வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

ரோகிணி போட்ட திட்டத்தில் பலியடாக சிக்கிய முத்து மீனா.. போனை பார்த்து ஏமாறப்போகும் கல்யாணி

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், மீனாவைப் பொறுத்தவரை தியாகி செம்மலாக பெயர் எடுக்க வேண்டும் என்பதற்காக புகுந்த வீட்டில் கொஞ்சம் ஓவராக தான் அடங்கிப் போகிறார். அதிலும் மாமியார் மாமனாருக்கு மட்டுமில்லாமல் அங்கு இருப்பவர்களுக்கும் பணிவிடை செய்து சம்பளம் இல்லாத வேலைக்காரியாக தான் வாழ்ந்து வருகிறார்.

என்னதான் தன்னுடைய குடும்பம் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று அனுசரித்துப் போனாலும், ரோகிணி மனோஜ் மட்டம் தட்டி பேசி மீனாவை நோகடித்தாலும் அதை கண்டுக்காமல் மீனா அமைதியாக இருப்பது கொஞ்சம் கடுப்பேற்றுகிறது. தற்போது ஒட்டுமொத்த குடும்பமாக சேர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுது மாமனாருக்கு பார்த்து பார்த்து கவனிக்கிறார்.

முதல்முறையாக தோற்கப் போகும் ரோகிணி

இதையும் கிண்டல் பண்ணும் விதமாக ரோகினி மற்றும் மனோஜ் நக்கல் அடித்து பேசுகிறார்கள். இதனை தொடர்ந்து கோவிச்சிட்டு போன சுருதி, ரவியுடன் வீட்டிற்கு திரும்பி வருகிறார். அப்பொழுது விஜயா, இந்த வீட்டில் மாமியாராக இருக்கும் என் பேச்சையும் மதிக்காமல் உன் இஷ்டத்துக்கு உங்க வீட்டுக்கு போயிட்டு இப்ப எப்படி நீ இங்கே வர என்று கேட்கிறார்.

அதற்கு சுருதி எங்களுக்குள் எத்தனை பிரச்சனை வந்தாலும் அதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். நீங்கள் ஏன் தலையிட்டு பேசுகிறீர்கள் என்று கேட்கிறார். உடனே அண்ணாமலை உன்னுடைய சந்தோசத்துக்கு எந்தவித குறச்சலும் வராது. உங்க பொண்ணு எங்க வீட்டில் ரொம்ப சந்தோசமாக இருப்பார் என்று உன்னுடைய அப்பாவுக்கு நான் வாக்குறுதி கொடுத்திருக்கிறேன்.

நீ இப்பொழுது அங்கே போனா அவர்கள் எங்களை பற்றி என்ன நினைப்பார்கள் என்று கேட்கிறார். அதற்கு இது என்னுடைய குடும்பம். அதனால் இந்த குடும்பத்தை நான் யாரிடமும் விட்டுக் கொடுத்து பேசமாட்டேன். என்ன பிரச்சனை என்று கூட நான் அவர்களிடம் சொல்லவில்லை. அதற்குள் ரவி என்னை வந்து சமாதானப்படுத்தி கூட்டிட்டு வந்து விட்டான் என்று சொல்கிறார்.

இதற்கும் விஜயா, ரவி திட்டும் விதமாக உன்னை யாரு அங்க போக சொன்னா. கோபப்பட்டு போன அவளுக்கு திரும்பி வர தெரியாதா என்று கேட்கிறார். பிறகு அண்ணாமலை இந்த பேச்சை இத்துடன் முடித்து விடுங்கள் எல்லோரும் ரூமுக்கு போங்க என்று அனுப்பி வைக்கிறார். ஆனாலும் விஜயா, ரவியை தனியாக கூப்பிட்டு நான் தான் அவ்வளவு தூரம் போன் பண்ணி அவளை கூப்பிட போக வேண்டாம் என்று சொன்னேன்.

என்னுடைய பேச்சையும் மீறி நீ ஏன் அங்கே போய் சுருதியை கெஞ்சி இருக்கிறாய். அதுவும் டைமண்ட் மோதிரம் கொடுத்து தான் சமாதானப்படுத்த வேண்டுமா என்று கேட்கிறார். அதற்கு நீங்கள் சொல்லும் பொழுது நானும் கூப்பிட போக வேண்டாம் என்று தான் நினைத்தேன். ஆனால் மீனா அண்ணி தான் போன் பண்ணி நான் செய்த தவறை சுட்டிக்காட்டி பேசினார்.

