தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்களுக்கு ரசிகர்களிடையே அதிக வரவேற்பு உள்ளது. ஆனால் தற்போது covid காரணமாக தொடர்ந்து எடுப்பதே பெரும்பாடாக மாறியுள்ளது. எனினும் எப்பாடுபட்டாவது ரசிகர்களின் விருப்பத்தை நிறைவேற்றி வருகின்றனர். தொலைக்காட்சிகளில் நடிக்கும் ஒவ்வொரு கதாபாத்திரமும் மக்களிடையே பிரபலமாகி வருவது இயல்பான ஒன்று.
விஜய் தொலைக்காட்சி மக்களிடையே மிகவும் பிரபலமடைந்தது. ரியாலிட்டி ஷோக்களை அதிகமாக இடம்பெற்றிருந்த நிலையில் சமீபகாலமாக பல ரசிகர்களை ஈர்த்துள்ளது. தொடர்கள் பெரும்பாலும் திரைப்பட டைட்டில்களை கொண்டுள்ளது .
வேலைக்காரன், ஈரமான ரோஜாவே ,சின்னத்தம்பி, நாம் இருவர் நமக்கு இருவர், ராஜாராணி போன்றவை சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கும் தொடர்களில் சில இதில் பாக்கியலட்சுமி என்ற தொடர் குடும்ப கதையை மையமாகக் கொண்டுள்ளது.
குடும்பத் தலைவியின் பொறுப்பையும் முக்கியத்துவத்தையும் உணர்த்தும் வகையில் பாக்யலட்சுமி தொடர் அமைந்துள்ளது. இதில் முக்கிய கதாபாத்திரமான பாக்கியலட்சுமி என்னும் பெயரில் சுசித்ரா, கோபியாக சதீஷும் நடிக்கிறார்கள் .இவர்களில் மருமகள் ஜெனியாக திவ்யா கணேஷ் நடிக்கிறார். ஜெனியின் அம்மாவாக நடிப்பவர் “மோனா பத்ரா “.
இவர் கர்நாடகாவை பூர்வீகமாகக் கொண்டவர். பல திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். மேலும் பல தொடர்களில் சிறப்பாக நடித்திருக்கிறார். இருப்பினும் தற்போது இவருடைய புகைப்படம் காட்டு தீயாக பரவி வருகிறது. நாற்பது வயதை எட்டிய இவர் 40 வயது போல் இல்லாமல் மிகவும் இளமையான தோற்றத்தை உடையவர். மோனா பத்ரா நீச்சல் குளத்தில் இருப்பது போல புகைப்படங்களை வெளியிட்டு உள்ளது வைரலாக பரவி வருகின்றது.