வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

100 படங்களில் நடித்தும் பிரயோஜனம் இல்லாத சம்பளம்.. தளபதி 68 இல் கூரைய பிசிக்கிட்டு மோகனுக்கு கொட்டிய ஜாக்பாட்

Thalapathy 68: லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ படம் இன்னும் திரையரங்குகளில் வெளிவராமல் இருக்கிறது. அதுக்குள்ள இவருடைய அடுத்த படத்திற்கான வேலையை ஆரம்பித்து விட்டார். அதாவது தளபதி 68 படத்தை வெங்கட் பிரபு கூட்டணியுடன் கமிட் ஆகி இருக்கிறார். இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அத்துடன் 20 வருடங்களுக்குப் பிறகு யுவன் சங்கர் ராஜா விஜய் படத்திற்கு இசையமைக்க போகிறார்.

இப்படி தொடர்ந்து இந்த படத்திற்கான ஒவ்வொரு அப்டேட்டுகளும் கசிந்து கொண்டே வருகிறது. இதற்கிடையில் விஜய் திட்டவட்டமாக வெங்கட் பிரபுவிடம் லியோ படம் ரிலீஸ் ஆகும் வரை எந்த ஒரு அப்டேட்டுகளும் வெளியே வரக்கூடாது என்று கூறியிருக்கிறார். ஆனாலும் விஜய் படத்தை பற்றி எப்படியாவது தகவல்கள் வெளியே வந்து கொண்டே தான் இருக்கிறது.

அந்த வகையில் இதில் முக்கிய வில்லனாக மைக் மோகன் நடிக்க இருக்கிறார். ஆரம்பத்தில் இந்த கதாபாத்திரத்தில் நான் நடிக்கவே மாட்டேன் என்று ரொம்பவே பிடிவாதமாக இருந்தார். ஏனென்றால் 80களில் டாப் ஹீரோவாக 100 படங்களுக்கும் மேல் நடித்த நான் வில்லனாக நடிப்பதா என்று ரொம்பவே ஜம்பமாக வந்த வாய்ப்பை மறுத்துவிட்டார்.

ஆனால் இவரை எப்படியாவது நடிக்க வச்சே ஆக வேண்டும் என்று அதிகமான சம்பளத்தை கொடுப்பதற்கு தயாராகி விட்டார்கள். அந்த வகையில் இதுவரை இவருடைய எந்த ஒரு படங்களிலும் வாங்காத சம்பளத்தை முதல்முறையாக தளபதி 68 படத்தில் வாங்க இருக்கிறார். அதனாலயே நடிப்பதற்கு முழு சம்மதத்தையும் கொடுத்துவிட்டார்.

அப்படி மோகன் வாங்க போகும் சம்பளம் எவ்வளவு என்றால் 2கோடி. இதுதான் இவர் வாங்கக்கூடிய அதிகபட்ச சம்பளம். மேலும் பணத்திற்கு பணமும் ஆச்சு, ரீ என்ட்ரி மூலம் மறுபடியும் தலையை காட்டலாம்.  ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் என்று மோகனுக்கு அடித்த ஜாக்பாட். அதுவும் சாதாரணமாக இல்ல விஜய்க்கு வில்லனாக நடிக்கப் போகிறார்.

அந்த வகையில் எப்படியும் விஜய் படம் டாப்புக்கு போய்விடும். அதை வைத்து மோகன் மறுபடியும் மக்கள் மனதில் இடம் பிடிக்கப் போகிறார். இதன் மூலம் தொடர்ந்து இவருக்கு பல வாய்ப்புகள் வரும். அத்துடன் இந்தப் படத்தில் இவருடைய வில்லத்தனம் நன்றாக இருந்தால் தொடர்ந்து வில்லனாக நடிப்பதற்கு கூட வாய்ப்புகள் இருக்கு. அந்த வகையில் எஸ்ஜே சூர்யா, விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில் மாதிரி கூட மிரட்டலாம்.

- Advertisement -

Trending News