சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

பிசினஸில் இறங்கிய தேசிய விருது நடிகை.. சினிமா இனிமேல் சைடு பிசினஸ் தான் போல

பொதுவாக திரைத்துறையில் நடிக்கும் நடிகர் மற்றும் நடிகைகள் படங்களில் நடிப்பதோடு பிரத்யேகமாக ஏதாவது ஒரு பிசினஸ் செய்து வருவது வழக்கம்.

அந்த வகையில், சமீபத்தில் இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளியான அவன் இவன் படம் மூலம் பிரபலமான நடிகை ஜனனி, இணையதளம் மூலம் ஆடைகளை விற்பனை செய்யும் புதிய வியாபாரத்தை தொடங்கினார். இவர் மட்டுமின்றி பல நடிகைகளும் புதிதாக பிஸினஸ் செய்து வருகின்றனர்.

தற்போது அந்த வரிசையில் நடிகை கீர்த்தி சுரேஷும் புதிதாக இணைந்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கில் புதிய படங்களில் ஒப்பந்தமாகி மிகவும் பிஸியாக நடித்து வருகிறார். தமிழில் செல்வராகவனுடன் சாணி காயிதம், ரஜினி நடிக்கும் அண்ணாத்த ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார்.

இதே போல்,தெலுங்கில் மகேஷ் பாபுவுடன் சர்காரு வாரி பட்டா படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்ததாக தெலுங்கில் ரீமேக்காகும் அஜித் நடித்த வேதாளம் படத்தில் ஹீரோ சிவஞ்சீவிக்கு தங்கையாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இவ்வளவு பிசியாக நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் தற்போது புதிதாக பிசினஸ் ஒன்றையும் தொடங்கியுள்ளார்.

கடந்த சில நாட்களாக இதுகுறித்து கீர்த்தி சுரேஷ் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உங்களுக்கு ஒரு குட் நியூஸ் காத்திருக்கு என்று தனது ரசிகர்களுக்கு மறைமுகமாக பதிவுகளை வெளியிட்டு வந்தார். தற்போது தான் அது கீர்த்தி சுரேஷ் தொடங்கும் புதிய பிசினசிற்கான விளம்பரம் என தெரியவந்துள்ளது.

முழுக்க முழுக்க இயற்கை முறையில் தயாரான அழகு சாதன பொருட்களை கீர்த்தி சுரேஷ் விற்பனை செய்யப்படுவதாக உள்ளார். பூமித்ரா என்று தனது இயற்கை அழகு பொருட்களுக்கு பெயரிட்டுள்ளார். டிசைனர் ஷில்பா ரெட்டி மற்றும் தொழிலதிபர் காந்தி தத் ஆகியோருடன் இணைந்து இந்த தொழிலை கீர்த்தி சுரேஷ் தொடங்கி உள்ளார்.

keerthy suresh
keerthy suresh

இதற்காக பிரத்யேக இணையதளம் ஒன்றையும் கீர்த்தி சுரேஷ் துவங்கி உள்ளார். அதன்படி www.bhoomitra.store என்ற இணையதளத்தில் வாடிக்கையாளர்கள் இந்த பொருட்களை ஆர்டர் செய்து கொள்ளலாம் என கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

Trending News