Connect with us
Cinemapettai

Cinemapettai

actress-Pratyuksha

Entertainment | பொழுதுபோக்கு

மறக்கமுடியாத 7 டாப் நடிகைகளின் தற்கொலை.. புன்னகை மன்னன் பாணியில் மரணித்த ப்ரத்யூக்‌ஷா

கஞ்சிக்கு கூட வழி இல்லாதவர்களும் எப்படியாவது வாழ்க்கையை போராடி வாழ வேண்டும் என்ற எண்ணத்துடன் இருக்கும்போது, சினிமாவின் உச்சம் பெற்ற பிரபலங்களாக இருப்பவர்கள் சிறிய பிரச்சனையைக் கூட சமாளிக்க முடியாமல் விபரீத முடிவை எடுப்பது அன்று முதல் இன்று வரை தொடர்கதையாக இருக்கிறது. அதிலும் புன்னகை மன்னன் படத்தின் பாணியில் தற்கொலை செய்துகொண்ட நடிகை ப்ரத்யூக்‌ஷாவின் மரணம் கோலிவுட்டில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

ஷோபா: தென்னிந்திய திரைப்பட நடிகையாக தமிழ் சினிமாவில் தட்டுங்கள் திறக்கப்படும் என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, அதன் பிறகு மலையாளத்தில் கதாநாயகியாக தோன்றிய இவரின் இயற்பெயர் மகாலட்சுமி.

இவர் தனது 17 ஆவது வயதில் நடித்த பசி என்ற படத்திற்காக தேசிய அளவில் சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்ற பெருமைக்குரியவர். அதன் பின் இயக்குனர் பாலுமகேந்திராவை திருமணம் செய்து கொண்ட இவர், தன்னுடைய 17-வது வயதிலேயே தற்கொலை செய்துகொண்டு ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினார். இவரைப் போன்றே இவரது தாயாரும் 1984-ல் தற்கொலை செய்து கொண்டார் என்பது பெரும் சோகம்.

Also Read: ரஜினி ஹீரோயிசம் காட்டாத 5 படங்கள்.. இன்று வரை பேசப்படும் முள்ளும் மலரும்

சுப்புலட்சுமி: ஷோபா இறந்த அதே ஆண்டான 1980ல் அவருடன் இணைந்து முள்ளும் மலரும், ஆறிலிருந்து அறுபது வரை படங்களில் நடித்து புகழ்பெற்ற படாபட் சுப்புலட்சுமி காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டார். இவர் எம்ஜிஆரின் அண்ணன் மகன் உடனான காதல் முறிவால் மனமுடைந்து விபரீத முடிவை எடுத்துவிட்டார். படங்களில் அவர் காட்டிய தைரியம் நிஜ வாழ்க்கையில் இல்லாமல் போனது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

லட்சுமி ஸ்ரீ: ஷோபா, சுப்புலட்சுமியை தொடர்ந்து அதே ஆண்டில் ரஜினியின் தங்கையாக தர்மயுத்தம், பைரவி படங்களில் நடித்து பிரபலமான நடிகை லட்சுமி ஸ்ரீ, திடீரென்று தற்கொலை செய்துகொண்டு கோலிவுட்டை அதிர்ச்சி அடைய செய்தார். இவரும் காதலனுடன் ஏற்பட்ட பிரச்சனையால் இந்த முடிவை எடுத்திருக்கிறார்.

சில்க் சுமிதா: சுமார் 456 படங்களில் நடித்து கவர்ச்சி நடிகையாக இளசுகளின் மனதை கவர்ந்து புகழேனியின் உச்சத்தில் இருந்த இவர், திடீரென்று 1996 ஆம் ஆண்டு தற்கொலை செய்துகொண்டு, திரையுலகில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தினார். இவரும் ஒரு தாடிக்காரன் உடன் நட்பில் இருந்து, கடைசியில் அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக தற்கொலை செய்து கொண்டார்.

Also Read: சிலுக்கை பார்த்து ஜொள்ளு விட்ட பிரபல இயக்குனர்.. ஆடையை நான் தான் போட்டு விடுவேன் என அடம்

விஜி: கேப்டன் விஜயகாந்த்திற்கு திருப்புமுனையாக அமைந்த சாட்சி படத்தில் கதாநாயகியாக நடித்தவர் கோழி கூவுது படத்தின் பிரபலம்  விஜி. அதன் பிறகு சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த விஜிக்கு திடீரென்று உடல்நல பிரச்சனை ஏற்பட்டு முதுகுத்தண்டில் ஆபரேஷன் நடந்தது. அப்போது அவருக்கும் அவருடைய காதலனுக்கும் பிரச்சனை ஏற்பட்டு பின்னர் பஞ்சாயத்து எல்லாம் நடந்து முடிந்த நிலையில், கடந்த 2000 ஆம் ஆண்டில் தற்கொலை செய்து கொண்டு விபரீத முடிவை தேடினார்.

ப்ரத்யூக்‌ஷா: தவசி படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான இவர், மீண்டும் விஜயகாந்துடன் சிம்மாசனம் படத்தில் இணைந்தார். பிறகு சத்யராஜ் உடன் சவுண்ட் பார்ட்டி படத்தில் நடித்த அந்த சமயத்தின் டாப் கதாநாயகியாக வலம் வந்தார். அப்போது சித்தார்த் என்பவரை காதலித்துக் கொண்டிருந்தார் ப்ரத்யூக்‌ஷா.

பின்னர் தெலுங்கானாவில் உள்ள குடியிருப்பில் இருவரும் தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, புன்னகை மன்னன் படத்தின் பாணியில் ப்ரத்யூக்‌ஷா மட்டும் உயிரிழந்தார். காதலன் சித்தார்த் பிழைத்துக் கொண்டார். இவருடைய மரணத்தில் பல மர்மங்கள் இருப்பதாக காதலன் சிறையிலும் அடைக்கப்பட்டார்.

Also Read: ஒவ்வொரு நாளும் நரக வேதனையில் இருக்கும் சிம்ரன்.. இப்படி ஒரு கஷ்டம் யாருக்கும் வரக்கூடாது

மோனல்: இடுப்பழகி சிம்ரனின் தங்கையாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான மோனல், அறிமுகமே விஜயின் பத்ரி படத்தில் என்ட்ரி கொடுத்தார். பின்னர் சமுத்திரம், பேசாத கண்ணும் பேசுமே போன்ற படத்தில் குணாலுடன் இணைந்து நடித்தார்.

சீக்கிரம் சினிமாவில் உச்சம்பெற்ற மோனல், கன்னட பட புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வீடு திரும்பியவர் தற்கொலை செய்து கொண்டார். இதற்கு பழைய நடன இயக்குனர் தான் காரணம் என சிம்ரன் பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.

இவ்வாறு இந்த 7 நடிகைகளும் பெரும்பாலும் திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனைகளாலும் காதலனுடன் ஏற்பட்ட சண்டை சச்சரவுகளால் தற்கொலை முடிவுக்கு வந்திருக்கின்றனர். இதெல்லாம் அவர்களால் சமாளிக்க கூடிய பிரச்சினை தான். ஆனால் அந்த தைரியம் கூட இல்லாமல் திறமை இருந்தும் வாழ்க்கையை முடித்துக் கொண்டு, தன்னுடைய குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் பெரும் ஏமாற்றத்தை தந்திருக்கின்றனர்.

Continue Reading
To Top