ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

வாடி, போடி என உரிமையோடு கூப்பிட்ட மிஷ்கின்.. தாராளமா காட்டுவதற்கு கோடியில் சம்பளம்

வித்யாசமான கதை களத்தை கொண்டு படங்களை எடுக்கக்கூடியவர் இயக்குனர் மிஷ்கின். இப்போது இயக்கத்தை காட்டிலும் படங்களில் நடித்தும் வருகிறார். அந்த வகையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் பிசாசு 2. இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் ஆண்ட்ரியா நடித்துள்ளார். சமீபத்திய பேட்டி ஒன்று மிஷ்கின் பிசாசு 2 படத்தைப் பற்றியும், ஆண்ட்ரியாவை பற்றியும் சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

Also Read : விஜய்க்காக சொம்படிக்கும் மிஷ்கின்.. உங்க முதுகு அழுக்கை துடைச்சிட்டு அடுத்தவனுக்கு பாலிஷ் போடுங்க!

அப்போது பேசும்போதே ஆண்ட்ரியாவை அவள் என்று தான் பேசினார். அதாவது வாடி போடி என்று கூப்பிடும் அளவிற்கு ஆண்ட்ரியா எனக்கு பழக்கம். அதேபோல் ஆண்ட்ரியாவுக்கும் என்னை வாடா போடா என்று கூப்பிட அனுமதி உண்டு. பிசாசு 2 படத்தின் கதையை சொல்லும்போது ஆண்ட்ரியாவுக்கு பிடித்து விட்டது.

ஆனால் படத்தில் நிறைய அடல்ட் காட்சிகள் மற்றும் காமம் அதிகமாக உள்ளதால் ஆண்ட்ரியா ஒரு நிபந்தனை வைத்திருந்தார். அதாவது பிசாசு 2 படத்திற்கு அதிக சம்பளம் கேட்டார். ஆண்ட்ரியா கேட்டதிலும் எந்த தவறும் இல்லை, ஹீரோக்கள் கோடிகளில் சம்பளம் வாங்கும் போது இவருக்கு கொடுப்பதில் எந்த தப்பும் இல்லை.

Also Read : உறைய வைக்கும் பனியில் உழைக்கும் லியோ டீம்.. காஷ்மீருக்கு கும்பிடு போட்டு வந்த மிஷ்கின் அறிக்கை

மேலும் பிசாசு 2 வில் தாராளமாக கவர்ச்சி காட்டியதற்கு ஒரு கோடி சம்பளம் அண்ட்ரியா பெற்றுள்ளார். அதுமட்டுமின்றி மிஷ்கின் 10 க்கும் மேற்பட்ட படங்கள் இயக்கியிருந்தாலும் அதில் உள்ள ஹீரோ, ஹீரோயின்களை தாண்டி ஆண்ட்ரியா தன்னை கவர்ந்ததாக கூறியிருந்தார். மேலும் அவர் மூன்று ஆணுக்கு சமமானவர்.

அதுமட்டுமின்றி மிகவும் மென்மையான குணம் உடையவர் ஆண்ட்ரியா. மீண்டும் அவருடன் சேர்ந்து பணியாற்ற வாய்ப்பு வரவேண்டும் என்று அந்த பேட்டியில் மிஷ்கின் கூறியிருந்தார். மேலும் பிசாசு 2 படத்தில் ஆண்ட்ரியாவின் நடிப்பு அனைவருக்கும் கண்டிப்பாக பிடிக்கும் எனவும் உறுதி அளித்தார்.

Also Read : கௌதம் மேனனை விட இரண்டு மடங்கு அதிக சம்பளம் வாங்கும் மிஷ்கின்.. சம்பளத்தை வாரி இறைக்கும் லியோ படக்குழு

- Advertisement -

Trending News