வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

மர்மம் நிறைந்த ‘மூடுபனி’ சோபா மரணம்.. இயக்குனருக்கு சாதகமாக நடந்து கொண்ட எம்ஜிஆர்

சினிமாவை பொறுத்தவரைக்கும் இளம் நடிகைகளின் மரணம் என்பது எப்போதுமே மர்மமாக தான் இருக்கிறது. அவர்கள் எதற்காக இறந்தார்கள், யாரால் இறந்தார்கள் என்ற உண்மை அவர்களுடனே மறைந்து விடுகிறது. கோலிவுட் சினிமாவில் நடிகை சில்க் ஸ்மிதா தொடங்கி, தொலைக்காட்சி நடிகை வி.ஜே சித்ரா வரைக்கும் இதுதான் நடிகைகளின் நிலைமை.

அப்படி இறந்த நடிகைகளில் ஒருவர் தான் ஷோபா. இவருடைய மறைவு தமிழ் சினிமாவுக்கு ஒரு மிகப்பெரிய இழப்புதான். ஒரு நொடியில் முகத்தில் ஆயிரம் உணர்ச்சிகளை காட்டக் கூடிய நடிகை ஷோபா. 17 வயதில் தன்னுடைய சிறந்த நடிப்பினால் ‘பசி’ திரைப்படத்திற்கு தேசிய விருது பெற்றார். எத்தனையோ விருதுகளையும், புகழையும் வாங்கி குவிக்க வேண்டிய இவர் தன் வாழ்க்கையை இளம் வயதில் முடித்துக் கொண்டார்.

Also Read:மறக்கமுடியாத 7 டாப் நடிகைகளின் தற்கொலை.. புன்னகை மன்னன் பாணியில் மரணித்த ப்ரத்யூக்‌ஷா

முள்ளும் மலரும், மூடுபனி, அழியாத கோலங்கள் போன்ற வெற்றிப்படங்களில் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் ஷோபா. இவருக்கும் புகழ்பெற்ற இயக்குனர் பாலு மகேந்திராவுக்கும் காதல் இருந்ததாகவும், சோபாவின் மறைவுக்கு முழுக்க முழுக்க பாலு மகேந்திரா மட்டும்தான் காரணம் என்று அப்போது பேசப்பட்டது. மூடுபனி ரிலீஸ் ஆவதற்கு முன்னரே சோபா இறந்துவிட்டார்.

சோபாவின் மரணத்திற்கு பாலு மகேந்திரா தான் காரணம் என்று அப்போது சினிமா வட்டாரங்களாக இருக்கட்டும், அவருடைய உறவினர்களாக இருக்கட்டும் வெளிப்படையாக சொன்னார்கள். ஆனால் அப்போதைய முதலமைச்சர் மக்கள் திலகம் எம்ஜிஆருக்கு இயக்குனர் பாலு மகேந்திரா மீது இணக்கம் இருந்ததால் இந்த பிரச்சனையை கண்டு கொள்ளாமல் விட்டு விட்டாராம்.

Also Read:VJ சித்ரா கொலையா.? தற்கொலையா.? காயங்களுடன் வெளியான புகைப்படத்தால் ஏற்பட்ட சந்தேகம்!

மரணமடைந்த சோபாவின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்படவில்லையாம் . எந்த போலீஸ் வழக்குகளும் பதிவிடப்படாமல் அவரின் உடல் எரிக்கப்பட்டிருக்கிறது. இவை அனைத்துமே பாலு மகேந்திரா தலைமையில் நடந்திருக்கிறது. அவர் ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தை இருக்கும் நிலையில் தன்னைவிட வயதில் சிறிய பெண்ணான சோபாவை காதலித்து திருமணம் செய்திருக்கிறார்.

இதற்கு சான்றாக சோபா மறைவிற்குப் பின் ரிலீசான மூடுபனி திரைப்படத்தின் டைட்டில் கார்டில் எனக்கு எல்லாமும் ஆக இருந்த என் மனைவி சோபாவுக்கு சமர்ப்பணம் என போட்டிருக்கிறார். மேலும் ஒரு பேட்டியில் எனக்கும் சோபாவுக்குமான உறவு மற்றும் அவருடைய மரணத்திற்கான காரணம் எனக்கு மட்டுமே தெரியும் அதை நானும் யாருக்கும் சொல்ல மாட்டேன் என்று சொல்லி இருக்கிறார்.

Also Read:சில்க் ஸ்மிதாவின் கடைசி கடிதம்.. மரணிக்கும் போதும் இவ்வளவு ரணமா?

- Advertisement -

Trending News