சமீபகாலமாக யூடியூபில் வீடியோக்கள் செய்து கொண்டிருந்த நபர்கள் நேரடியாக சினிமாவில் தடம் பதிக்கத் தொடங்கி விட்டன. மேலும் குறிப்பிட்ட சில கதாபாத்திரங்களிலும், காமெடி வேடங்களிலும் தொடர்ந்து நடித்து வருகின்றனர்.
யூடியூப்பில் ஹீரோவாக வலம் வரும் சிலருக்கு புதிய பட வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. அந்த வகையில் தென்னிந்திய சினிமாவின் நம்பர் ஒன் யூடியூப் சேனலான மைக் செட் பிரபலம்தான் ஸ்ரீராம்.
இவரது நகைச்சுவை வீடியோக்கள் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. மற்ற யூடியூப் பிரபலங்களை காட்டிலும் ஸ்ரீராம் சேனலுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருந்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் அவரது ஒவ்வொரு வீடியோவும் பல மில்லியன் பார்வையாளர்களை குவித்து வருகிறது.
இந்நிலையில் அவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன. முதலில் பிளாக் ஷிப் சேனல் நபர்களுடன் இணைந்து ராக்போர்ட் என்டர்டைன்மென்ட் நிறுவனத்திற்காக ஒரு படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார்.
அதனை தொடர்ந்து தற்போது வேறு ஒரு படத்திலும் ஹீரோவாக கமிட்டாகியுள்ளார் மைக் செட் ஸ்ரீராம். அந்த படத்தில் மைக் செட் ஸ்ரீராமுக்கு ஜோடியாக கயல் ஆனந்தி நடிக்க உள்ளது தான் தற்போது கோலிவுட் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவைப் பொருத்தவரை கயல் ஆனந்தி ஒரு லக்கி ஹீரோயின் தான். இந்நிலையில் சினிமாவில் என்ட்ரி கொடுக்கும் மைக் செட் ஸ்ரீராம் அடுத்த சிவகார்த்திகேயனாக மாறுவாரா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.