வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

பொண்டாட்டி பாசத்தில் ஓவராக பொங்கி எழுந்த முத்து.. குதூகலத்தில் ஆட்டம் போடும் ரோகிணி, சுருதி எடுத்த முடிவு

Sirakadikkum Asai: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், முத்துவை ஏதாவது ஒரு பிரச்சனையில் மாட்டி விட வேண்டும் என்று கண் கொத்தி பாம்பாக சுருதி அம்மா மற்றும் ரோகிணியும் ஒவ்வொரு சதி வேலைகளை பார்த்து வந்தார்கள்.

அவர்கள் நினைத்தபடி எந்தவித பிரச்சனையும் இல்லாமல் சுருதி மற்றும் ரோகினிக்கு தாலி பெருக்கு பங்க்ஷன் நல்லபடியாக முடிந்து விட்டது. ஆனால் விஜயா மட்டும் ரோகிணியின் அப்பா வரவில்லை என்ற கோபத்தை கொடூரமாக காட்டி வந்தார்.

இதனால் எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் ரோகிணி கூடிய விரைவில் மனோஜை தன் பக்கம் இழுத்துக் கொண்டு தனி குடித்தனம் போக வேண்டும் என்று யோசிக்க ஆரம்பித்து விட்டார். ஆனால் மனோஜ் இதற்கெல்லாம் லாயக்கே இல்லை என்பது ரோகினிக்கு தெரியாதோ என்னமோ.

அதே நேரத்தில் ரோகிணி பற்றிய விஷயங்கள் தற்போது வெளிவந்தால் நாடகத்தின் சுவாரஸ்யம் குறைந்துவிடும் என்பதினால் இழுவையாக இழுத்து அடிக்கிறார்கள். இதனை தொடர்ந்து பங்க்ஷன் நல்லபடியாக முடிந்த நிலையில் சுருதி அவருடைய மாலையை கழட்டி விட்டு ரவியுடன் சேர்ந்து போட்டோ எடுத்துக் கொண்டிருக்கிறார்.

அந்த பக்கம் எதிர்ச்சியாக போன மீனா, கழட்டி போட்ட சுருதி மாலையில் செயின் இருப்பதை பார்த்து விடுகிறார். உடனே அதை பத்திரமாக எடுத்து வைப்பதற்காக செயினை எடுத்துக் கொண்டிருக்கிறார். இதை பார்த்த சுருதி அப்பா, மீனாவை செயின் திருடுகிறாயா என்று திருடி என பட்டம் கொடுத்து விட்டார்.

சந்தோசத்தில் ஆடும் ரோகினி

இதை கேட்ட ஹீரோ சும்மா இருப்பாரா, பொண்டாட்டி மேல இருக்கும் பாசத்தால் ஓவராக பொங்கி எழுந்து வயதில் மூத்தவர் என்று கூட பார்க்காமல் ஓங்கி கன்னத்தில் பளார் என்று அறைந்து விடுகிறார். இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்காத குடும்பத்தினர்கள் மற்றும் மண்டபத்திற்கு வந்த விருந்தினர்கள் அனைவரும் அதிர்ச்சியாகி விட்டார்கள்.

இதனால் அசிங்கப்பட்டு போய் நின்ன சுருதி அப்பாவிற்கு சப்போர்ட்டாக சுருதி முத்துவிடம் சண்டை போடுகிறார். என்ன தான் இருந்தாலும் அப்பாவை விட்டுக் கொடுக்க முடியாது. அதுவும் முத்து செய்தது தவறுதான். அதனால் சுருதி சண்டை போடும் பொழுது அவர் பக்கம் இருக்கும் நியாயத்தினால் அனைவரும் முத்துவை தான் திட்ட ஆரம்பித்தார்கள்.

ஆக மொத்தத்தில் ரோகினி ஆசைப்பட்ட கலவரம் இந்த பங்க்ஷனில் நடந்து விட்டது. இதை பார்த்த பிறகு தான் ரோகினிக்கு பெருமூச்சு விட முடிந்தது. அது மட்டுமில்லாமல் இந்த கலவரத்தை பார்த்து குதூகலமாக தோழியுடன் கொண்டாட ஆரம்பித்து விட்டார். ஆனால் சுருதி, முத்து செய்த செயலால் கோபத்தில் அம்மா வீட்டிற்கு போவதற்கு முடிவு எடுத்து விட்டார்.

- Advertisement -

Trending News