200 நாட்களைத் தாண்டி வெற்றிகரமாக ஓடிய 7 படங்கள்.. இதுல உங்க ஃபேவரிட் ஹீரோ யாரு.?

பாரதிராஜா இயக்கத்தில்1978ல் வெளியான கிழக்கே போகும் ரயில் இத்திரைப்படத்தில் கதாநாயகியாக ராதிகா அறிமுகமாயிருப்பார். இப்படம் 200 நாட்கள் தாண்டி வெற்றிகரமாக ஓடியது.

ரஜினிகாந்த்: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் திரைப்படங்கள் மாப்பிள்ளை, பாட்ஷா,அண்ணாமலை, படையப்பா ,சந்திரமுகி திரைப்படங்கள் 200 நாள்கள் தாண்டி திரையரங்குகளில் நல்ல வரவேற்பு பெற்ற படங்கள்.

கமலஹாசன்: நாயகன் கமலஹாசனின் 1989 இல் வெளியான அபூர்வ சகோதரர்கள்,1982-ல் வெளியான வாழ்வே மாயம் மற்றும் மூன்றாம் பிறை,1980களில் குரு ஆகிய திரைப்படங்களும் வெற்றிப் படமாக அமைந்தது.

மோகன்: மோகன் அவர்களின் அதிக திரைப்படங்கள் திரையரங்குகளில் அதிக நாட்கள் திரையிடப்பட்டன. விதி,பயணங்கள் முடிவதில்லை,மௌன ராகம் போன்ற படங்கள் அதிக நாட்கள் ஓடின.

விஜயகாந்த்: புரட்சிக் கலைஞர் விஜயகாந்தின் திரைப்படங்கள் 1990ல் வெளியான புலன் விசாரணை,1992 இல் வெளியான சின்ன கவுண்டர் அதிக நாள் ஓடி வசூல் சாதனை படைத்தது.

ராமராஜன்: 1989 இல் வெளியான கரகாட்டக்காரன் இத்திரைப்படத்தில் ராமராஜன் ,கனகா, கவுண்டமணி,செந்தில், கோவை சரளா போன்றோர் நடித்திருந்தனர். இப்படம் திரையரங்குகளில் அதிக நாள் ஓடியது.

சரத்குமார்: 1998 இல் வெளியான நட்புக்காக திரைப்படத்தில் விஜயகுமார் மற்றும் சரத்குமார் நடித்திருந்தனர். இது வெற்றிப்படமாக அமைந்தது.சரத்குமார் நடித்த நாட்டாமை, சூரியவம்சம் போன்ற திரைப்படங்கள் அதிக நாட்கள் ஓடி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

sarath-kumars-new-photoshoot
sarath kumar

விஜய், அஜித்: தளபதி விஜய் தல அஜித் ஆகிறது திரைப்படங்கள் 1996 இல் வெளியான பூவே உனக்காக, காதல் கோட்டை ஆகிய திரைப்படங்கள் 200 நாட்களுக்கு மேல் ஓடி வசூல் சாதனை படைத்தது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்