ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 10, 2024

கிளைமாக்ஸ் வரை கணிக்க முடியாத 8 படங்கள்.. எப்படி இந்த மாதிரி கதைகள யோசிக்கிறாங்க!

தமிழ் சினிமாவில் பல திரைப்படங்கள் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும் சில திரைப்படங்கள் படத்தை பார்க்கும் மக்களை இறுதிவரை ஒரு பரபரப்புடன் வைத்திருக்கும். அப்படி ரசிகர்களை படத்தின் இறுதி வரை ஒரு வித எதிர்பார்ப்புடன் சீட்டின் நுனியில் அமர வைத்த சில படங்கள் இருக்கிறது. அப்படி கிளைமாக்ஸ் வரை நாம் கணிக்க முடியாத பல சுவாரசியங்கள் அடங்கிய திரைப்படங்களை பற்றி நாம் காணலாம்.

பிளான் பி : கொரியன் திரைப்படமான இப்படம் தமிழில் திட்டம் 2 என்ற பெயரில் வெளியானது. அதில் ஆண் தன்மை இருக்கும் ஒரு பெண் தன் குடும்பத்தால் சந்திக்கும் பிரச்சனை பற்றி தெளிவாக காட்டப்பட்டிருக்கும். தன்னுடைய தோழியை காணாமல் தேடும் போலீஸ் அதிகாரியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருப்பார். இறுதியில் தான் காதலிக்கும் நபர் தான் தன் தோழி என்று தெரிய வரும் ஐஸ்வர்யா பிறகு என்ன முடிவு எடுப்பார் என்பதை சுவாரஸ்யமாக காட்டியிருக்கும் இந்தத் திரைப்படம்.

பென்குயின் : கீர்த்தி சுரேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இத்திரைப்படம் பல சுவாரசியங்களுடன் திகில் கலந்து எடுக்கப்பட்டிருக்கும். ஆறு வருடங்களாக தன் மகனை காணாமல் தவிக்கும் கீர்த்தி சுரேஷ் தன் மகனை எப்படி கண்டுபிடிக்கிறார், யார் கடத்தினார்கள் என்பதை பற்றிய கதை தான் இப்படம். இறுதி காட்சி வரை மிகவும் சஸ்பென்ஸாக இருக்கும் இந்தப் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

துருவங்கள் பதினாறு : இப்படத்தில் தற்கொலையாக மாற்றப்பட்ட ஒரு கொலையை கண்டுபிடிக்கும் போலீஸ் அதிகாரியாக நடிகர் ரகுமான் நடித்திருப்பார். குடிபோதையில் இருக்கும் மூன்று இளைஞர்களின் காரில் மோதி ஒருவர் இறந்து விடுவார். பின்னர் நடக்கும் சம்பவங்களையும், இந்த கொலையை ரகுமான் எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதை பல ட்விஸ்ட்களுடன் சொல்கிறது இந்த படம்.

இயற்கை : இப் படத்தில் ஹீரோ அருண் விஜய்யை மூன்று வருடமாக காதலிக்கும் குட்டி ராதிகாவை மற்றொரு ஹீரோ ஷாம் காதலிப்பார். இந்த இருவரில் ஹீரோயின் யாரை திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்பதை பல திருப்பங்களுடன் இப்படம் காட்டியிருக்கும்.

கோ : பத்திரிகையாளரான நடிகர் ஜீவா வளர்ந்து வரும் தன் நண்பனின் கட்சிக்கு ஆதரவு கொடுப்பார். எதிர்பாராதவிதமாக ஜீவாவின் தோழி ஒரு கலவரத்தில் சிக்கி இறந்து விடுவார். அந்த கொலையை கண்டுபிடிக்கும் ஜீவாவிற்கு தன் நண்பன் தான் இதை செய்தது என்ற உண்மை தெரிய வரும். இறுதியில் ஜீவா என்ன முடிவெடுப்பார் என்பதை மிகவும் சுவாரசியமாக கொடுத்திருப்பார் இயக்குனர். இப்படம் ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றது.

மௌனம் பேசியதே : தனக்கு ஏற்படும் சில சம்பவங்களை வைத்து ஹீரோயின் திரிஷா தன்னை காதலிப்பதாக நடிகர் சூர்யா தவறாக நினைத்து விடுவார். இதனால் ஏற்படும் குழப்பங்களையும், இறுதியில் இந்த குழப்பத்தை ஏற்படுத்தியது யார் என்பதை பற்றியும் பல எதிர்பார்ப்புடன்  கொடுத்திருக்கும் இந்த படம். திரிஷா அறிமுகமான இப்படம் அவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது.

பீட்சா: நடிகர் விஜய் சேதுபதியின் மாறுபட்ட நடிப்பில் உருவாகி இருந்தது இந்த படம். அதில் விஜய் சேதுபதி தன் காதலியுடன் சேர்ந்து தான் வேலை செய்யும் முதலாளியிடம் இருக்கும் வைரத்தை திருடி விடுவார். பின்னர் தன் மாட்டிக் கொள்ளாமல் இருக்க ஒரு திகில் கதையை உருவாக்கி அனைவரையும் நம்ப வைப்பார். பல திகிலுடன் வெளியான இந்த திரைப்படம் விஜய் சேதுபதிக்கு ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது.

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் : ஆன்லைன் மோசடியில் ஈடுபடும் இரண்டு ஹீரோக்களாக துல்கர் சல்மான் மற்றும் விஜய் டிவி ரக்ஷன் நடித்திருப்பார்கள். இவர்களால் போலீஸ் அதிகாரியான கௌதம் வாசுதேவ் மேனன் பாதிக்கப்படுவார். பின்னர் நடக்கும் சம்பவங்களை மிகவும் ரொமான்டிக்காக த்ரில்லர் கலந்து கொடுத்திருப்பார் இயக்குனர்.

இந்த திரைப்படங்கள் அனைத்தும் திகிலுடன் பல எதிர்பாராத திருப்பங்களை கொண்டு இருக்கும். எதார்த்தமான திரைக்கதையை கொண்ட இந்த படங்கள் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றன.

- Advertisement -spot_img

Trending News