எம்ஜிஆரை துப்பாக்கியால் சுட்ட எம் ஆர் ராதா.. காரணத்தைக் கேட்டு மிரண்டு போன கோலிவுட்

தமிழ் சினிமாவில் ரத்தக்கண்ணீர் எம் ஆர் ராதாவை தெரியாதவர்கள் யாருமே இருக்க முடியாது. அதேபோல் தற்போது வரை சினிமாவைத் தாண்டி அரசியலில் அடையாளமாக இருப்பவர் எம்ஜிஆர் தான்.

இன்றளவும் அவர் தொடங்கி வைத்த கட்சி அதிமுக என்ற பெயரில் ஆட்சி செய்து வருகிறது. எம்ஜிஆர் மற்றும் எம்ஆர்ராதாவிற்கு இடையே நல்ல நட்பு இருந்து வந்துள்ளது. எம்ஜிஆர் நடிப்பில் ‘பெற்றால்தான் பிள்ளை’ என்ற படம் எம்ஜிஆர் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்றது.

இந்த படத்திற்கு பின்னர் வாசு என்ற தயாரிப்பாளரிடம் மீண்டும் எம்ஜிஆரை வைத்து படம் எடுக்குமாறு எம் ஆர் ராதா கூறியுள்ளார். அடுத்த படத்திற்கான பேச்சுவார்த்தை எம்ஜிஆரின் நந்தம்பாக்கம் வீட்டில் வைத்து நடைபெற்றுள்ளது.

அப்போது வாக்குவாதம் முற்றி போய் எம் ஆர் ராதா உணர்ச்சிவசப்பட்டு தனது கைத்துப்பாக்கியை எடுத்து எம்ஜிஆரின் கழுத்துப்பகுதியில் சுட்டுள்ளார். அவர் சுட்டது மட்டும் இல்லாமல் தன்னை தானே சுட்டுக் கொண்டாராம் பிறகு தற்கொலைக்கு முயற்சியும் செய்துள்ளார் எம் ஆர் ராதா.

இவர்களுக்கு இடையே என்ன பிரச்சனை என்று பார்த்தால் எம்ஜிஆரை தவறாக சித்தரித்து நாளிதழ் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனால் எம்ஜிஆர் மற்றும் எம்ஆர் ராதாவுக்கு இடையை பெரும் வாக்குவாதம் முற்றி போய் துப்பாக்கி சூடு வரை சென்று விட்டதாம்.

இருவரும் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். எம்ஜிஆரை சுட்டது எம் ஆர் ராதா தான் என்ற ஆவேசத்தில் எம் ஆர் ராதாவின் சொத்துக்கள் அடித்து நொறுக்கப்பட்டன. ஏதோ ஒரு கோவத்தில் சுட்டு விட்டதாகவும் அந்த குற்ற உணர்வு அதிகமாகி தன்னைத்தானே சுட்டு கொண்டாராம்.

பின் போலீஸ் விசாரணையில் எம்ஆர் ராதா தான் குற்றவாளி என்று உறுதி செய்யப்பட்டு ஏழு ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது. ஆனால் 5 ஆண்டில் எம் ஆர் ராதா வெளியில் வந்துவிட்டார். அதன் பிறகு திருச்சிராப்பள்ளியில் உள்ள வீட்டில் வாழ்ந்து வந்த போது ஜான்டிஸ் நோயால் பாதிக்கப்பட்டு இறந்தார் எம் ஆர் ராதா.

இன்னும் ஆச்சரியம் என்னவென்றால் எம் ஆர் ராதா ஒரு சின்ன அறிக்கை வெளியிட்டாலும் அதில் பெரும் சர்ச்சை இருக்குமாம். அப்போதைய அரசு இதை தடுத்து நிறுத்துவதற்காக  அரசாணையை கூட புதிய சட்டமாக கொண்டுவந்துள்ளனர். இந்த சம்பவத்தை கேட்ட கோலிவுட் வட்டாரங்கள் வாயடைத்துப் போய் விட்டனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்