பட்ஜெட் பத்மநாதன் போல இமான் ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளம்.. பிரமிக்க வைத்த சொத்து மதிப்பு

Music Composer D Imman Net Worth: தமிழ் சினிமாவின் மினிமம் கியாரண்டி மியூசிக் டைரக்டர் தான் இசையமைப்பாளர் டி இமான். இவர் குறைந்த பட்ஜெட் படங்களில் தொடர்ந்து இசையமைத்து, அந்தப் படங்களுக்கு தனது இசையால் உயிர் கொடுத்து சூப்பர் டூப்பர் ஹிட் கொடுப்பதுதான் இவருடைய ஸ்பெஷாலிட்டி.

இவர் ஒரு படத்திற்கு ரொம்பவே கம்மியாக தான் சம்பளம் வாங்கி, தொடர்ந்து ஹிட் கொடுத்ததால் முன்னணி நடிகர்களின் பட வாய்ப்பு குவிந்தது. இவருடைய முதல் படமே தளபதி விஜய்யின் தமிழன். அதைத்தொடர்ந்து விசில், கிரீடம், தலைநகரம், திருவிளையாடல் ஆரம்பம், மாசிலாமணி, மனங்கொத்தி பறவை, சாட்டை, கும்கி என தொடர்ந்து ஜாக்பாட் அடித்தது.

அதிலும் அஜித்தின் விஸ்வாசம், சூப்பர் ஸ்டாரின் அண்ணாத்த போன்ற படங்களை இமான் இசையமைத்து கோலிவுட்டின் பாப்புலரான மியூசிக் டைரக்டர் ஆனார். எல்லோருடைய பார்வையிலும் மினிமம் பட்ஜெட் மியூசிக் டைரக்டராக இருக்கும் டி இமான், தற்போது ஒரு படத்திற்கு மட்டும் 2 கோடி வரை சம்பளம் வாங்குகிறார்.

Also Read: மீண்டும் கடனாளியான சிவகார்த்திகேயன்.. ஏலியன் கூடவே போயிற வேண்டியதான்

இசையமைப்பாளர் டி இமானின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு

படத்தைத் தவிர விளம்பரம், சீரியல் டைட்டில் பாடல்கள் போன்றவற்றையும் இமான் இசையமைத்து வருகிறார். இதன் மூலம் மட்டும் மாதத்திற்கு 1 கோடி வருமானம் ஈட்டுகிறார். இப்படி வருடத்திற்கு மட்டும் 9 கோடி சம்பாதிக்கும் டி இமான், ஒட்டுமொத்தமாக தற்போது 50 கோடி சொத்துக்களை சேர்த்து வைத்திருக்கிறார்.

அதை தவிர ஆடி, பிஎம்டபிள்யூ ரக விலை உயர்ந்த கார்களையும் டி இமான் வைத்துள்ளார். இவர் குறைந்த சம்பளம் வாங்கியே இவ்வளவு சேர்த்து வைத்திருக்கிறார் என்றால், ஆரம்பத்தில் இருந்தே கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கி இருந்தால் இன்னும் அவருடைய சொத்து மதிப்பு பல மடங்கு எகிறி இருக்கும்.

Also Read: துரோகின்னு முத்திரை குத்திய இமான்.. மௌனம் கலைத்து பதிலடிக்கு தயாரான சிவகார்த்திகேயன்

- Advertisement -spot_img

Trending News