வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

கல்யாண மண்டபத்திற்கு வந்த மூர்த்தி, அண்ணனை நினைத்து பயப்படும் கயல்.. உயிரை பணயம் வைத்த பெரியப்பா

Kayal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற கயல் சீரியலில், அதிரடியாக ஆர்ப்பாட்டம் பண்ணிக் கொண்டிருந்த கயல் தன்னுடைய கல்யாணத்தின் மூலம் ஒவ்வொருவரையாக திருத்தி எதிரிகளின் மனசை மாற்றி வருகிறார். அந்த வகையில் சிவசங்கரி மற்றும் பெரியப்பா மட்டுமே கயலுக்கு எதிரியாக கல்யாணத்தை நிறுத்த வேண்டும் என்று கல்யாணம் மண்டபத்தில் குட்டி போட்ட பூனையாக பல வழிகளில் சதி செய்து வந்தார்கள்.

அதிலும் தற்போது இத்தனை வருட காலமாக பெரியப்பாவை அவமானப்படுத்தி ஒரு பொருட்டவே மதிக்காத கயல் தற்போது மண்டபத்தில் இருக்கும் அனைவரது முன்னாடியும் மன்னிப்பு கேட்டு பெரியப்பாவை பற்றி புகழ்ந்து பேசி என்னுடைய அப்பாவுக்கு அடுத்தபடியாக பெரியப்பா தான் எங்க குடும்பத்துக்கு குலசாமி என்று பெருமைப்படுத்தி பேசி விட்டார்.

பெரியப்பாவின் மனசை மாற்றிய கயல்

அது மட்டும் இல்லாமல் இதுவரை உங்களுக்கு நான் கஷ்டத்தை கொடுத்ததற்கு மன்னித்து விடுங்கள் என்று எல்லோரும் முன்னாடியும் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு விட்டார். இப்படி கயல், பெரியப்பாவை பற்றி பேசிய நிலையில் கொஞ்சம் கொஞ்சமாக பெரியப்பாவின் மனசும் மாறிவிட்டது. அத்துடன் கயல் கல்யாணத்தில் எந்தவித பிரச்சினையும் வந்து விடக்கூடாது.

மற்றவர்களாலும் இந்த கல்யாணம் நின்று போய் விடக்கூடாது என்று வடிவிடம் பெரியப்பா பேசுகிறார். அந்த வகையில் பெரியப்பா மற்றும் வடிவும் இனிமேல் கயல் விஷத்தில் தலையிட மாட்டார்கள். அந்த அளவிற்கு மொத்தமாக திருந்தி விட்டார்கள். இதனை அடுத்து இன்னும் சிவசங்கரி தான் திருந்தாமல் அலைந்து கொண்டிருக்கிறார்.

ஆனால் இவருக்கும் ஒரு அடுத்து ஆப்பு தயாராகிவிட்டது. அதாவது கயலின் கல்யாணத்தை இன்னும் ஜாம் ஜாம் நடத்த வேண்டும் என்பதற்காக பணத்தை வாங்குவதற்காக மூர்த்தி வெளியே போயிருந்தார். அந்த நேரம் பார்த்து சிவசங்கரி அண்ணன் மூர்த்தியை அடியாட்களை வைத்து குத்தி விட்டார். இதனால் வலியில் துடித்துக் கொண்டிருக்கும் மூர்த்தி அங்கேயே மயங்கி விழுந்து விட்டார்.

மூர்த்தி இன்னும் காணவில்லை என்ற பதட்டத்துடன் கயல், அண்ணன் வரும் வரை நான் மணமேடைக்கு வர மாட்டேன் என்று பிடிவாதமாக இருக்கிறார். இது எதுவும் தெரியாத எழில் மணமேடையில், கயலுக்காக காத்துக் கொண்டிருக்கிறார். இன்னொரு பக்கம் கயலை மணமேடைக்கு கூட்டிட்டு வருவதற்காக அத்தை ராஜி வந்திருக்கிறார். ஆனால் அவரிடமும் கயல், மூர்த்திக்கு ஏதோ ஒரு ஆபத்து இருப்பது போல் எனக்கு தோன்றுகிறது.

அதனால் மூர்த்தி வந்தா தான் நான் மணமேடைக்கு வருவேன் என்று பிடிவாதமாக சொல்லி விடுகிறார். இதனை தொடர்ந்து மூர்த்தி தங்கையின் கல்யாணத்தை பார்ப்பதற்காக எப்படியோ மணமேடைக்கு வந்து விடுவார். ஆனால் இதற்கு இடையில் பெரியப்பா ஏற்கனவே கயல் கல்யாணத்தை நிறுத்த வேண்டும் என்பதற்காக பேசி நிலையில் இவருடைய அடியாட்கள் கல்யாண மண்டபத்தில் பாம் வைத்து விடுகிறார்கள்.

இந்த விஷயம் தெரிந்த பெரியப்பா அதிர்ச்சியா கயல் கல்யாணம் எந்த பிரச்சனையும் இல்லாமல் நடக்க வேண்டும். அதனால் நீ ஏன் பாம் வைத்தாய் என்று திட்டுகிறார். ஆனால் வேறு வழி இல்லாத பெரியப்பா அவருடைய உயிரை பணயம் வைத்து பாம் எடுப்பதற்கு தகவலை சொல்லிவிடுவார். பிறகு இந்த பிரச்சினையை ஒரு வழியாக பெரியப்பா சுமூகமாக முடித்து வைத்து விடுகிறார்.

இதனை தொடர்ந்து மூர்த்தி மண்டபத்திற்கு வந்த நிலையில் அனைவரும் எதிர்பார்த்தபடி கயல் மற்றும் எழிலின் கல்யாணம் நடைபெற்று விடும். இதற்கு இடையில் சிவசங்கரி செய்த காரியத்தால் மூர்த்தி பாதிக்கப்பட்டு இருப்பதால் இந்த விஷயத்தை எழிலிடம் சொல்லாமல் மறைத்ததற்காக சிவசங்கரியும் கயலின் நல்ல மனதை புரிந்து கொண்டு திருந்தி கயலை மருமகளாக ஏற்றுக் கொள்வார்.

- Advertisement -

Trending News