தன்வி மனதில் வன்மத்தை கலக்கும் மிர்னாலினி.. வேதாவிற்காக ஓவர் ரிஸ்க் எடுக்கும் விக்ரம்

Modhalum kaadhalum Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற மோதலும் காதலும் சீரியலில், தன்வி மீது உண்மையான பாசத்தைக் காட்டி இவள் தான் என்னுடைய மகள் என்று நினைக்கிறார் வேதா. ஆனாலும் விக்ரமின் அத்தை உங்களுக்கும் ஒரு குழந்தை வேண்டும்.

அப்பொழுதுதான் இருவருடைய வாழ்க்கையும் ஒரு அர்த்தமாக அமையும் என்று விக்ரம் மற்றும் வேதாவிடம் சொல்கிறார். அதற்கு விக்ரமின் அம்மா கஜலட்சுமி, வேதாவிற்கு குழந்தை பிறக்க வாய்ப்பில்லை என்று சொல்லிவிடுகிறார். உடனே விக்ரம் அத்தை வேதாவின் கையைப் பிடித்து குழந்தை பிறப்பதற்கு எல்லா தகுதியும் வேதாவிற்கு இருக்கிறது.

அதற்கு உண்டான எல்லா மருத்துவத்தையும் நான் கூடவே இருந்து பார்க்கிறேன் என்று விக்ரம் வேதாவை ஒரு ஆயுர்வேத மருத்துவத்திற்கு கூட்டிப் போகிறார். அங்கே போனதும் விக்ரம் மற்றும் வேதா ஒரு சாதாரண கணவன் மனைவிகளாக எந்தவித ஆடம்பரப் பொருட்களும் இல்லாமல் வாழ வேண்டும் என்று கண்டிஷனாக சொல்லிவிடுகிறார்.

அத்துடன் அன்றாட வாழ்க்கையில் எந்த அளவுக்கு கஷ்டப்பட்டு இருவரும் போராட வேண்டும் என்பதையும் தொடர்ந்து பல விஷயங்களை காட்டி வருகிறார். இதனை தொடர்ந்து ஒவ்வொரு விஷயத்திலும் விக்ரம், வேதாவிற்கு பக்கபலமாக இருந்து சப்போர்ட் பண்ணுகிறார்.

விக்ரமை புரிந்து கொண்ட வேதா

ஆனாலும் அங்கு இருப்பவர்களின் குடிசையில் நெருப்பு பற்றியதால் ஒரு குழந்தை அதில் மாட்டிக் கொள்கிறது. இதை பார்த்த வேதா அந்த குழந்தையை காப்பாற்றும் முயற்சியில் உள்ளே சிக்கிக்கொண்டார். உடனே விக்ரம், வேதாவை காப்பாற்றுவதற்காக உள்ளே போய்விடுகிறார்.

ஆனால் அதற்குள் வேதா மயக்கம் போட்டு விழுந்ததால் விக்ரம் கஷ்டப்பட்டு அவரை தூக்கி வெளியே கொண்டு வந்து விடுகிறார். ஆனாலும் விக்ரமுக்கு உடம்பில் பல காயங்கள் ஏற்பட்டதால் அதற்கான மருத்துவத்தை எடுத்து வருகிறார். இதை கேள்விப்பட்ட வேதா, விக்ரமுடன் உணர்ச்சி வசமாக பேசி இருவருடைய காதலையும் பரிமாறிக் கொள்ளும் அளவிற்கு ஒருவரை ஒருவர் புரிந்து கொள்கிறார்கள்.

இதற்கு தான் ஆசைப்பட்டாய் என்பதற்கு ஏற்ப தற்போது விக்ரம் வேதா ஜோடி, மனசார சேர்ந்து விட்டார்கள். ஆனால் இதையே வைத்து தன்வி மனதில் வன்மத்தை கொட்டி விக்ரம் வேதாவிடம் இருந்து தன்வியை பிரித்து விட வேண்டும் என்று மிர்னாலினி பிளான் பண்ணப் போகிறார்.

பாவம் தன்வி இந்த குழப்பத்தில் இருந்து எப்படி மீள போகிறார். ஒருவேளை பெற்ற தாய் சொல்வதைக் கேட்டு விக்ரம் வேதாவிடம் இருந்து விலகுவாரா அல்லது வேதாவை புரிந்து கொண்டு விட்டுக் கொடுக்காமல் மகளாகவே கூட இருக்கப் போகிறாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்