ஜீவாவை தவறாக புரிந்து கொள்ளும் மூர்த்தி.. கிடைத்த கேப்பில் எல்லாம் கடா வெட்டும் மீனாவின் அப்பா

இதுவரை அண்ணன் தம்பிகளின் பாசத்தை அடிப்படையாக வைத்து மக்களை கவர்ந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் தற்போது பணத்தால் மனக்கசப்பு ஏற்பட்டு ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மூலையில் இருப்பதை வைத்து கதை நகர்ந்து வருகிறது. அதில் ஜீவா என்னதான் அண்ணனை விட்டு பிரிந்து வந்திருந்தாலும் அண்ணன் கஷ்டப்படுவதை பார்த்து கண்கலங்கி போய் நிற்கிறார்.

இதை சரி செய்யும் விதமாக அவருக்கு ஒத்தாசையாக வேலை பார்க்கும் பையனை மூர்த்தியிடம் போய் நான் சொன்னேன்னு சொல்லாமல் வேலை பாரு என்று கூறுகிறார். அவரும் மூர்த்தியிடம் எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் இங்கே வேலை இருப்பதாக சொன்னார். அதனால் எனக்கு வேலை கிடைக்குமா என்று கேட்க வந்தேன் என்று சொல்கிறார். இதைக் கேட்ட மூர்த்தி மற்றும் கதிர் அவரிடம் மடக்கி மடக்கி கேள்வி கேட்க அவர் குழப்பத்தில் ஏதோ உளறி வைக்கிறார்.

Also read: குணசேகரனின் வீழ்ச்சி ஆரம்பம்.. ஜனனி, அரசு செய்ய போகும் தரமான சம்பவம்

பிறகு நீ யார் சொல் என்று அதட்டி கேட்கும்போது என்னை ஜீவா தான் அனுப்பி வைத்தார் என்று சொல்ல உடனே மூர்த்தி என்னுடைய கடையை காலி பண்ண வேண்டும் அதற்காகத்தான் உன்னைய ஏற்பாடு பண்ணி என் கடைக்கு அனுப்புகிறானா என்று தவறாக புரிந்து கொண்டு வில்லத்தனமாக பேசுகிறார். ஆனால் கதிர் நீ ஏன் இப்படி யோசிக்கிற நம்ம ஜீவா அண்ணா அப்படி எல்லாம் கிடையாது என்று ஹீரோவாக மூர்த்தியிடம் சொல்கிறார்.

பிறகு இதை ஜீவாவிடம் சொல்வதற்கு மீனாவின் அப்பா வீட்டிற்கு அந்தப் பையன் வருகிறான். அந்த நேரத்தில் ஜீவா மற்றும் மீனா இருவரும் சர்டிபிகேட்டை எடுப்பதற்காக மூர்த்தி வீட்டுக்கு கிளம்புகிறார்கள். அப்பொழுது ஜனார்த்தன் நான் கொடுத்த வாட்ச், செயின் போட்டுட்டு நல்லா ஜம்முன்னு வெளில போங்க அப்பதான் எனக்கு கெத்தா இருக்கும் என்று சொல்கிறார். அதே மாதிரி ஜீவாவும் இது எல்லாத்தையும் போட்டுவிட்டார். அந்த நேரத்தில அந்த கடை பையன் வந்து எல்லா விஷயத்தையும் சொல்கிறான்.

Also read: குணசேகரனின் சுயரூபத்தை தெரிந்து கொண்ட மக்கு ஆதிரை.. விசாலாட்சி எடுக்க போகும் முடிவு என்ன

இதைக் கேட்டு மிகவும் கோபப்படுகிறார் ஜீவா மற்றும் மீனா. இது சரியாக பயன்படுத்தி நிரந்தரமாக பிரிக்க வேண்டும் என்பதற்காக ஜனார்த்தன் கிடைக்கிற கேப்பில் எல்லாம் கடா வெட்டுகிறார். அதாவது நேரம் கிடைக்கும் போதெல்லாம் சமயம் பார்த்து மூர்த்தியை பற்றி தவறாக பேசி அதே நேரத்தில் ஜீவாவை கவுக்க வேண்டும் என்பதற்காக அவருக்கு நகைகளையும் வாங்கி கொடுத்து புது டிரஸ்களையும் வாங்கிக் கொடுத்து இனிமேல் நீங்கள் இப்படித்தான் நீட்டாக இருக்க வேண்டும் என்று அவரை மனதை மாற்ற முயற்சி செய்து வருகிறார்.

இவரும் அவருடைய மாமனாரின் சூழ்ச்சியை தெரிந்து கொள்ளாமல் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை மாதிரி தலையை மட்டும் ஆட்டிக்கிட்டே இருக்காரு. இதுவரை இவர் மேல இருந்த மரியாதையே போயிருச்சு என்றே சொல்லலாம். அண்ணன் மேல கோபப்பட்டு வெளியில் வந்தா தனியாக இருந்து வாழ்ந்து காமிக்கணும். அதை விட்டுட்டு மாமனார் வீட்டோட வந்து இருக்குது மட்டும் எந்த விதத்தில் மரியாதையாக இருக்கும். இன்னொரு பக்கம் வந்த காசு எல்லாம் ஊதாரித்தனமாக ஐஸ்வர்யா மற்றும் கண்ணன் செலவு செய்து விட்டு தற்போது யூட்யூபில் சமையல் வீடியோ போட்டு காசு சம்பாதிக்கலாம் என்று அலப்பறையை கூட்டிகிட்டு இருக்காங்க.

Also read: அடுத்த தில்லாலங்கடி வேலையை பார்க்கும் குணசேகரன்.. தவிடு பொடியாக ஆக்கப் போகும் ஜனனி

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்