ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

ஒரு நல்ல செய்தி, ஒரு கெட்ட செய்தி கூறிய பாக்கியலட்சுமி ராதிகா.. சீரியலை விட்டு விலகிய முக்கிய காரணம்!

தொலைக்காட்சியில் சீரியலுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது ஒவ்வொரு சீரியலும் ஒரு தனி சிறப்பை கொண்டுள்ளதாகவும் அந்த வகையில் சீரியலில் நடிக்கும் ஒவ்வொரு கதாபாத்திரமும் தனித்துவத்தை கொண்டிருக்கும்.

அந்த கதாபாத்திரத்தில் நடிப்பவர் ஏதாவது ஒரு காரணத்தினால் நடிப்பை தொடர முடியாமல் போனால் அது ரசிகர்களுக்கு இடையே பெரும் வருத்தத்தை ஏற்படுத்தும். விலகியதற்கான காரணத்தை தெரிந்து கொள்வதில் ரசிகர்களுக்கு ஆர்வம் அதிகமாக ஏற்படும். பாக்கியலட்சுமி தொடர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மக்களிடையே அதிக வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் ராதிகா கதாபாத்திரத்தில் நடிக்கும் ஜெனிஃபர் விலகியதன் காரணம் இப்பொழுது தெரிந்துள்ளது. ராதிகாவாக வரும் நந்திதா ஜெனிஃபர் தமிழ் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருபவர் 2002ஆம் ஆண்டு வெளிவந்த “ஏய் நீ ரொம்ப அழகா இருக்க” திரைப்படத்தில் “யாமினி யாமினி” என்ற பாடலில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பார்.

பின்னர் 2003ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் “ஈரநிலம் “என்ற திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது. சின்னத்திரை வெள்ளித்திரை என்று வலம் வருபவர் நந்திதா ஜெனிஃபர். தற்போது பாக்கியலட்சுமி தொடரில் நடித்துக் கொண்டிருந்தார்.

இப்பொழுது பாக்கியலட்சுமி தொடரில் இருந்து விலகி விட்டார் அவர் தொடரை விட்டு விலகி இதற்கு இரண்டு காரணங்களை தெரிவித்திருக்கிறார். முதலில் கூறிய காரணம் ராதிகா கதாபாத்திரம் அடுத்தடுத்து எதிர்மறையான கோணத்தில் சித்தரிக்கப்பட்டு இருப்பதாக தான் விலகுகிறேன் என்று கூறியிருந்தார்.

இரண்டாவதாக கூறும் காரணம் தான் நமக்கு மகிழ்ச்சியான தகவல் ஆகும். ஜெனிபருக்கு ஏற்கனவே ஒரு அழகிய மகன் இருக்கிறார். தற்போது அவர் இரண்டாம் கர்ப்பமாக இருக்கிறார். அவர்கள் பெண் குழந்தை எதிர்பார்த்து இருப்பதாக ஒரு பதிவில் வெளியிட்டார். அவர்களுக்கு ஒரு அழகான இளவரசி பிறப்பதற்கு நாமும் இறைவனிடம் பிரார்த்திப்போம்.

bhagyalaxmi
bhagyalaxmi
- Advertisement -

Trending News