அதனால் தான் என் மீது தவறு இருக்கு என்று எனக்கு புரிந்து சுருதியை சமாதானப்படுத்தி கூட்டிட்டு வந்தேன் என்று சொல்கிறார். இதை கேட்டதும் விஜயா கோபத்துடன் மீனாவிடம் சண்டை போடுகிறார். எல்லா விஷயத்திலும் பெரிய மனுஷி மாறி தலையிட்டு மூக்கு நுழைப்பதே உன்னுடைய வேலை. என் பிள்ளை ரவிக்கு போன் பண்ணி நீ என்னை அட்வைஸ் கொடுக்கிறாய்.

உனக்கு அவ்வளவு தைரியம் எங்கே இருந்து வந்தது என்று திட்டுகிறார். பிறகு முத்து மற்றும் அண்ணாமலை வந்து நீ செய்ய வேண்டிய வேலையை மீனா செய்திருக்கிறார். இதையும் பெரிசாக பேசி பிரச்சனை பண்ண வேண்டாம் என்று விஜயாவை அண்ணாமலை தடுத்து விடுகிறார். இதனை தொடர்ந்து ரோகினி, இன்று எப்படியாவது முத்து போனில் இருக்கும் சத்யாவின் வீடியோவை எடுத்து விட வேண்டும் என்று பிளான் பண்ணி விட்டார்.

அதற்காக அனைவரும் தூங்கி நிலையில் மீனா, முத்துவுக்காக பால் காய்ச்சிக் கொண்டிருக்கும் பொழுது அதில் தூக்கு மாத்திரையை கலந்து விடுவதற்கு பிளான் பண்ணி விட்டார். அதன்படி மீனா பால் காய்ச்சிக் கொண்டிருக்கும் பொழுது ரோகினி மழை வர மாதிரி இருக்கிறது. மாடியில் துணி காய போட்டு இருக்கிறது நீங்க போய் எடுத்துட்டு வாங்க என்று மீனாவை மாடிக்கு அனுப்பி வைத்து விடுகிறார்.

உடனே மீனா, மாடிக்கு போன நிலையில் ரோகிணி பாலில் தூக்கு மாத்திரையை கலந்து விடுகிறார். பிறகு மீனா கீழே வந்ததும், ரோகிணி இடம் மாடியில் துணியை இல்லை நீங்க ஏன் இப்படி சொன்னீங்க என்று கேட்கிறார். இல்ல காய போட்டு இருந்த மாதிரி இருந்துச்சு அதனால்தான் சொன்னேன் என்று சமாளித்து போய்விடுகிறார். அடுத்ததாக மீனா, பாலை எடுத்து வந்து முத்துவுக்கு கொடுக்கிறார்.

உடனே முத்துவும் அந்த பாலை குடித்துவிட்டு மீனாவிற்கு மீதம் பாலை கொடுத்து இரண்டு பேரும் பேசிக் கொள்கிறார்கள். இதை ஒளிந்து இருந்து ரோகினி பார்த்துக் கொண்டிருக்கிறார். கடைசியில் இரண்டு பேருமே தூக்கம் வருது என்று தூங்கிய நிலையில் ரோகினி, முத்துவின் போனை பிளான் பண்ண படி எடுத்துப் பார்க்கப் போகிறார். ஆனால் அதில் ரோகினிக்கு மிகப்பெரிய ஏமாற்றமாகத் தான் இருக்கப் போகிறது.

ஏனென்றால் முத்து ஃபோனில் சத்யா பற்றிய வீடியோ இருக்கப் போவதில்லை. அதற்கு காரணம் சத்யா தற்போது திருந்தி நல்ல பிள்ளையாக மாறிவிட்டார் என்பதால் முத்து அந்த வீடியோ இனி தேவை இல்லை என்று டெலிட் செய்ய வாய்ப்பு இருக்கிறது. இனி ரோகிணி பிளான் எதுவும் பலிக்காது என்பதற்கு ஏற்ப இந்த ஒரு விஷயத்தில் தோற்றுப் போய் நிற்கப் போகிறார்.

- Advertisement -

Trending News