பல கோடி செலவில் மொக்க பாடலை வெளியிட்ட நாய் சேகர் படக்குழு.. வடிவேலு குரலில் வெளியான அப்பத்தா

வைகைப்புயல் வடிவேலு ரெட் கார்ட் தடை நீங்கி தற்போது சுராஜ் இயக்கத்தில் நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தில் நடித்து வருகிறார். இது தவிர மாமனிதன், சந்திரமுகி 2 என பல படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில் லைக்கா தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தில் வடிவேலுக்கு ஜோடியாக ஷிவானி நடித்து வருகிறார்.

மேலும் காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் வடிவேலு தனது சொந்த குரலில் பல பாடல்கள் பாடியுள்ளார். அந்த பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Also Read : அடம் பிடித்து செய்த 2 கோடி தண்ட செலவு.. தயாரிப்பாளர் தலையில் இடியை இறக்கிய வடிவேலு

இப்போது நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தில் பல கோடி செலவு செய்து அப்பத்தா என்ற பாடலை படமாக்கி உள்ளனர். இந்த பாடலை வடிவேலு தனது சொந்த குரலில் பாடியுள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையில் ராப் பாடலாக அப்பத்தா பாடல் உருவாகியுள்ளது. இன்று 7 மணிக்கு இந்த பாடல் வெளியாகியுள்ளது.

முழுவதுமாக ஆங்கில வரிகளால் எழுதப்பட்டுள்ள இந்தப் பாடல் தற்போது இணையத்தில் நெகட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. ஏனென்றால் வடிவேலு இந்த பாடலை பாடுவது போலவே இல்லை, சாதாரணமாக படிப்பது போல் அமைந்துள்ளது. மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்த அவரது ரசிகர்கள் இந்தப் பாடல் ஏமாற்றத்தை தந்துள்ளது.

Also Read : ரீ என்ட்ரி-யில் ஆழம் பார்த்து காலை விடும் வடிவேலு.. ஓவர் அலப்பறையால் நொந்து போன தயாரிப்பாளர்

இந்த பாடல் வரிகளை பாடல் ஆசிரியர் விவேக் எழுதி இருந்தார். மேலும் நடன புயல் பிரபுதேவா இந்த பாடலுக்கு கோரியோகிராப் செய்திருந்தார். இப்போது இந்த பாடலை பார்த்த ரசிகர்கள் பல கோடி செலவு செய்ததற்கு ஒரு பிரயோஜனம் இல்லை என்று கூறி வருகிறார்கள்.

இந்தப் படத்தில் விடாப்படியாக அடம்பிடித்த வடிவேலு இந்த பாடலை வைக்க சொல்லி இருந்தார். ஆனால் இந்த பாடல் இவ்வளவு மொக்கையாக இருக்கும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. இந்நிலையில் நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தின் இறுதி கட்ட பணிகள் முமரமாக நடைபெற்று வருகிறது.

Also Read : தேசிய விருதுக்கு தயாராகும் வடிவேலு.. வாய் ஓயாமல் புகழ்ந்து தள்ளும் பிரபலம்

- Advertisement -