சித்ரா இறந்த பிறகு பாண்டியன் ஸ்டோர் சீரியலில் காணாமல் போன கதிர்.. விழி பிதுங்கி நிற்கும் விஜய் டிவி

விஜய் டிவியில் கொடிகட்டி பறக்கும் சீரியல் என்று பார்த்தால் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தான். இந்த சீரியலில் கூட்டுக் குடும்பத்தின் பாசமும் அன்பையும் வெளிப்படும் விதமாக காட்சிகள் அமைக்கப்பட்டு தமிழ் ரசிகர்களிடம் மிகப்பெரிய பாராட்டைப் பெற்றது.

இந்த சீரியலில் நடித்த நடிகர்கள் அனைவரும் சினிமாவின் அடுத்த கட்டத்திற்கு சென்று விட்டனர் என்று கூட கூறலாம். ஒரு சில நடிகர்கள் விளம்பரங்களிலும் மற்றும் ஒரு சிலர் சினிமாவிலும் நடித்து வருகின்றனர்.

குறிப்பாக தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கதிர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் குமரனுக்கு வெள்ளித்திரையில் பட வாய்ப்பு கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஏனென்றால் இந்த சீரியலில் சில நாட்களாக கதிர், குமரேசனுக்கு உடல்நிலை சரியில்லை என்ற காரணத்திற்காக ஊருக்கு சென்றிருப்பதாக கதை நகர்கிறது. ஆனால் கதிர் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஒரு பிரேக் எடுத்துக்கொண்டு திரைப்படத்தின் படப்பிடிப்பிற்கு சென்றிருப்பதாக தெரிகிறது.

kumaran-cinemapettai

இவர் ஏற்கனவே 2015ஆம் ஆண்டு வெளியான ‘இது என்ன மாயம்’ என்ற திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமில்லாமல் ஒரு சில குறும் படங்களிலும் இவர் தனது அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.

ஆனால் தற்போது கதிர் கமிட்டாகும் பட வாய்ப்பை குறித்து எந்த தகவலும் இதுவரை அவர் வாய் திறக்கவில்லை. மேலும் கதிர் நடிப்பது மட்டுமல்லாமல் நடனத்திலும் கெட்டிக்காரர். ஆகையால் அவர் வெள்ளித்திரையில் தனது திறமையினால் எளிதாக முன்னேறுவதற்கு அதிக வாய்ப்பிருக்கிறது.

இவர் மட்டுமல்ல இந்த சீரியலில் ஜீவா கதாபாத்திரத்தில் நடித்த வெங்கட்டிருக்கும் தளபதி விஜய்யின் வீட்டில் இருந்து அழைத்து வந்ததாகவும், விரைவில் அவர் எஸ்ஏ சந்திரசேகர் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக கடந்த செப்டம்பர் மாதத்தில் தகவல்கள் வெளியானது.

pandian-stpre-cinemapettai

அதேபோல் சமீபத்தில் தற்கொலை செய்து கொண்ட நடிகை சித்ராவிற்கு வெள்ளித்திரை வாய்ப்புகள் எக்கச்சக்கமாக குவிந்தது. மேலும் அவர் நடிப்பில் உருவாகியுள்ள ‘கால்ஸ்’ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி யூடியூபில் நல்ல வரவேற்ப்பை பெற்றதும் அனைவரும் அறிந்ததே.

ஆகையால் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் உள்ள பிரபலங்களுக்கு தற்போது தொடர்ந்து ஜாக்பாட் அடித்து வருகிறது என்றுதான் சொல்லவேண்டும்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்