அதிக ரசிகர் பட்டாளத்தை கொண்ட 9 நடிகர்களின் லிஸ்ட்.. முதல் ஐந்து இடத்திற்குள் வரத் துடிக்கும் சிம்பு, சிவா

வணக்கம் சினிமாபேட்டை வாசகர்களே. நமது வலைதளத்தில் தொடர்ந்து பல சுவாரசியமான சினிமா செய்திகளை கண்டு வருகிறோம். அந்த வகையில் தமிழ் சினிமாவில் கோலோச்சிய நடிகர்களும் அவர்களுக்கு இருந்த பெரும் ரசிகர் கூட்டத்தை பற்றியும் தற்போது காணலாம். இந்த வரிசையில் இருந்து புரட்சித்தலைவர் எம்ஜிஆர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஆகிய இருவரையும் சேர்த்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. அவர்களுக்கு இருந்த ரசிகர் கூட்டம் பற்றி தனி கட்டுரையே எழுத வேண்டியதாக இருக்கும்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்: அபூர்வராகங்கள் எனும் திரைப்படத்தில் துணைக் கதாபாத்திரத்தில் அறிமுகமாகி பின்னர் குணசித்திர வேடம், வில்லன், கதாநாயகன் என்று கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி இன்று தமிழகத்தின் சூப்பர் ஸ்டாராக திகழ்பவர் ரஜினிகாந்த் அவர்கள். குட்டு பட்டாலும் மோதிர கையால் குட்டு பட வேண்டும் என்ற வாசகத்திற்கு ஏற்ப கே பாலச்சந்தர் அவர்களால் அறிமுகம் செய்யப்பட்ட இவர் இன்று வரை வசூல் சக்கரவர்த்தியாக நிலைத்திருக்கிறார். இவர் நடித்த பல திரைப்படங்கள் தயாரிப்பாளர்கள் பலருக்கு மாபெரும் வசூலை கொடுத்தது என்றால் அது மிகையல்ல

உலக நாயகன் கமல்ஹாசன்: தமிழ் சினிமாவில் அதிக புதிய முயற்சிகளை மேற்கொண்டவர் கமல்ஹாசன். இவர் போடாத வேஷம் இல்லை ஏற்காத கதாபாத்திரம் இல்லை என்று சொல்லுமளவிற்கு அனைத்து விதமான ரொல்களிலும் திறம்பட நடித்து இருப்பவர். அபூர்வ சகோதரர் படத்தில் குள்ள கமல் ஆகவும், தசாவதாரத்தில் பத்து வேடங்களில், ராஜபார்வையில் கண் தெரியாதவர் என நடிப்பில் பின்னி பெடலெடுத்திருக்கிறார். சமீபத்தில் வெளியான விக்ரம் திரைப்படம் தமிழகத்தின் அனைத்து வசூல் சாதனைகளை முறியடித்தது என்பது குறிப்பிடத்தக்கது. சினிமாவில் சம்பாதிப்பதை சினிமாவிலேயே போடுபவர். இவருக்கு என்று இருக்கும் ரசிகர்கூட்டம் நேரம் வரும்போதெல்லாம் தனது பலத்தை காட்டும்.

தளபதி விஜய்: குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி கதாநாயகன், பின்னணி பாடகர், சிறந்த நடனக் கலைஞர் என்று பன்முகம் கொண்டவர் விஜய் அவர்கள். தந்தை எஸ்ஏ சந்திரசேகர் அவர்கள் அறிமுகளால் செய்யப்பட்ட விஜய் அவர்கள் தொடர்ந்து பல நல்ல டைரக்டர்கள், நல்ல கதைகள், என்று தேர்ந்தேடுத்து நல்ல திரைப்படங்களை தமிழ் சினிமாவில் கொடுக்கலானார். இவர் நடித்த பல திரைப்படங்கள் வசூலில் மாபெரும் வெற்றி பெற்றது. இதன் காரணமாக இவருடைய ஒவ்வொரு படத்தையும் தயாரிப்பதற்கு முதலீட்டாளர்கள் முண்டியடித்துக் கொள்வார்கள். சற்று முன் வாரிசு என்னும் அவரது அடுத்த படத்திற்கான தலைப்பு வெளியானது குறிப்பிடத்தக்கது

தல அஜித் குமார்: தல அஜித் குமார் மெக்கானிக் ஆக வாழ்க்கையை தொடங்கி மாடலிங் துறையில் நுழைந்து பின்னர் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். கார் ரேசிங், பைக் ரேசிங், போட்டோகிராபி என்று பலதுறைகளிலும் பிரகாசிக்கும் அஜித் அவர்கள் உடன் நடித்த ஷாலினியை காதலித்து கரம் பிடித்தார். தொடர்ந்து முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் அஜித், அவ்வபோது மோட்டார் சைக்கிளில் தூரதேச பயணங்களுக்கு செல்வதை பிரியமாக கொண்டுள்ளார். இவர் நடித்த பல திரைப்படங்கள் மாபெரும் வெற்றி பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

