20 வருடங்களுக்கு பிறகு புதிய சீரியலில் நடிக்கும் மெட்டிஒலி சாந்தி.. அதுவும் எந்த சீரியல் தெரியுமா?

தமிழ் சினிமா ரசிகர்கள் திரைப்படங்களுக்கு எப்படி வரவேற்பு கொடுக்கிறார்களோ. அதை விட ஒரு மடங்கு அதிகமாகவே சீரியலுக்கு ஆதரவு கொடுக்கிறார்கள். அதிலும் குறிப்பாக குடும்பபாங்கான சீரியலுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

ஒரு காலத்தில் மெட்டிஒலி என்ற சீரியல் அனைத்து குடும்ப பெண்களின் மனதையும் கொள்ளை கொண்டது. அந்த அளவிற்கு அப்போது மெட்டிஒலி சிலர் மிகவும் பிரபலமாக இருந்தது. அதுவும் “அம்மி அம்மி அம்மி மிதித்து அருந்ததி முகம் பார்த்து” எனும் பாடலில் நடனமாடிய சாந்தியை அவ்வளவு எளிதில் யாராலும் மறந்துவிட முடியாது.

சாந்தி மெட்டிஒலி தவிர ரஜினி நடிப்பில் உருவான பாட்ஷா படத்தில் ஆட்டோக்காரன் பாடலுக்கு பின்னாடி நடனமாடி இருப்பார். அதுமட்டுமில்லாமல் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய் மற்றும் அஜீத் ஆகிய நடிகர்கள் படங்களில் நடனமாடியுள்ளார். கிட்டத்தட்ட தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் என மூன்று மொழிகளிலும் 3000 பாடல்களுக்கு மேல் நடனம் ஆடியுள்ளார்.

shanthi
shanthi

மெட்டி ஒலி சீரியல் 2002 ஆம் ஆண்டு ஒளிபரப்பானது. அதன் பிறகு பல வருடங்களாக சீரியலில் நடிக்காமல் இருந்த சாந்தி. தற்போது கண்ணான கண்ணே சீரியலில் நேற்று என்ட்ரி கொடுத்துள்ளார்.

பல வருடங்களுக்கு பிறகு சாந்தியை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியும் ஆனந்தமும் பெருகி கொண்டாடி வருகின்றனர். தற்போது சீரியலுக்கு பிரபலமான சன் டிவியில் மீண்டும் கண்ணான கண்ணே சீரியல் மூலம் நடிப்பது தனக்கு மகிழ்ச்சியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்