தம்பின்னு கூட பார்க்காமல் மாஸ் படத்தை அலமாரியில் பூட்டிய மோகன் ராஜா.. பெரிய இடத்தில் இருந்து வந்த குட் நியூஸ்

Big Call for Mohan Raja: மோகன் ராஜா ரீமேக் படங்கள் மட்டும்தான் எடுப்பார். அதுதான் அவருக்கு கைவந்த கலை மற்றபடி அவரிடம் சரக்கு இல்லை என ஒரு காலத்தில் மொத்த திரையுலகமும் கொட்டி தீர்த்தது. அதற்கு ஏற்றார் போல் அவரும் நிறைய ரீமேக் படங்களை எடுத்து வெற்றி கண்டார்.

அவர்கள் வாய்க்கு வெத்தலை போடுவது போல், ஜெயம், எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்ரமணியம் என இவர் எடுத்த எல்லா படங்களுமே ரீமேக் படங்கள் தான். அத்தனை படங்களும் சூப்பர் ஹிட் ஆகி இவருக்கு ரீமேக் இயக்குனர் என பெயர் வாங்கி கொடுத்தது.

M. Kumaran Son of Mahalakshmi (2004)
Unakkum Enakkum (2006)
Santosh Subramaniam (2008)
Jayam (2003)
Thillalangadi (2010)
Velayudham (2011)

ஆனால் இந்த பேச்சுக்களை பொய்யாக்கினார் மோகன் ராஜா. எனக்கு ரீமேக் படங்கள் மட்டுமல்ல தனியாக படங்களும் எடுக்கத் தெரியும் என இரண்டு சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து மொத்த கோடம்பாக்கத்தில் வாயையும் அடைத்தார். தனி ஒருவன் மற்றும் வேலைக்காரன் இரண்டு படங்களும் இவருடைய சொந்த இயக்கம்.

தனி ஒருவன் படம் அவருடைய தம்பி ஜெயம் ரவியை வைத்து எடுத்தார். இந்த படம் ஜெயம் ரவி கேரியரையே திருப்பி போட்டது. அவருக்கு ஒரு பிளாக்பஸ்டர் ஹிட்டாகி அண்ணன் தம்பி இருவரையும் வேறு ஒரு இடத்தில் கொண்டு போய் வைத்தது. ஏஜிஎஸ் நிறுவனம் தான் இந்த படத்தை தயாரித்தது.

தற்சமயம் தனி ஒருவன் 2 எடுக்கும் திட்டத்தில் ஏஜிஎஸ் மற்றும் மோகன் ராஜா இறங்கினார்கள். ஆனால் இப்போது இருக்கும் ஜெயம் ரவியின் மார்க்கெட்டை கருத்தில் கொண்டு மோகன் ராஜா சொன்ன பட்ஜெட்டுக்கு ஏஜிஎஸ் ஒத்துப் போகவில்லை. இதனால் இப்பொழுது மோகன் ராஜா இந்த படத்தை அலமாரியில் வைத்து விட்டார்.

பெரிய இடத்தில் இருந்து வந்த குட் நியூஸ்

அது மட்டுமில்லாமல் பெரிய இடத்தில் இருந்து மோகன் ராஜாவுக்கு அழைப்பு வந்திருக்கிறது. அந்த மீட்டிங்கும் வெற்றியில் முடிந்துள்ளது. அஜித் தான் மோகன் ராஜாவை அழைத்து கதை கேட்டுள்ளார். குட் பேட் அக்னி படத்திற்கு அப்புறம் ஒன்னு சிறுத்தை சிவா படம் இல்லை மோகன் ராஜா படம் இந்த யோசனையில் தான் இப்பொழுது அஜித் இருக்கிறார். மோகன் ராஜா சொன்ன கதை அஜித்துக்கு பிடித்து விட்டதாம்.

அண்ணன் தம்பியை புரட்டி எடுக்கும் சினிமா

- Advertisement -