தமிழ்நாட்டில் தொடர்ந்து ஆசிரியர் மீதான குற்றச்சாட்டு அதிகரித்து வருகிறது. அதற்கு பல தரப்பினரும் பல்வேறு விதமான கருத்துக்களை கூறி வருகின்றனர். சமீபத்தில் பிஎஸ்பிபி பள்ளி ஆசிரியர் அரைகுறை ஆடையுடன் ஆன்லைனில் மாணவர்களுக்கு வகுப்பு நடத்தினார்.
அதுமட்டுமில்லாமல் மாணவிகளிடம் ஆபாசமான கேள்விகள் கேட்பது மெசேஜ் செய்வது போன்ற கேவலமான செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனை மாணவிகள் பள்ளி நிர்வாகத்திடம் கூறியும் எந்த நடவடிக்கை எடுக்காததால் வெளிப்படையாக கூறி தற்போது அது பெரிய பிரச்சனையாக உருவாகி விட்டது. தற்போது அந்த ஆசிரியரை போக்சோ சட்டத்தின் 5 வழக்குகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ஒரு தரப்பினர் ஆசிரியர் மீது குறை கூறினாலும், மற்றொரு தரப்பினர் மாணவிகள் மீதும் குறை கூறி வருகின்றனர். நாராயணன் சுந்தரம் அவரது சமூக வலைத்தள பக்கத்தில் ஆசிரியர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காதீர்கள். இந்த காலத்தில் மாணவிகள் யாரும் சிறுவர்கள் கிடையாது.

அவர்களுக்கு எல்லா விஷயமும் தெரியும். அதுமட்டுமில்லாமல் நெட்பிளிக்ஸ் அடல்ட் மூவி பார்க்கிறார்கள். அப்படி இருக்கும்போது எது சரி தவறு என்று கூட தெரியாதா என கூறியுள்ளார்.
இதற்கு ஒரு தரப்பினர் சரிதான் தவறு நடப்பதற்கு முன்பே மாணவிகள் இதனை வெளியே கூறியிருந்தால் அப்போதே அந்த ஆசிரியர் கண்டிக்க பட்டிருப்பார் எனக் கூறி வருகின்றனர்.
ஆனால் ஜூலி அந்த ஆசிரியரை சரமாரியாக திட்டியுள்ளார். அதாவது நீ எல்லாம் மனுச ஜென்மம் தான, உனக்கு எல்லாம் சார் பட்டம் வேற, அவன் என் கையில் கிடைத்தால் அடித்தே கொன்று விடுவேன் என ஆவேசமாக பேசியுள்ளார். ஒரு சில ரசிகர்கள் ஜூலியை யும் திட்டி வருகின்றனர்.