புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

அப்பத்தா கேட்ட கேள்விக்கு நந்தினி கொடுத்த பதிலடி.. அதிர்ச்சியில் குணசேகரனின் அம்மா

எல்லோரும் ஆவலாக எதிர்பார்த்த ஆதிரையின் நிச்சயதார்த்தத்திற்கு குணசேகரன் வீட்டில் அனைவரும் ரெடியாகி இருந்த நிலையில் ஆதிரை அவருடைய அம்மா காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக் கொள்கிறார். கிளம்பும் நேரத்தில் கதிர் இந்த நிச்சயத்திற்கு நான் வர முடியாது என்று சொல்லி குணசேகரனுக்கு எதிராக பேசுகிறார். இதை பார்த்த குணசேகரன் நீங்களே எல்லாரும் நிச்சயதார்த்தத்துக்கு போங்க. நானும் வரமாட்டேன் என்று அமக்களம் செய்து வீட்டில் இருக்கும் பெண்கள் அனைவரையும் அனுப்பி வைக்கிறார்.

பிறகு ஒரு வழியாக அங்கிருந்து கிளம்பிய பெண்கள் அனைவரும் காரில் ரொம்பவும் மூஞ்சி தொங்க போட்டு ஏதோ பறி கொடுத்தது போல் இருந்தார்கள். இதை பார்த்து அப்பத்தா நம் வீட்டில் நடக்கும் நல்ல விஷயத்திற்கு சந்தோஷமாக இருக்காமல் ஏன் இவ்வளவு சோகமாக இருக்கிறீர்கள் என்று கேட்க அதற்கு விசாலாட்சி நடக்கிறது எல்லாம் பார்த்தா சந்தோஷமா இருக்க முடியுமா என்று ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார்.

Also read: எஸ் கே ஆர் பொண்டாட்டினா வாயை பிளக்கும் குணசேகரன்.. மெண்டல் என லெப்ட் அண்ட் ரைட் வசை பாடிய எக்ஸ் லவ்வர்

அதற்கு அப்பத்தா நீ எதுவும் நினைச்சு கவலைப்படாத நம்ம போன பிறகு கண்டிப்பா அவர்கள் வருவாங்க என்று கூற அதற்கு விசாலாட்சி இந்த கதிர் பையன் ஏன் இப்படி பண்ற என்று கேட்க அப்பத்தா அவன் மட்டுமா அப்படி பண்றான் குணசேகரன் தான் இதற்கெல்லாம் முக்கிய காரணம் என்று கூறுகிறார். உடனே விசாலாட்சி அவன் என்ன அமைதியாக தானே இருக்கிறான் என்று சொல்ல உடனே நந்தினி அவரு அமைதியா இல்ல மனசுக்குள்ளே ஒரு கணக்கு போட்டு நடித்துக் கொண்டிருக்கிறார் என்று அவரைப் பற்றி சொல்கிறார்.

அதற்கு அப்பத்தா நான் தான் அவன் கேட்டபடி 40% சொத்து கொடுக்கிறதா முடிவு பண்ணிட்டேனே அப்புறம் ஏன் அவன் எப்படி யோசிக்கணும் என்று கேட்க உடனே நந்தினி நீங்க சொன்னபடி எல்லாம் செஞ்சிடுவீங்களா என்ன எதிர்மறையாக அப்பத்தாவை பேசுகிறார். அடுத்தபடியாக அனைவரும் நிச்சயதார்த்தத்திற்காக மண்டபத்திற்கு போய்க் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இவர்களுக்கு முன்னாடியே இந்த வீட்டின் சம்மந்தியர்கள் அங்கே இருந்து குணசேகரன் குடும்பத்தை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

Also read: கதிரை மட்டம் தட்டிய குணசேகரன்.. எரிகிற நெருப்பில் எண்ணெயை ஊற்றிய நந்தினி

அப்பொழுது ஈஸ்வரியின் அப்பா ஏதோ கண்ணால் பார்த்தது போல முதலில் இந்த வீட்டில் பெண்கள் மட்டும் வருவார்கள். பின்னாடி தான் குணசேகரன் மற்றும் அவன் தம்பிகளும் வருவாங்க இது காலங்காலமாக நடக்கிற விஷயம் தான் என்று கிண்டலடித்து கொண்டிருக்கிறார்கள். பிறகு அங்க வந்த குணசேகரன் குடும்பம் இவர்களைப் பார்த்து பேசிய போது ஈஸ்வரி அப்பா கொஞ்சம் ஓவராகவே அனைவரையும் சீண்டுகிறார்.

அதுவும் அப்பத்தாவை நக்கலாக குத்தி காட்டி பேசுகிறார். ஏனென்றால் அந்த 40% சொத்து சொந்த உறவுக்காக தாரவாத்து கொடுக்கிறார் என்ற ஒரு ஆதங்கத்தை வெளிக்காட்டுகிறார். என்ன இருந்தாலும் தான் நாடாவிட்டாலும் தசை ஆடும் என்று சொல்வார்கள் அது உண்மைதான். உங்களுக்கு இதுவரை ஆதிரை எந்த ஒரு விஷயத்திலும் கவனித்ததே இல்லை. அதை ஒவ்வொன்றும் அழகாக பார்த்து பார்த்து செய்தவர்கள் இந்த வீட்டின் மருமகள் தான். ஆனால் பிரச்சனை என்று வரும்போது ரத்த பாசம் உங்களை இந்த அளவுக்கு மாற்றுகிறது என்று தாக்கி பேசுகிறார். ஆனாலும் இதெல்லாம் பொருட்படுத்தாமல் அப்பத்தா நக்கலாக சிரித்த முகத்துடன் எங்கள் வீட்டு பங்க்ஷனுக்கு வந்திருக்கிறீர்கள் வாருங்கள் என்று வரவேற்கிறார்.

Also read: குணசேகரனை மடக்கிய எஸ் கே ஆர் தம்பிகள்.. இவரை மிஞ்சும் அளவிற்கு பிளான் போட்ட அப்பத்தா

- Advertisement -

Trending News