எம் ஜி ஆர்ரையே உரசிப் பார்த்த ரசிகர்கள்.. பண்ணை வீட்டில் திருடர்களை துவம்சம் செய்த வாத்தியார்

தமிழ் சினிமாவின் முடிசூடா மன்னனாக திகழ்ந்தவர் நடிகர் எம்.ஜி.ஆர். பெரும் போராட்டங்களுக்கு பின் நடிக்க வாய்ப்பு கிடைத்து நடிக்க தொடங்கிய அவர் குறுகிய காலத்திலேயே ரசிகர்கள் தலையில் வைத்து கொண்டாடும் நடிகராக மாறினார். அவருடைய அந்த திரை பிம்பம் அப்போது மாநில கட்சியாக உருவான தி.மு. கழகத்திற்கு மிகவும் உதவியது. அண்ணாவின் பற்றின் பால் அந்த கட்சியில் இருந்த எம்.ஜி.ஆர். அண்ணாவின் மறைவிற்கு பின் உட்கட்சி பூசலால் கட்சியிலிருந்து விலகி அ.தி.மு.க கட்சியை தொடங்கி தனியாக ஆட்சி பிடித்து பலருக்கும் சிம்ம சொப்பனமாக திகழ்ந்தார்.

அன்று முதல் இன்று வரை அவரை பற்றி பேசாத ஆள் இல்லை. சென்னை ராமாபுரத்தில் அவருடைய வீடு இன்று வரை பாமர மக்களுக்கு பார்க்க ஆசைப்படும் இடங்களில் ஒன்றாகும். எம்.ஜி.ஆர். எப்பொழுதும் சாந்தமாக இருக்க கூடியவர். பெரிதாக யாரிடமும் தன்னுடைய கோபத்தை வெளிக்காட்டி கொள்ள மாட்டார்.

எல்லாவற்றையும் பொருத்து கொள்ளும் அவருக்கு யாரேனும் தேவையில்லாமல் தவறு இழைத்தால் அதை பொருத்து கொள்ளும் மனம் கிடையாது. ஒருவருடன் கோபத்தில் இருக்கும் பட்சத்தில் அவர்களை தன்னுடைய ராமாவரம் இல்லத்திற்கு அழைத்து அடித்து திருத்துவார் எனக்கூறும் கதைகள் உண்டு. இதற்கு ஒரு படி மேலே சென்று, சிலரை அவர் அங்கே அடித்து கொன்று தோட்டத்தில் புதைத்துள்ளார் என்ற கூற்றுகளும் அப்போது சகஜம்.

சமீபத்தில் ஓய்வுபெற்ற காவல் ஆய்வாளர் திரு.வரதராஜன் அவர்கள் பேட்டி ஒன்றில் பேசுகையில், திரு.எம்.ஜி.ஆர் அவர்கள் ஒரு முறை காரில் தன்னுடைய உதவியாளருடன் வெளியூருக்கு சென்று கொண்டு இருந்துள்ளார். அது இரவு நேரம் என்பதால் காரை கொஞ்சம் வேகமாகவே இயக்கியுள்ளனர். சென்று கொண்டிருந்த போது திடீரென நால்வர் அவரது காரை வழிமறித்துள்ளனர். இரவில் அந்த வழியாக போகும் வாகனங்களை மடக்கி பணம் பறிப்பதை வழக்கமாக அவர்கள் கொண்டிருக்கின்றனர்.

காரை வழிமறித்த உடன் வண்டியிலிருந்து இறங்கிய எம்.ஜி.ஆரின் உதவியாளர் அவர்களிடம் என்ன வேண்டும் என வினாவியுள்ளார். பேசிக்கொண்டே நால்வர் ஒருவன் வண்டியின் உள் இருப்பது யார் என பார்க்க தீப்பெட்டியை உரசி உள்ளே பார்த்து எம்.ஜி.ஆர் இருப்பதை கண்டு கொண்டுள்ளனர். அவர்கள் நம்ப வாத்தியார் எனக்கூறி வண்டியிடம் சொல்ல முற்பட எம்.ஜி.ஆரின் உதவியாளர் வண்டியிலிருந்து ஒரு கம்பை எடுத்து அவர்களை தாக்கியுள்ளார்.

உதவியாளரை நிறுத்த சொல்லி எம்.ஜி.ஆர். நீங்கள் ஏன் இவ்வாறு திருடுகீறிர்கள்? என கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் வேலையில்லை அதனால் தான் இப்படி பிழைக்குறோம் என கூறியிருக்கின்றனர். உடனே எம்.ஜி.ஆர் அவர்கள் 1000 ரூபாயை நால்வர் இடம் கொடுத்து இதை வைத்து ஏதாவது வேலை செய்யுங்கள், என்னுடைய ரசிகன் என கூறிக்கொள்ளும் நீங்கள் இனிமேல் திருடக்கூடாது என கூறி பணத்தை கொடுத்து விட்டு சென்றுள்ளார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்