Connect with us

Cinemapettai

நாசர் ஹீரோவாக நடித்து மாபெரும் வரவேற்பை பெற்ற 5 திரைப்படங்கள்.. ஒவ்வொரு படமும் வேற லெவல்!

nasser-cinemapettai

Entertainment | பொழுதுபோக்கு

நாசர் ஹீரோவாக நடித்து மாபெரும் வரவேற்பை பெற்ற 5 திரைப்படங்கள்.. ஒவ்வொரு படமும் வேற லெவல்!

தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 100 படங்களுக்கு மேல் நடித்தவர் நாசர். அன்றைய காலகட்டத்தில்  ஒரே நாளில் பல படங்கள் நடித்த நடிகர்களில் நாசரும் ஒருவர் அந்த அளவிற்கு பிஸியாக பல படங்கள் நடித்து வந்தார். நாசர் மற்றும் வடிவேல் கூட்டணியில் வெளியான விரலுக்கேத்த வீக்கம் மற்றும் எம்டன் மகன் போன்ற படங்களில் இவர்களது காமெடி அனைத்துமே ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்தன.

தற்போது வரை பல படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்து வரும் நாசர் ஆரம்பகாலத்தில் மற்ற நடிகர்களை போல இவரும் ஹீரோவாக பல படங்கள் நடித்துள்ளார். ஹீரோவாக அவர் வெற்றி கண்ட படங்களில் ஒரு சிலவற்றை மட்டும் பார்ப்போம்.

மாயன்: மாயன் என்ற படத்தில் நாசர் மாயன் எனும் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடம் ஓரளவிற்கு வரவேற்பைப் பெற்றார். இப்படத்தில் ரேவதி, ரோஜா, வடிவுக்கரசி மற்றும் வடிவேலு போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படத்தில் நாசரின் முகத்தில் இருக்கும் மீசையை வடிவேலுவிடம் ஜமீன்தாராக இருக்கும் பால சிங் எடுக்கச் சொல்வார்.

அப்போது வடிவேல் நாசரை பார்த்து பயந்தபடியே மாயன் ஐயா மீசை உங்க மூஞ்சி அழகுதா ஐயா, இந்த கத்தி என்னுடையதுதா ஆனா இந்த கை ஜமீன்தார் உடைய தான் நினைச்சு மீசையை எடுத்து கொய்யா என கெஞ்சுவார். இப்படத்தில் இந்த சீன் பெருவாரியான ரசிகர்களிடம் பாராட்டைப் பெற்றது.

மாயன் படத்தைப் பார்க்க

வரவு எட்டணா செலவு பத்தணா: நாசர், ராதிகா, கவுண்டமணி, செந்தில், மற்றும் வடிவேலு போன்ற அசத்தலான கூட்டணியில் உருவாகி மாபெரும் வெற்றி திரைப்படம் வரவு எட்டணா செலவு பத்தணா. இப்படத்தில் கவுண்டமணி அஞ்சாத சிங்கம் மருதுபாண்டியாக நடித்திருப்பார். வினுசக்கரவர்த்தி அரசியல்வாதியாக கலக்கியிருப்பார்.

varavu ettana selavu pathana

varavu ettana selavu pathana

அப்போது கூட்டத்திலிருந்து வடிவேலு வினு சக்கரவர்த்தியின் மீது செருப்பை தூக்கி எறிவார். அப்போது கவுண்டமணி எவன்டா எம்எல்ஏ வ செருப்பால அடிச்சவன் என கேட்பார், தைரியம் இருந்தால் இன்னொரு செருப்பால அடி டா பார்ப்போம் என சொல்லுவார் மீண்டும் ஒரு செருப்பு வந்து நின்னு சக்கரவர்த்தியின் மீது விழும் அதற்கு வினு சக்ரவர்த்தி யோ என்ன செருப்படி வாங்குவதற்கு இங்க கூட்டிட்டு வந்தியா என கேட்கும் வசனமெல்லாம் அவ்வளவு எளிதில் ரசிகர்களால் மறந்துவிட முடியாது அந்த அளவுக்கு இப்படத்தின் ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

வரவு எட்டணா செலவு பத்தணா படத்தைப் பார்க்க

அவதாரம்: நாசர் இயக்கத்தில் மற்றும் நடிப்பில் வெளியான திரைப்படம் அவதாரம். இப்படத்தில் ரேவதி, ஸ்ரீவித்யா மற்றும் டெல்லி கணேஷ் போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படத்தின் மூலம் நாசர் தனக்குள் இருக்கும் இயக்குனர் அவதாரத்தை வெளிப்படுத்தியிருப்பார்.

கண்ணு தெரியாத பெண்ணாக நடித்திருக்கும் ரேவதியை யாரோ ஒருவரால் கொலை செய்யப்பட்டு இருப்பார். அதற்கு நாசர் தான் காரணம் என போலீசார் கைது செய்துவிடுகின்றனர். அதன்பிறகு நாசர் யார் கொலை செய்தார் என்பதை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் தான் குற்றவாளி என்பதை என நிரூபித்து விடுதலை எப்படி பெறுகிறார் என்பது தான் படத்தின் கதை.

அவதாரம் படத்தைப் பார்க்க

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை: நாசர், ரோஜா, குஷ்பு, வடிவேலு மற்றும் விவேக் ஆகியோர் கூட்டணியில் உருவாகி வெற்றி பெற்ற திரைப்படம் தான் கூடி வாழ்ந்தால் கோடி நன்மை. இப்படத்தில் வடிவேலு மற்றும் விவேக் செய்யும் காமெடிகள் எல்லாம் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது.

koodi vazhnthal kodi nanmai

koodi vazhnthal kodi nanmai

குறிப்பாக வடிவேலு அரசியல்வாதி என்பதால் அவரை ஈஸியாக ஏமாற்ற விவேக் வடிவேலு மிகச்சிறப்பாக புகழ்ந்து தள்ளுவார். அதில் ஒரு காட்சி தான் இது அதாவது வடிவேலு பார்த்து விவேக் ஒரு கோடி தமிழ் மக்களுக்கு தலைவன் நீ அதற்கு வடிவேலு உண்மை, தமிழ்நாட்டின் விடிவெள்ளி பாயிண்ட், உலக அரசியலின் மாமேதை என வடிவேலுவை புகழ்ந்து தள்ளி ஏமாற்றி விடுவார் விவேக். இந்த காமெடி எல்லாம் படத்தின் வெற்றிக்கு பக்கபலமாக அமைந்தது.

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை படத்தைப் பார்க்க

அருவா வேலு: அருவா வேலு என்ற படத்தின் தலைப்பிற்கு ஏற்ப நாசருக்கு இப்படத்தில் வேலு எனும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இப்படத்தில்ஊர்வசி ஆனந்தராஜ், நெல்லை சிவா மற்றும் சிங்கமுத்து போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படத்தில் நாசர் வில்லன் கலந்த நல்லவனாக நடித்திருப்பார். இப்படத்தில் வரும் வசனங்கள் மற்றும் காட்சிகள் அனைத்துமே நாசர் நடிப்பில் அசர வைத்திருப்பார்.

அருவா வேலு படத்தைப் பார்க்க

மேற்கண்ட படங்களை தவிர நாசர் மேலும் சில படங்களில் ஹீரோவாக நடித்து வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
To Top