சிவாஜியின் காதலை பற்றி சொன்ன எம் ஜி ஆர்.. நாடகத்திலிருந்து கிசுகிசுக்கப்பட்ட நடிகர் திலகம்

Actors Sivaji-MGR: அக்காலத்தில், நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தால் தமிழ் சினிமாவில் வாய்ப்பு கிடைத்து மாபெரும் இடத்தை பிடித்த ஜாம்பவான்களாய் வலம் வந்தவர்கள் தான் சிவாஜி மற்றும் எம் ஜி ஆர். இதற்கிடையே கிசு கிசுக்கப்பட்ட சிவாஜியை குறித்து எம் ஜி ஆர் போட்டு உடைத்து வந்த உண்மையை பற்றிய தகவலை இங்கு காண்போம்.

சிவாஜியை பொறுத்தவரை, நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்த இவர் தன் திறமையால் தான் சினிமாவில் வாய்ப்பு பெற்றவர். அவ்வாறு பெற்ற முதல் வாய்ப்பு தான் பராசக்தி. பராசக்தி படத்தில் கலைஞரின் வசனத்துடன் இவர் நடிப்பு மாபெரும் வெற்றியைப் பெற்றுத் தந்தது.

Also Read: உங்க கூட நடிக்க முடியாது, பாக்யராஜையே ஒதுக்கிய நடிகை.. இமேஜ் பார்த்து கழட்டிவிட்டு சம்பவம்

அதைத்தொடர்ந்து இவர் ஏற்ற எண்ணற்ற படங்களின் வெற்றியினை தொடர்ந்து மக்களால் நடிகர் திலகம் என அழைக்கப்பட்டார். அவ்வாறு நடிப்பை மட்டுமே கொள்கையாய் கொண்டு வாழ்ந்த இவர் சினிமாவில் எந்த பெண்களுடன் கிசு கிசுக்கப்படாதவராய் இருந்து வந்தார்.

ஆயினும் ஒரு பத்திரிக்கை பேட்டியின் போது எம் ஜி ஆர், சிவாஜி மேற்கொண்ட காதல் பற்றிய தகவலை போட்டு உடைத்தார். சினிமாவில் அன்று முதல் இன்று வரை எந்த நடிகையுடனும் கிசுகிசுக்கப்படாத இவர் நாடகத்தில் நடிக்கும் பொழுதே ஒரு பெண்ணை காதலித்ததாக கூறினார்.

Also Read: மூஞ்சிலயே தூக்கி எறிந்த பாக்கியா.. 2ம் பொண்டாட்டியுடன் தலைகுனிந்து வெளியேறிய கோபி அங்கிள்

மேலும் இவரின் காதல் கல்யாணம் வரை சென்று நின்னும் போனதாகவும் எம் ஜி ஆர் கூறினார். ஆம்! அவ்வாறு சிவாஜி தன்னுடன் நாடகக் கலையை மேற்கொள்ளும் போது தன்னுடன் நடித்து வந்த ஒரு நடிகையை காதலித்திருக்கிறார். அதுவும் இவர்களின் காதல் குறுகியகால காதல் அல்ல.

சுமார் கிட்டத்தட்ட நான்கு வருடம் இவர்கள் இருவரும் காதலித்து இருக்கிறார்கள். அவர்களின் பெற்றோர்களின் ஒப்புதல் கிடைக்காததாலும், மேலும் சில பல காரணங்களாலும் இவர்களின் காதல் கைகூடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற சிவாஜியின் காதல் கதையை பல பத்திரிக்கை பேட்டிகளில் எம் ஜி ஆர் வெளிப்படையாகவே கூறியிருக்கிறார்.

Also Read: அட்வகேட் கதாபாத்திரத்தில் அசத்திய 5 நடிகைகள்.. வெண்பாவாக போராடிய ஜோ

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்