சைக்கோவை சல்லடை போட்டு தேடும் மூர்த்தியின் தம்பிகள்.. இந்த வாரத்துடன் முடிவு கட்டிய பாண்டியன் ஸ்டோர்ஸ்

Pandiyan Stores Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் கடந்த அஞ்சு வருஷமாக அண்ணன் தம்பிகளின் பாசப் போராட்டத்தை வைத்து வெற்றிகரமாக கொண்டு வந்து விட்டார்கள். அந்த வகையில் இந்த வாரத்துடன் நாடகத்திற்கு எண்டு கார்டு போடுவதற்கு நேரத்தை குறித்து விட்டார்கள். வழக்கம்போல் சந்தோஷமான தருணங்களை வைத்துக் கொண்டு நாடகம் முடிவடைகிறது.

அதில் தற்போது எல்லா பிரச்சனைக்கும் காரணமான சைக்கோ பிரசாந்தை தேடிப்பிடித்து போலீஸிடம் ஒப்படைப்பதற்காக ஜீவா மற்றும் கதிர் அனைத்து இடங்களிலும் சல்லடை போட்டு வருகிறார்கள். இதை தெரிந்து கொண்ட தனம் வழக்கம் போல் மூர்த்தியிடம் புலம்புகிறார். இது நம்மளுக்கு தேவையில்லாத வேலை ஏற்கனவே கதிர் ரொம்பவே கோபக்காரன்.

இதனால் பிரசாந்தை பார்த்ததும் கதிர் கையை வைத்து விட்டால் மறுபடியும் பிரச்சனை வருவதற்கு வாய்ப்பு இருக்கும். நீங்க ஏன் மாமா இப்படி அவர்களை அனுப்பி வைத்திங்க என்று மூர்த்தியிடம் தனம் கேட்கிறார். இதனால் வீட்டில் இருப்பவர்கள் கொஞ்சம் பதட்டத்துடனே இருக்கிறார்கள்.

இதனைத் தொடர்ந்து பிரசாந்தை கதிர் மற்றும் ஜீவா கண்டுபிடித்து போலீஸிடம் ஒப்படைத்து விடுகிறார்கள். அத்துடன் மல்லியும் அவருடைய அம்மா வீட்டிற்கு சென்று விடுகிறார். இதற்கிடையில் ஜனார்த்தன் தன்னுடைய இளைய மகளின் வாழ்க்கை இப்படி கேள்விக்குறியாகி போய்விட்டதே என்ற வேதனையில் இருக்கிறார்.

உடனே ஜீவா, மாமனாரிடம் ஆறுதலாக பேசி உங்களுக்கு எல்லா விதத்திலும் ஆறுதலாக இருப்பேன். நீங்கள் எதை நினைத்தும் கவலைப்பட வேண்டாம் என்று சொல்கிறார். இப்படி ஒட்டுமொத்த சந்தோஷத்தையும் வைத்து அனைவரும் கோவிலுக்கு போகிறார்கள். அங்கே அனைவரும் மனம் விட்டு பேசி அவர்களுடைய மகிழ்ச்சியை கொண்டாடுகிறார்கள்.

இதோடு பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முடிவடைய போகிறது. இருந்தாலும் இந்த நேரத்தில் முல்லை கேரக்டரில் நடித்த சித்ரா இல்லாதது கொஞ்சம் வருத்தமாக இருக்கிறது என்று இந்த நாடகத்தை பார்த்துக் கொண்டு வருபவர்கள் அவர்களுடைய ஆதங்கத்தை தெரிவித்து வருகிறார்கள். அத்துடன் பாசத்திற்கு எப்போதுமே முடிவு இல்லை என்பது போல் மறுபடியும் சீசன் 2 அப்பா மகன்களின் அன்பை வைத்து வர இருக்கிறது.

Sharing Is Caring:

அதிகம் படித்தவை