வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

முத்துவின் சட்டையை பிடித்த மச்சான்.. நண்பனுக்காக கையை முறித்த சம்பவம்

Siragadikka Aasai serial today episode: 300 எபிசோடுகளை கடந்து டிஆர்பி-யில் மாஸ் காட்டிக் கொண்டிருக்கும் விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியலில் சற்றும் எதிர்பாராத அதிரடி திருப்பம் இன்று நடந்திருக்கிறது. காலேஜ் படிக்கும் மீனாவின் தம்பி சத்யா தன்னுடைய நண்பர் சிட்டி நடத்தும் வட்டிக்கடையில் பார்ட் டைம் ஜாப் பார்க்கிறார். ஏற்கனவே சிட்டியால் தான் சத்யா போலீசில் பைக் திருடிய கேசுக்காக மாட்டிக்கொண்டு, அதனாலேயே மீனாவின் அப்பா தன்னுடைய சாவை தேடிக்கொண்டார்.

அதன் பிறகு சிட்டியுடன் பேசக்கூடாது என மீனாவும் அவருடைய அம்மாவும் ஸ்டிட்டா சொல்லியிருந்தார்கள். இருந்தாலும் அதையெல்லாம் கொஞ்ச நாள் மட்டுமே கேட்ட சத்யா, இப்போது மறுபடியும் சிட்டியுடன் சேர்ந்து சுற்ற ஆரம்பித்து விட்டார். அதுவும் விஜயாவை பழிவாங்க வேண்டும் என்று, சிட்டி பேச்சை கேட்டுக் கொண்டு அவருடைய பணத்தை திருடிய விஷயம் இப்போது முத்துவுக்கும் தெரிந்து விட்டது.

இதை மீனாவின் அம்மாவிடம் முத்து சொல்லப்போனார், ஆனா அதை சொல்லாமலே திரும்பி வந்து விட்டார். கார் செட்டுக்கு வந்து பார்த்தால் வட்டி பணம் கொடுக்காமல் தாமதமான செல்வத்தை சத்யா மற்றும் சிட்டி இருவரும் சேர்ந்து அடித்து துவைத்தனர். இதை பார்த்த முத்து சிட்டியை போலந்து கட்டி விட்டார்.

Also Read: முத்துவிடம் கையும் களவுமாக சிக்கப் போகும் மச்சான்.. விஜயாவிடம் ஒத்து ஊதும் ரோகிணி, மீனாவிற்கு வரும் பிரச்சினை

சற்றும் எதிர்பாராத அதிரடி திருப்பங்கள் நிறைந்த சிறகடிக்க ஆசை

‘சிட்டி என்னுடைய நண்பர் அடிக்காதீங்க மாமா!’ என்று சத்யாவும் முத்துவை தடுக்க பார்த்தார். ஒரு கட்டத்தில் நண்பரை அடிப்பதை பார்க்க முடியாத சத்யா, முத்துவின் சட்டையைப் பிடித்து விட்டார். கோபத்தின் உச்சத்துக்கே போன முத்து, காச திருடுனது இந்த கை தானே! என்று சத்யாவின் கையை முறித்து, மாவு கட்டு போடும் அளவுக்கு உடைத்து விட்டார். அதன் பின் அங்கு இருப்பவர்கள் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி அனுப்பி விட்டனர்.

செல்வம், முத்துவின் அப்பாவுடைய மருத்துவ செலவிற்காகத்தான் தான் வைத்திருந்த வட்டி பணத்தை எடுத்து கொடுத்ததால், அடுத்த நாளே அந்த பணத்தை சிட்டியிடம் தருவதாகவும் முத்து சொல்லிவிட்டார். அதன் பின் மீனா முத்துவிற்கு கால் பண்ணி, சத்யா பைக்கில் செல்லும்போது விழுந்து கையை உடைத்துக் கொண்டதாக சொல்கிறார். உடனே முத்து, ‘அவன் திமிரு புடிச்சு ஏதாவது செஞ்சா, நான் ஓடி வந்து நிற்கணுமா!’ என்று மருத்துவமனைக்கு வர முடியாது என சொல்லிவிட்டார்.

எதற்காக முத்து இப்படி கோபப்படுகிறார் என்று மீனாவிற்கும் சந்தேகம் ஏற்படுகிறது. அன்று இரவு மீனாவிடம் முத்து சத்யாவை பற்றிய எல்லா உண்மைகளையும் சொல்லப் போகிறார். அதன் பிறகு மீனா எப்படி தன்னுடைய தம்பியை திருத்தி நல்வழிப்படுத்துவார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Also Read: போலீஸ் ஸ்டேஷனில் நந்தினிக்கு நேர்ந்த கொடுமை.. ட்ராக் மாறி போகும் எதிர்நீச்சல்

- Advertisement -

Trending News