மீனா பட்ட அவமானத்திற்கு பதிலடி கொடுத்த முத்து.. எதற்கெடுத்தாலும் குதர்க்கமாக பேசும் விஜயாவின் மருமகள்

Siragadikkum Asai: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், எந்த அளவிற்கு ஒரு கணவன் மனைவி வாழ்க்கை புரிதலுடன் இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக முத்து மீனாவின் நடிப்பு எதார்த்தமாக இருக்கிறது. ஆனால் முத்து, கொஞ்சம் மூர்க்கத்தனமாக சில விஷயங்களை செய்வதால் அனைவரது கண்ணுக்கும் ஒரு கெட்டவராகவே தென்படுகிறார்.

அதிலும் விஜயாவின் கடைசி மருமகள் ஸ்ருதிக்கு முத்துவை கண்டாலே பிடிக்கவில்லை. எதிரும் புதிருமாக அடிக்கடி மோதிக் கொள்கிறார்கள். அந்த வகையில் மீனா, ஸ்ருதிக்கு செய்த வேலைக்கு ஒரு அங்கீகாரமாக பணத்தை கொடுக்கிறார். அதை தவறாக புரிந்து கொண்ட மீனா முத்துமிடம் ரொம்பவே மனம் வருந்தி பேசுகிறார். இதனால் ஸ்ருதிக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்று முத்து நினைக்கிறார்.

அந்த வகையில் அனைவருக்கும் சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக மீனாவிற்கு ஒரு பூக்கடையை வைத்து கொடுக்கிறார். அத்துடன் இந்த கடையை ஓபன் பண்ணி வைக்க வேண்டும் என்று ஸ்ருதியை வைத்து துவங்க சொல்கிறார். அடுத்தபடியாக எப்படி மீனாவிற்கு ஸ்ருதி 2000 ரூபாய் கொடுத்தாரோ அதைவிட 500 ரூபாய் அதிகமாக வைத்து 2500 ரூபாய் சன்மானமாக ஸ்ருதிக்கு மீனா மூலமாக முத்து கொடுத்து விடுகிறார்.

Also read: அண்ணன்களை பிளாக் மெயில் பண்ணும் சக்தி.. குணசேகரனுக்கு எதிராக சாருபாலாவிற்கு கிடைத்த துருப்புச் சீட்டு

இதனை பார்த்து கடுப்பான ஸ்ருதி, ரவியிடம் உங்க அண்ணன் ஏன் இவ்வளவு மோசமாக இருக்கிறார் என்று புலம்புகிறார். அத்துடன் மீனாவிற்கு கடை வைத்துக் கொடுத்தது கூட அவருடைய சுயநலத்திற்காக தான் என்று எல்லா விஷயத்தையும் தவறாக முடிச்சு போட்டு குதர்க்கமாகவே பேசுகிறார்.

ஆனால் ஸ்ருதி பேசியது ரொம்ப தவறு என்று ரவி புரிய வைக்க பார்க்கிறார். ஆனாலும் நான் பிடிச்ச முயலுக்கு மூணு காலு தான் என்பதற்கு ஏற்ப ஸ்ருதி மனதிற்குள் முத்து ரொம்ப கெட்டவன் என்கிற மாதிரி பிக்ஸ் பண்ணி விட்டார். அத்துடன் ரவியும் நீ உன்னுடைய வேலையை சீக்கிரமாக மாற்றிவிடு. ஏனென்றால் சீரியலிலும் படங்களிலும் டப்பிங் கொடுத்து உன்னுடைய நினைப்பு அனைத்தும் நெகட்டிவாகவே இருக்கிறது என்று ஸ்ருதிக்கு அட்வைஸ் கொடுக்கிறார்.

ஆனாலும் ஸ்ருதி எதையும் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. அடுத்தபடியாக மீனா இந்த பூக்கடை மூலம் ஓரளவுக்கு பணம் காசு சம்பாதிக்க போகிறார். அந்த வகையில் விஜயாவின் மற்ற இரண்டு மருமகள்கள் மாதிரி மீனாவும் கௌரவமாக சொந்த காலில் நின்னு சம்பாதித்து வாழப் போகிறார்.

Also read: சைடு கேப்பில் மகனுக்கு தோள் கொடுக்கும் பூமர் அங்கிள்.. பாக்யாவை ஓவர் டேக் செய்யும் கோபி