குணசேகரனை நாக்க புடுங்குற மாதிரி கேள்வி கேட்ட நந்தினி.. பதிலடி கொடுத்த ஜனனி

ஒவ்வொரு நாளும் எதிர்பாராத திருப்பங்களுடன் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கும் சீரியல் எதிர்நீச்சல். அடுத்து எந்த மாதிரியான சீன்கள் வரும் என்று யூகிக்க முடியாத அளவிற்கு கதை அமைந்து வருகிறது. கொஞ்சம் நாட்களாகவே குணசேகரனின் செயல்கள் வீட்டில் இருப்பவர்களால் புரிஞ்சிக்க முடியாத அளவிற்கு இருக்கிறது. இவர் 40% சொத்துக்காக ஆதிரையின் திருமணத்திற்கு சம்மதித்தாலும் ஏதோ பின்னணியில் பிளான் போட்டுக் கொண்டிருக்கிறார். என்பது அப்பத்தாவும் ஜனனியும் நன்றாகவே தெரிந்து வைத்திருக்கிறார்கள்.

அதனால் தான் அப்பத்தா ஆதிரை திருமணத்தில் மிக அவசரமாக காய் நகர்த்தி வருகிறார்.  அடுத்து ஆதிரையின் நிச்சயதார்த்தத்திற்கு ஏற்பாடு நடைபெற்று வருகிறது. குணசேகரன் மற்றும் மருமகள் சேர்ந்து டிரஸ் வாங்குவதற்காக எல்லோரும் கிளம்பிப் போய்க் கொண்டிருக்கிறார்கள். அப்பொழுது குணசேகரன், ஜனனியை பார்த்து எஸ் கே ஆரும் அவரது தம்பியும் என்ன திடீர்னு இந்த அளவுக்கு இறங்கி வந்தாங்க என்று கேட்கிறார்.

Also read: வாலை சுருட்டி கிட்டு அடங்கி போகும் குணசேகரன்.. எல்லா விதத்திலும் பால் போட நினைக்கும் அப்பத்தா

அதற்கு இத்தனை நாட்களாக அடுப்பங்கரையில் மட்டும் குணசேகரனை திட்டி தீர்த்துக் கொண்டு இருந்த நம்ம நந்தினி முதல் முறையாக குணசேகரின் நாக்க புடுங்குற மாதிரி கேள்வி கேட்டா பாரு அங்க தான் நந்தினி உடைய ஃபேன்ஸ் அதிக அளவில் சந்தோஷப்பட்டு இருப்பாங்க. அப்படி என்னதான் கேள்வி கேட்டா, குணசேகரன் கேட்டதற்கு நந்தினி, நீங்களும் தானே மாமா இறங்கி வந்து இருக்கீங்க என்று கேட்டார்.

உடனே நம்ம பயந்தாங்கோலி ரேணுகா ஏய் கொஞ்ச நேரம் வாய மூடிட்டு சும்மா இரு அப்படி சொல்கிறார். ஆனா இதற்கு கவுண்டர் கொடுக்கிற மாதிரி நம்ம ஜனனியோட பதில் எப்படி இருந்தது என்றால் அவங்க சரியா தான கேக்குறாங்க என்று சொல்ல உடனே நம்ம கோணவாயனுக்கு மூஞ்சி போற போக்க பார்க்கணுமே. எப்படின்னா எல்லாரும் ஒண்ணு சேர்ந்துட்டாங்க நம்ம கொஞ்சம் அடங்கி இருக்கணும் என்று ஒரு ரியாக்ஷன் கொடுத்தார்.

Also read: கடைக்குட்டியால் பிரியும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்.. எரிகிற நெருப்பில் பெட்ரோலை ஊற்றிய மீனாவின் அப்பா

அடுத்ததாக நம்ம அக்கா ஜான்சி ராணி ஒவ்வொரு நாளும் எங்க இருந்து தான் ஒரு பெயர் வைக்கிறார் என்பது தெரியலை. குணசேகரனுக்கு சரியாக ஒவ்வொரு பெயரையும் வச்சு பேசும் போது பார்க்கவே கண்கொள்ளாக் காட்சியாக இருக்கிறது. குணசேகரனின் பிளான் படி புடவை கடைக்கு பக்கத்தில் ஜான்சி ராணியும், கரிகாலனும் காத்துகிட்டு இருக்காங்க.

அப்பொழுது ஜான்சி ராணி அந்த தரங்கெட்ட பையன் இம்புட்டு செஞ்சதுக்கு அப்புறமா அவனை நம்பணுமா அப்படி சொல்லும் போது எங்கேயோ ஒரு பக்கம் இடிக்கிற மாதிரி இருக்கு. இவர் சொல்றத பார்த்தா குணசேகரனுக்கு எதிராக ஏதோ ஒரு பெரிய பிளான் போட்டு கவுக்கறதுக்கு ரெடியா இருக்கிற மாதிரி தெரியுது. அதே நேரத்தில் நம்ம குணசேகரன் சும்மா ஒன்னும் கிடையாது அவரும் ஒரே கல்லில் அடிச்சு மூன்று மாங்காக்கு ஆசைப்பட்டு இருக்காரு. இதற்கிடையில் அப்பத்தா வேற ஒரு பிளான் வச்சிருக்காங்க. இதில் யாரு பிளான் தான் வெற்றியடைய போகுது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

Also read: விட்டா ட்ரோனை வேட்டி குள்ள விற்றுவாங்க.. எதிர்நீச்சல் குணசேகரன் ஃபேமஸ் ஆன கெத்தான 5 டயலாக்

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்