வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

இரண்டு ஹீரோக்கள் நடித்தும் வாங்காத பெயர்.. நாகேஷ், டிஎஸ் பாலையாவுக்காக 100 நாள் ஓடிய படம்

பொதுவாகவே இப்ப வருகிற படங்களை பார்த்து அந்த காலத்தில் உள்ள மனிதர்கள் இதெல்லாம் என்ன படம் அந்த காலத்தில் வருமே படம், அதுதான் சரித்திர படம் என்று சொல்வார்கள். அதேபோல் மறுபடியும் வேறு யாரும் எடுக்க முடியாது. அந்த மாதிரி படங்கள் திரும்பவும் வராது என்று பெருமையாக பேசுவார்கள். ஆனால் அவர்கள் சொல்வது தான் உண்மை அந்த காலத்தில் உள்ள படங்களாக இருக்கட்டும் பாடல்களாக இருக்கட்டும் எல்லாமே மனசுக்கு இதமானதாக இருக்கும்.

அப்படி ஒரு நேரத்தில் வெளிவந்த படம் தான் காதலிக்க நேரமில்லை. இப்படம் 1964 ஆம் ஆண்டு வெளிவந்தது. இதில் முத்துராமன், ரவிச்சந்திரன், டி எஸ் பாலையா, நாகேஷ், ராஜஸ்ரீ ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படம் வெளியாகி 59 வருடங்கள் மேல் ஆகியும் தற்போது நாம் இதைப்பற்றி பேசுகிறோம் என்றால் அதுவே இப்படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி. அத்துடன் இப்படம் பல பேர் மனசுக்குள் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கிறது என்று சொல்லலாம்.

Also read: 50 ஆண்டுகளில் 1000 படங்கள்.. நாகேஷ் நடிப்பில் வெள்ளி விழா கண்ட 10 படங்கள்

அப்படிப்பட்ட இப்படம் நகைச்சுவைக்காகவே எடுக்கப்பட்ட முதல் படம். இதில் ஹீரோவாக முத்துராமன் இருந்தாலும் படத்தின் டைட்டிலில் முதல் பெயர் டி எஸ் பாலையா பெயர்தான் வரும். அந்த அளவிற்கு நடிப்பை நகைச்சுவையுடன் வெளிப்படுத்தி இருப்பார். கிட்டத்தட்ட இப்படத்தின் நாயகனும் இவர்தான் என்றே சொல்லலாம். ஆனால் அந்தக் காலத்தில் முத்துராமன் மற்றும் ரவிச்சந்திரன் ஒரு ரொமாண்டிக் ஹீரோவாக வலம் வந்தார். அப்படிப்பட்ட இவர்களை மிஞ்சும் அளவிற்கு நாகேஷ் மற்றும் டி எஸ் பாலையா நகைச்சுவைகள் இருக்கும்.

இதில் பாலையா நாகேஷும் செய்யும் காமெடியை பார்க்கும்போது இவர்கள் வாழ்ந்த காலத்தில் நாம் பிறக்காமல் போய்விட்டோமே என்று தோன்றும் அளவிற்கு நடிப்பை எதார்த்தமாக கொடுத்திருப்பார்கள். அத்துடன் நாகேஷ் பேசும் ஒவ்வொரு விஷயத்துக்கும் டைமிங் கவுண்டர் கொடுத்து நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைத்திருப்பார். நாகேஷ் மற்றும் டி எஸ் பாலையா இவர்களுக்கு அதிக பாராட்டுக்கள் குவிந்தன.

Also read: நாகேஷ், சிவாஜியுடன் நடித்த முதல் மற்றும் கடைசி திரைப்படம்.. சூப்பர் ஸ்டாரோட முடிந்து போன சகாப்தம்

இந்தப் படத்தில் இரண்டு ஹீரோக்கள் இருந்தாலும் காதலிக்க நேரமில்லை படம் என்று சொன்னாலே நாகேஷ் டி எஸ் பாலையா பேர் மட்டும் தான் ஞாபகத்துக்கு வருகிறது. இப்படம் இவர்களுக்காகவே 100 நாள் திரையரங்குகளில் ஓடி வெற்றி பெற்றது. அதிலும் அந்த வீட்டின் பெண்களை கல்யாணம் செய்ய நடக்கும் கதையைப் பார்த்து மொத்த தியேட்டரில் இருக்கும் அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்தது.

அத்துடன் இப்படத்திற்கு இன்னொரு காவியமாக இருந்தது இப்படத்தில் பாடல்களில் உள்ள வரிகள் என்றே சொல்லலாம். இதில் உள்ள அனைத்து பாட்டுகளுமே அப்பொழுது மட்டுமல்லாமல் இப்பொழுதும் கேட்டு ரசிக்கக் கூடியதாக இருக்கிறது. அதுவே இப்படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய சரித்திரமாகும்.

Also read: எல்லோரைப் போல் நாகேஷ்க்கும் வந்த ஆசை.. அதிர்ஷ்டத்தை பயன்படுத்தாமல் விட்ட சோகம்

- Advertisement -

Trending News