Read : தரமான நடிகைக்கு தமிழ் சினிமாவில் ஏற்பட்ட பஞ்சம்.. நயன்தாரா முடிவால் திரிஷா காட்டில் வெளுத்து கட்டும் மழை

மேலும் விக்னேஷ் சிவன் ஏகே 62 படத்தில் இருந்து தூக்குவதில் லைக்கா உறுதியாக இருப்பதாக தெரிகிறது. ஆகையால் மிகுந்த அப்செட் ஆன நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் திருமண வாழ்க்கையில் முதல் பெரிய அடியை வாங்கியுள்ளார்கள் என தற்போது கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்ட வருகிறது.

ஏனென்றால் திருமணத்திற்கு பிறகு விக்னேஷ் சிவனுக்கு அடுத்தடுத்த பெரிய வாய்ப்புகள் கிடைத்து வந்தது. அதேபோல் தான் நயன்தாராவுக்கும் பாலிவுட்டில் ஷாருக்கானுக்கு ஜோடியாக ஜவான் படத்தில் நடித்து வருகிறார். இந்த சூழலில் யாரும் எதிர்பார்க்காத விதமாக விக்னேஷ் சிவனுக்கு அஜித் பட வாய்ப்பு பறிபோய் உள்ளது.

Also Read : திருமணத்திற்கு பிறகு ஜெயம் ரவியுடன் ஜோடி போடும் நயன்தாரா.. ட்ரண்டாகும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்

Next Story

- Advertisement -