சிக்கலில் மாட்டிய மோகன் ராஜா.. தனக்கு தானே ஆப்பு வைத்துக் கொண்ட ஜெயம்ரவி

தனி ஒருவன் போன்ற பல திரைப்படங்களை இயக்கி இருக்கும் மோகன் ராஜா தற்போது தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியை வைத்து காட்பாதர் என்ற படத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார். மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளிவந்து மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற லூசிபர் திரைப்படத்தின் ரீமேக் தான் இப்படம்.

இந்த படத்தில் சிரஞ்சீவியுடன் இணைந்து சல்மான்கான், நயன்தாரா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். அதில் ஒரு பாடல் காட்சியில் மட்டும் சல்மான் கான் நடிக்க இருக்கிறார். அந்த பாடல் காட்சியை படமாக்குவதற்காக சல்மான் கான் ஒட்டுமொத்த படக்குழுவையும் மும்பைக்கு வரச் சொல்லி அங்கு ஷூட்டிங் நடத்தலாம் என்று கூறிவிட்டாராம்.

இதனால் மொத்த பட குழுவும் தற்போது மும்பைக்கு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் அதில் தான் ஒரு பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. என்னவென்றால் இந்த படத்திற்கு பிரபல கேமரா மேன் நீரவ் ஷா தான் ஒளிப்பதிவு செய்து கொண்டிருக்கிறார். ஆனால் அவர் மும்பைக்கு வர முடியாது என்று கண்டிப்பாக கூறிவிட்டாராம்.

ஏனென்றால் அவர் இந்த படத்திற்காக நிறைய தேதிகளை ஒதுக்கி கொடுத்திருக்கிறார். அந்த தேதிகள் அனைத்தும் தற்போது முடிந்த நிலையில் மும்பைக்கு வந்து பாடல் காட்சிகளை படமாக்க வேண்டும் என்ற கருத்துக்கு அவர் மறுப்பு தெரிவித்து இருக்கிறார்.

நீரவ் ஷா சல்மான்கானின் ஆஸ்தான கேமரா மேன். ஆனால் அவர் தற்போது மறுப்பு தெரிவிப்பதால் காட்பாதர் திரைப்படம் முடிவடையாமல் இழுத்துக் கொண்டே போகிறது. இதனால் இயக்குனர் மோகன் ராஜாவுக்கும் சில சிக்கல்கள் எழுந்துள்ளது.

அதாவது மோகன் ராஜா இந்த படத்தை முடித்துவிட்டு ஜெயம் ரவியை வைத்து தனி ஒருவன் 2 திரைப்படத்தை இயக்க திட்டமிட்டு இருந்தார். ஜெயம் ரவிக்கும் சமீப காலமாக எந்த திரைப்படங்களும் பெரிய அளவில் வெற்றியை கொடுக்கவில்லை. இதனால் அவர் ஒரு மிகப்பெரிய வெற்றிக்காக காத்துக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் மோகன் ராஜா காட்பாதர் பட சிக்கலில் மாட்டிக்கொண்டிருப்பதால் ஜெயம் ரவி கடும் அப்செட்டில் இருக்கிறாராம். தற்போது மணிரத்தினம் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தை தான் அவர் பெரிதும் நம்பி இருக்கிறாராம்.

Next Story

- Advertisement -