முத்துவின் பிறந்தநாளை சர்ப்ரைஸாக கொண்டாடும் மீனா.. வயித்தெரிச்சலில் கொந்தளிக்கும் விஜயா

Sirakadikkum Asai: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், மீனா மாமியாரிடம் போட்ட சபதத்தின் படி முத்து தாலி வாங்கிட்டு வருகிறார். சீட்டு பணத்தை பாதியில் வாங்கி மீனாவின் கௌரவத்தை அனைவரது முன்னாடியும் காப்பாற்றி விஜயா மூஞ்சியில் கரியை பூசி விடுகிறார். அதன் பின் முத்து தாலியே போட சொல்கிறார். அதற்கு மீனா இருக்கட்டும் நான் வேற பிளான் வைத்திருக்கிறேன் என்று சொல்கிறார்.

இதை பார்த்து வயிற்றெரிச்சல் பட்ட விஜயா, ரோகினிடம் முத்துவின் பணத்தால் தாலி வாங்கவில்லை. அவ்வளவு பணம் முத்து கார் ஓட்டி கிடைத்திருக்காது. ஆனால் மீனா பூக்கடை வைத்திருக்கிறாள் அதன் மூலம் தான் பணம் கிடைத்திருக்கிறது. அதை முத்துவிடம் கொடுத்து தாலி வாங்கி கொடுக்க சொல்லி இருக்கிறார். அந்த வகையில் ஒரு சாதாரண பூக்கடையில் வேலை பார்க்கும் மீனாவிற்கு இவ்வளவு கெத்து இருக்கிறது.

பார்லருக்கு ஓனராக இருக்கும் உனக்கு அதைவிட கெத்து இருக்க வேண்டும். அதனால அவளை விட கிராம் அதிகமாக வைத்து தாலி செயின், குண்டுமணி எல்லாத்தையும் வாங்கிட்டு வா என்று சொல்கிறார். அதற்கு ரோகிணி இன்னும் ஓரிரு மாதங்களில் தாலி பெருக்கி போட வேண்டும். அதனால அப்பொழுது வாங்கிடலாம் என்று ரோகிணி சமாளிக்கிறார்.

Also read: விஜயா மூஞ்சில் கரியை பூசிய முத்து.. ரோகிணி போல் பொய் பித்தலாட்டம் பண்ணும் மனோஜ்

ஆனால் விஜயா விடுவதாக இல்லை, இப்போ உங்க அப்பாவிடம் சொல்லி அவளை விட நகையை அதிகமாக போட்டு பணக்கார மருமகளாக மினுங்க வேண்டும் என்று சொல்கிறார். உடனே ரோகினி அப்பா பிசினஸ் விஷயமாக பிஸியாக இருக்கிறார் இப்பொழுது கேட்க முடியாது என்று சொல்கிறார். அதற்கு விஜயா உன் மாமா கிட்ட சொன்னா கிலோ கணக்குல நகையை வாங்கி கொடுப்பார் அவரிடம் கேளு என சொல்கிறார்.

இதை எல்லாம் ரோகிணி பார்லருக்கு வந்து அவரின் தோளிடம் சொல்கிறார். உடனே மாமா தானே கிலோ கணக்கில் மாட்டுக்கறி வாங்கி கொடுப்பார் என்று நக்கலாக பேசுகிறார். அந்த சமயத்தில் சுதாகர் பார்லருக்கு வந்து ரோகினியை மிரட்டி பணத்தை கேட்கிறார். ஆனால் ரோகிணி என்னிடம் இப்பொழுது பணம் இல்லை இன்னும் இரண்டு நாட்கள் ரெடி பண்ணி உனக்கு கொடுக்கிறேன் என்று சொல்லி அனுப்பி விடுகிறார்.

இதனை அடுத்து முத்து மற்றும் மீனா கோவிலுக்கு போகிறார்கள். அங்கே மீனாவின் குடும்பத்தில் உள்ளவர்கள் முத்துவுக்கு சர்ப்ரைஸ் ஆக புது டிரஸ் வாங்கி கொடுக்கிறார்கள். இது எல்லாமே மீனாவின் பிளான் தான். என்ன விசேஷம் என்று முத்து கேட்கிறார் அதற்கு எதுவும் சொல்லாமல் பூஜைக்கு தயாராகிறார்கள். அதாவது முத்துவின் பிறந்தநாள் என்பதால் ஒட்டுமொத்த குடும்பமும் அவருக்கு சர்ப்ரைஸ் பண்ணுகிறார்கள். அந்த இடத்திலேயே தாலியை மீனா போட்டுக் கொள்கிறார்.

Also read: ராஜி பற்றிய உண்மையை கோமதியிடம் கூறிய பாக்கியா.. கதிருக்கு திருமணத்தை பண்ணி வைக்கும் மீனா