வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

விக்கி எடுத்த ஹாட் புகைப்படத்தை வெளியிட்ட நயன்.. செம்ம கேர் ஆகுதே

ஏழு வருடங்களாக காதலித்த லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் கடந்த ஜூன் 9-ஆம் தேதி சென்னையில் உள்ள பிரைவேட் ரெசாட்ஸ் ஒன்றில் கோலாகலமாக திருமணம் செய்துகொண்டனர். இதைத்தொடர்ந்து விக்கி-நயன் தம்பதியர் திருப்பதிக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு, அதன் பிறகு நயன்தாராவின் சொந்த ஊரான கேரளா சென்று தடபுடல் விருந்துக்கு சென்றனர்.

இதைத்தொடர்ந்து ஹனிமூனுக்கு தாய்லாந்து சென்றிருக்கும் விக்கி-நயன், அங்கு எடுக்கும் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டு ட்ரெண்டாக்கி கொண்டிருக்கின்றனர். இந்த புகைப்படத்தை பார்த்தாலே இவர்கள் எவ்வளவு சந்தோசமாக இருக்கிறார்கள் என்பதை ரசிகர்கள் புரிந்து கொள்ளும் வகையில் செம க்யூட்டான இருக்கின்றது.

இந்த புகைப்படங்களில் நயன்தாரா மாடர்ன் உடையில் இருந்தாலும் தன்னுடைய கழுத்தில் மஞ்சள் தாலி கயிறை மட்டுமே அணிந்து புது பொண்ணு போலவே தெரிகின்றார். அத்துடன் திருமணத்தின் போது கையில் கட்டப்பட்ட காப்பு கயிற்றையும் இன்னும் அகற்றாமல் இருக்கிறார்.

அதிலும் தற்போது நயன்தாரா வெளியிட்டிருக்கும் புகைப்படத்தில் கல்யாணம் ஆன பிறகும் கிளாமர் தூக்கலாக இருக்கும் வகையில் தொப்புள் தெரியும் உடையில், அவர் மட்டும் தனியே நடந்து செல்வது போல் எடுத்திருக்கும் செல்பி புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கண்டமாகி உள்ளனர்.

ஏற்கனவே நயன்தாரா இனி திருமணத்திற்கு பிறகு நடிக்கும் படங்களில் கவர்ச்சி உடை, கதாநாயகர்களுடன் நெருக்கமாக நடிப்பது, முத்தக்காட்சி போன்றவை இருக்கக் கூடாது என்ற விதிமுறைகளை படத்தின் இயக்குனரிடம் நயன்தாராவின் கணவரான விக்னேஷ் சிவன் கண்டிப்பாக தெரிவிக்கப் போவதாக தகவல் வெளியானது.

nayan-honeymoon-photo-cinemapettai
nayan-honeymoon-photo-cinemapettai

இந்நிலையில் நயன்தாரா ஹனிமூன் சென்ற இடத்தில் விக்கியை கழட்டிவிட்டு, அவர் மட்டும் தனியே இப்படி ஒரு ஹாட் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ‘திருமணத்திற்கு பிறகும் நான் நானாகவே தான் இருப்பேன். யாரும் என்னை கட்டுப்படுத்த முடியாது’ என சிங்கிளாக நின்றிருக்கும் போட்டோவை வெளியிட்டிருக்கிறார். இந்த புகைப்படத்தில் விக்கி தான் எடுத்திருக்க வேண்டும் நயன்தாராவின் இந்த கவர்ச்சி புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகமாக ஷேர் ஆகி வருகிறது.

nayan-honeymoon-photo1-cinemapettai
nayan-honeymoon-photo1-cinemapettai
- Advertisement -

Trending News