அந்த ஈகோ புடிச்சவனுக்கு மயி** கூட படம் பண்ண மாட்டேன்.. மீண்டும் பொதுவெளியில் அசிங்கமாக பேசிய மிஸ்கின்.!

Mysskin, vishal: மிஸ்கின் மேடையில் அநாகரிகமாக பேசுவதை எப்போதுமே வழக்கமாகத்தான் வைத்திருக்கிறார். அந்த வகையில் ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் அடியே படத்தின் விழாவில் மிஷ்கின் பேசியது தான் இப்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதாவது துப்பறிவாளன் படத்தில் விஷால் மற்றும் மிஸ்கின் இருவரும் இணைந்து பணியாற்றி இருந்தனர்.

அதன் பிறகு இந்த படத்தின் இரண்டாம் பாகம் தொடங்கிய நிலையில் மிஸ்கின் மற்றும் விஷால் இடையே பிரச்சனை பூதாகரமாக வெடித்தது. இந்நிலையில் பொதுவெளியில் மிஸ்கின் விஷாலை பொறுக்கி என்று விமர்சித்திருந்தார். அப்போது தெரியாமல் இந்த வார்த்தையை கூறிவிட்டதாக மிஸ்கின் அடியே பட விழாவில் கூறியிருக்கிறார்.

Also Read : 24 மணி நேரமும் தம் அடித்து உடம்பை கெடுத்துக் கொண்ட 5 இயக்குனர்கள்.. ரயில் வண்டியை போல் புகையை ஊதி தள்ளிய மிஸ்கின்

அதாவது விஷால் என்னுடைய இதயத்திற்கு நெருக்கமான நபர். அவரிடம் போய் இப்போது என்னை பற்றி கேட்டால் துரோகம் செய்தவர் என்று தான் கூறுவார். அப்படி நான் என்னதான் துரோகம் செய்து விட்டேன் என்று தெரியவில்லை. ஆனாலும் விஷால் நடிப்பில் வெளியாகும் படங்கள் எல்லாமே வெற்றி பெற வேண்டும் என்று தான் நினைப்பேன்.

நாங்கள் இருவரும் சண்டை போடுவது உண்மைதான். ஆனால் விஷால் ஈகோ பிடித்த பையன் என்பதால் இறங்கி வர மனம் இல்லாதவன். என்ன மிஸ்கின் இப்படி விஷாலை உயர்த்தி பேசுகிறாரே என்று பத்திரிக்கையாளர்கள் எழுத ஆரம்பித்து விடுவார்கள். அடுத்ததாக விஷால் படத்தை எடுக்க தான் மிஸ்கின் இவ்வாறு பேசுகிறார் என்று எழுதுவார்கள்.

Also Read : 27 வயது நடிகையை திருமணம் செய்யும் விஷால்.. முரட்டு சிங்கிளுக்கு கிடைத்த ஜோடி

இப்படி சொல்லி விஷாலுக்கு ஐஸ் வைத்து படம் எடுக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு துளி கூட இல்லை. சத்தியமா சொல்றேன் இனி விஷால் கூட நான் படம் பண்ண மாட்டேன். விஷால் இடம் கெஞ்சி இந்த மயி** எல்லாம் பண்ணவே மாட்டேன் என பொதுவெளியில் அநாகரிகமாக மிஸ்கின் பேசியிருக்கிறார்.

விஷாலை நான் பொறுக்கி என்று குறிப்பிட்டதால் எல்லோரும் இதே பேரை வைத்து அவரை அசிங்கப்படுத்தி வருகிறார்கள். தயவு செய்து இனி யாரும் அப்படி கூப்பிட வேண்டாம் என்று மிஸ்கின் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் அவர் பேசிய வீடியோ தான் தற்போது இணையத்தில் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.

Also Read : அரசியலில் இறங்கி விளையாட துடிக்கும் 5 ஹீரோக்கள்.. தேவ இல்லாத மொத்த வித்தையையும் கத்துள்ள விஷால்

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்