ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

முத்துவுக்கு சர்ப்ரைஸ் பண்ண போகும் மீனா.. வாய் அடைத்துப் போய் நிற்கும் ஒட்டுமொத்த குடும்பம்

Sirakadikkum Asai: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், சரியான நேரத்தில் 500 பூ மாலை வரவில்லை என்று அரசியல்வாதி முத்துவுக்கு போன் பண்ணி வாய்க்கு வந்தபடி பேசி விடுகிறார். இதனால் கோபமான முத்து, எப்படியாவது அந்த மாலையை அவரிடம் ஒப்படைத்து ஆக வேண்டும் என்று நாலா பக்கமும் தேடிக் கொண்டு வருகிறார்.

அதேபோல நண்பர்கள் அனைவருக்கும் அந்த வண்டி நம்பரை அனுப்பி தேட சொல்லி இருக்கிறார். இதனால் எல்லா நண்பர்களும் தெருத்தெருவாக போயி அந்த வண்டியை தேடி அலைகிறார்கள். அப்பொழுது முத்துவின் நண்பர் கண்ணுக்கு வண்டி தென்பட்டு விட்டது. உடனே முத்துக்கு ஃபோன் பண்ணி அந்த இடத்துக்கு வர சொல்லி விடுகிறார்.

முத்துவும் சரியான நேரத்தில் அங்கு போய் வண்டியை மடக்கி பிடித்து விடுகிறார். ஆனால் யார் பண்ணினது என்று முத்து அடித்து கேட்கும் போது ஒவ்வொருவரும் எதுவுமே சொல்லாமல் அங்கிருந்து தப்பித்து ஓடி விடுகிறார்கள்.

பிறகு மீனா, மாலை அனைத்தும் சரியாகத்தான் இருக்கிறது. நாம் அரசியல்வாதியிடம் போய் ஒப்படைத்து விடுவோம் என்று சொல்லி வண்டியை ரெண்டு பெரும் எடுத்துட்டு போகிறார்கள்.

அங்கே போனதும் அரசியல்வாதி, முத்து தான் எல்லா பிரச்சினைக்கும் காரணம் என்று அவரை தரைகுறைவாக பேசுகிறார். பிறகு நடந்த அனைத்து விஷயங்களையும் மீனா எடுத்துச் சொன்னதும் அரசியல்வாதி புரிந்து கொண்டு முத்துவுடன் சுமுகமான ஒரு உறவு முறையை ஏற்படுத்திக் கொள்கிறார். அத்துடன் பேசினபடி பணத்தையும் கொடுத்து எக்ஸ்ட்ராவாக முத்துவிடம் 5000 ரூபாயும் கொடுத்து விடுகிறார்.

அது மட்டும் இல்லாமல் உனக்கு இனி என்ன உதவி வேண்டும் என்றாலும் என்னிடம் தயங்காமல் கேளு என்று சொல்லி இந்த விஷயத்தை முடித்து விடுகிறார்கள். அதன் பின் மீனா, தோழிகள் உதவி பண்ணியதால் அவர்களை தேடி போய் வேலை பார்த்ததற்கான பணத்தை கொடுக்கிறார். அடுத்ததாக மீனா, முத்துவிற்கு தெரியாமல் கார் செட்டுக்கு போயி முத்துவின் நண்பரிடம் விசாரிக்கிறார்.

அதாவது செகண்ட் யூஸ் கார் ஏதாவது நல்லா இருக்கிறதா என்று போய் பார்ப்போம் அண்ணா என்கூட வாங்க என்று சொல்கிறார். அதற்கு முத்துவின் நண்பர் ஏற்கனவே ஒரு காரை பார்த்தபோது முத்துக்கு ரொம்ப பிடித்து போய்விட்டது என்று சொல்கிறார்.

உடனே மீனா அவருடைய நண்பரை கூட்டிட்டு போய் அந்த காருக்கு தேவையான அட்வான்ஸ் கொடுத்து முத்துவுக்கு சர்ப்ரைஸ் பண்ணுகிறார். இதை பார்த்ததும் முத்துவின் குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரும் வாய் அடைத்துப் போய் பார்க்கிறார்கள்.

- Advertisement -

Trending News