சூர்யா: நடிகர் சிவகுமார் அவர்களின் மகனான சரவணன் என்பவர் சூர்யா என்னும் சினிமா பெயருடன் உள்ளே நுழைந்தார். ஆரம்பத்தில் நடிக்கவும் நடனம் ஆடவும் மிகவும் கஷ்டப்பட்டார். காலப்போக்கில் தன்னைத்தானே வளர்த்துக்கொண்ட சூர்யா தொடர்ந்து வித்தியாசமான கதைகளை வித்தியாசமான கெட்டப்புகளில் நடித்து புகழ் பெற்றார். இவர் நடித்து வெளியான சூரரைப்போற்று திரைப்படம் மாபெரும் வெற்றியைப் பெற்றது. நடிப்பதுடன் தொடர்ந்து பல சுவாரசியமான சினிமாக்களை தயாரித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஜோதிகாவை காதல் திருமணம் புரிந்த இவர் அவரது நடிப்புக்கு முட்டுக்கட்டை இடுவதில்லை.

தனுஷ்: இயக்குனர் கஸ்தூரிராஜாவின் மகன் தனுஷ், துள்ளுவதோ இளமை திரைப்படம் மூலமாக அறிமுகமானார். அந்த படத்தில் திரைக்கதை ஆசிரியராக செல்வராகவன் அறிமுகம் ஆனார். அந்த படத்தை இயக்கியதே செல்வராகவன் தான் என்பது தான் பரவலான கருத்து. அப்போது தொடங்கி பல படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார் தனுஷ். அதுவும் வெற்றிமாறனுடன் கூட்டணி அமைத்து அவர் நடித்த பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன் போன்ற படங்களில் நடிப்பால் மிரட்டி இருப்பார். அதே நேரம் தனக்கான ரசிகர் கூட்டத்திற்காக மாரி, பட்டாஸ் போன்ற கமர்சியல் படங்களையும் கொடுக்க தவறுவதில்லை. தனுஷ் அவர்களுக்கு அதிகமான இளம் ரசிகர்கள் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

சிவகார்த்திகேயன்: சின்னத்திரையில் தனது திறமையால் அறிமுகமாகி, பின்னர் தொகுப்பாளராகி, பெரிய ரசிகர் கூட்டத்தை அப்போதே உருவாக்கி, சினிமாவில் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி முன்னேறி வந்தவர் சிவகார்த்திகேயன். தனுஷ் நடிப்பில் வெளியான 3 படத்தின் மூலம் நகைச்சுவை வேடத்தில் அறிமுகமானாலும், அடுத்தடுத்த படங்களிலேயே ஹீரோவாக முன்னேறினார். தொடர்ந்து அவர் நடித்த படங்களும் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றி பெற்றன. ரஜினிகாந்தின் தீவிர ரசிகரான இவர், தொடர்ந்து தனது ரசிகர்களை, அவரைப்போலவே திருப்தி செய்து வருகிறார் என்றால் அது மிகையல்ல.

சிலம்பரசன்: எஸ்.டி.ஆர், சிம்பு என்று பல பெயர்களில் அழைக்கப்படும் சிலம்பரசன், தந்தை டி.ராஜேந்தரால் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் செய்யப்பட்டவர். சிறுவனாக இருந்தபோதே ‘ஐயம் ஏ லிட்டில் ஸ்டார், ஆவேன் நான் சூப்பர்ஸ்டார்’ என்று ஆடிப்பாடி வந்தவர். இவர் நடித்த பல படங்கள் ஹிட் அடித்தது. ஆயினும் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயல்பட்டிருந்தால் பல நடிகர்களையும் தாண்டி முன்னேறி இருப்பார். இவருக்கென்று தனி ரசிகர்கூட்டம் உண்டு.

விஜய் சேதுபதி: மக்கள் செல்வன் என்று அன்புடன் அழைக்கப்படும் விஜய் சேதுபதி, பலவிதமான கதாபாத்திரங்களை ஏற்று நடிப்பதில் வல்லவர். ஹீரோ, வில்லன், குணசித்திர வேடம், முதியவர் என்று எந்த கதாபாத்திரத்திலும் இமேஜ் பார்க்காமல் நடிப்பவர். சமீபத்தில் கூட விஜய், கமல் போன்றோருக்கு வில்லனாக நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கும் நடிப்பின் காரணாமாக பல ரசிகர்கள் உண்டு. சமீபத்தில் கூட கேரளா சென்றபோது திரண்ட கூட்டத்தை பார்த்து மிரண்டுவிட்டார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

Next Story

- Advertisement -